மேலும் அறிய

Madurai AIIMS Chairman: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் அடுத்த தலைவர் இவர் தான்... அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு..!

மதுரையில் கடந்த 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படுவது குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய தலைவராக டாக்டர் பிரசாந்த் லவானியாவை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

மதுரையில் கடந்த 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படுவது குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இதற்கான இடமாக தோப்பூர் தேர்வு செய்யப்பட்டது. ரூ.1,264 கோடி மதிப்பிலான, சுமார் 201.75 ஏக்கர் நிலத்தில் அமையவுள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தலைவர் கட்டோச் பதவி வகித்து வந்தார். இதனைத் தொடர்ந்து கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வி.என் நரம்பியல் ஆராய்ச்சி குழு தலைவராக உள்ள நாகராஜன் வெங்கடராமன் நியமனம் செய்யப்பட்டார். ஆனால் அவர் உடல்நலக்குறைவால் கடந்த ஜனவரி 13 ஆம் தேதி காலமானார். அவரது மறைவை நாகராஜனின் மருமகனும்,  ஐ.ஏ.எஸ் அதிகாரியும், கூட்டுறவுத்துறை செயலாளருமான ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

இந்நிலையில் காலியாக உள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய தலைவராக டாக்டர் பிரசாந்த் லவானியாவை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இவர் உத்தரப்பிரதேசத்தின் சரோஜினி நாயுடு மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. அதேசமயம் சில தினங்களுக்கு முன்பு, எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் 2024 ஆம் ஆண்டு தொடங்கி 2018 ஆம் ஆண்டு தான் முடிவடையும் என ஜப்பான் நிறுவனம் தெரிவித்ததாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருந்தார். ஆனால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் வகுப்புகள் நடந்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Bus: இனி ஹாப்பி! அரசு பேருந்துகளில் இனி 3 மாசத்துக்கு முன்பே புக்கிங் - அரசு அதிரடி
TN Bus: இனி ஹாப்பி! அரசு பேருந்துகளில் இனி 3 மாசத்துக்கு முன்பே புக்கிங் - அரசு அதிரடி
Udhayanithi:
Udhayanithi: "ஆமா.. நாங்க விஷக்காளான்தான்" EPS சொன்னதை ஒப்புக்கொண்ட உதயநிதி - ஏன்?
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
Tamilnadu Roundup: மத்திய அரசு மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு! தஞ்சையில் விடுமுறை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: மத்திய அரசு மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு! தஞ்சையில் விடுமுறை - தமிழகத்தில் இதுவரை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Bus: இனி ஹாப்பி! அரசு பேருந்துகளில் இனி 3 மாசத்துக்கு முன்பே புக்கிங் - அரசு அதிரடி
TN Bus: இனி ஹாப்பி! அரசு பேருந்துகளில் இனி 3 மாசத்துக்கு முன்பே புக்கிங் - அரசு அதிரடி
Udhayanithi:
Udhayanithi: "ஆமா.. நாங்க விஷக்காளான்தான்" EPS சொன்னதை ஒப்புக்கொண்ட உதயநிதி - ஏன்?
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
Tamilnadu Roundup: மத்திய அரசு மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு! தஞ்சையில் விடுமுறை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: மத்திய அரசு மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு! தஞ்சையில் விடுமுறை - தமிழகத்தில் இதுவரை
Nayanthara:
Nayanthara: "மிருகங்கள் மீதான போர்" போஸ்டரிலே தனுஷை தாக்குகிறாரா நயன்தாரா?
Kanguva Box Office: அவ்வளவுதான் 1000 கோடி! இருங்க பாய் மோடில் கங்குவா வசூல் - இவ்வளவா?
Kanguva Box Office: அவ்வளவுதான் 1000 கோடி! இருங்க பாய் மோடில் கங்குவா வசூல் - இவ்வளவா?
Breaking News LIVE 18th NOV 2024: மாநிலங்களுக்கு வரிப்பகிர்வு 50 சதவீதமாக இருக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Breaking News LIVE 18th NOV 2024: மாநிலங்களுக்கு வரிப்பகிர்வு 50 சதவீதமாக இருக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Embed widget