மேலும் அறிய

LTTE Prabhakaran: ‘அக்கிரமத்த கண்டு நாம தான் பொங்கி எழனும், இதுக்காக தனியா வருமா’ பிரபாகரனின் 67வது பிறந்தநாள்..!

’தமிழர்களுக்கு ஆதரவாகதான் பிரபாகரன் ஆயுதங்களை கையிலெடுத்தாரே தவிர, அவர் ஒருபோதும் சிங்கள மக்களை எதிரியாக கருதியதுமில்லை, அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்தி கொன்றழிக்க வேண்டும் என்று நினைத்ததும் இல்லை’

பிரபாகரன் இறந்துவிட்டார், போரில் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டார், அவர் இல்லாமல் போய்விட்டார் என்று ஈழத்தமிழர்களாலோ, தமிழ்நாட்டு தமிழர்களாலோ இன்னுமும் நம்ப முடியவில்லை. அது கனவாக இருக்காதா ? புரளியாக இருக்காதா ? பொய்யாக இருக்காதா என நாளுக்கு நாள் ஏங்கித் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.LTTE Prabhakaran: ‘அக்கிரமத்த கண்டு நாம தான் பொங்கி எழனும், இதுக்காக தனியா வருமா’ பிரபாகரனின் 67வது பிறந்தநாள்..!

அதனால்தான், அவர் இறந்தபோனதாக சொல்லப்பட்ட நாளை அவர்கள் மறந்தே போய்விட்டனர். தமிழர்கள் நினைவில் இருப்பதெல்லாம் பிரபாகரனின் பிறந்தநாள் மட்டும்தான். தனி மனிதாக ஒரு இயக்கத்தை கட்டியெழுப்பி, சர்வ வல்லமை பொருந்திய அரசாங்கத்தையே எதிர்த்து நின்று போராடி, பல நேரங்களில் அவர்களை மண்டியிட வைத்த மானத் தமிழர் அவர்.LTTE Prabhakaran: ‘அக்கிரமத்த கண்டு நாம தான் பொங்கி எழனும், இதுக்காக தனியா வருமா’ பிரபாகரனின் 67வது பிறந்தநாள்..!

ஈழத் தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக, அடிமைகளாக நடத்தி, அவர்கள் மீது வன்முறையை ஏவிவிட்டு தாக்குதல் நடத்தி, துடிக்க துடிக்க கொன்ற இலங்கை அரசின் பயங்கரவாதத்தை கண்டு, பொங்கி எழுந்து 28 பேருடன் வன்னிக்காட்டுக்குள் போன பிரபாகரன், சில வருடங்களிலேயே லட்சம் பேரை கொண்ட ஒரு பெரும் ராணுவ படையை உருவாக்கினார். இந்த படை இலங்கை அரசுக்கு மட்டுமல்ல, இலங்கைக்கு உதவிய அத்தனை நாடுகளுக்கும் சிம்ப சொப்பனமாக இருந்தது என்பது வரலாறு.LTTE Prabhakaran: ‘அக்கிரமத்த கண்டு நாம தான் பொங்கி எழனும், இதுக்காக தனியா வருமா’ பிரபாகரனின் 67வது பிறந்தநாள்..!

நான்கு புறங்களில் இருந்தும் தாக்குதல் நடந்த எந்த நேரத்திலும் வாய்ப்பிருந்த நிலையில் கூட, தனது புலிகளை வைத்து விமான படையையும், கப்பல் படையையும் உருவாக்கியவர் பிரபாகரன். அதனால்தான், ராஜேந்திர சோழனுக்கு இணையாக, சேரன் செங்குட்டுவனுக்கு நிகராக தமிழர்களால் கொண்டாடப்படுகிறார் அவர்.

குறிப்பாக, மறைந்திருந்து தாக்குதல் நடத்தி எதிரிப் படையை அழித்தொழிக்கும் ‘கொரில்லா’ படையை புலிகளில் உருவாக்கியவர் பிரபாகரன். மாவோ, பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா போன்றோர் கொரில்லா தாக்குதலுக்கு உலக அரங்கில் பெயர்போனவர்கள். ஆனால், எந்த உதவியும் இன்றி, பல நாடுகள் ஒன்று சேர்ந்து புலிகளை அழிக்க நினைக்கும்போது, தாங்களாகவே, தன்னந்தனியாக முயன்று, ஒரு சுயம்பு என கொரில்லா படையை உருவாக்கி காட்டியவர் பிரபாகரன். எதிரிகள், புலிகளின் கொரில்லா படையை நினைத்தாலே, பின்னங்கால் பிடரியில் பட ஓடி ஒளிவார்கள்.LTTE Prabhakaran: ‘அக்கிரமத்த கண்டு நாம தான் பொங்கி எழனும், இதுக்காக தனியா வருமா’ பிரபாகரனின் 67வது பிறந்தநாள்..!

’நான் கல்லூரி காணாத கிழவன்’ என்று பெரியார் சொல்லுவார். ஆனால், பெரியாரின் பகுத்தறிவு கருத்துகள் ஒரு பல்கலைக்கழகத்தையே உருவாக்கும் அளவுக்கு வலுவானவை. அதேபோன்றுதான், போர் உத்திகளை வகுத்ததிலும், திட்டமிடுதலிலும் எந்த பயிற்சியும் இல்லாத பிரபாகரன், அதில் தலைசிறந்தவராக இருந்தார்.

பிரபாகரனையும் அவரது இயக்கமான விடுதலை புலிகளையும் பயங்கரவாதிகள் என இலங்கை அரசு சித்தரித்து, உலக நாடுகளையும் நம்ப வைத்தது. ஆனால், பிரபாகரன் பயங்கரவாதி அல்ல அவர் தீவிரவாதி. ஈழ விடுதலை, தன் மக்களுக்கு சுதந்திரம் என்று தான் கொண்ட கொள்கையில் தீவிரமாக இருந்த தீவரவாதி அவர். தந்தை செல்வா போல, அமைதி வழியில் போராடினால், அடியும், உதையும் தான் கிடைக்கும் என்பதை அறிந்து,  அதற்கு எதிர் வழியான யுத்த வழியை தேர்ந்தெடுத்தவர்.  யுத்தமும், யுத்த களமும் தமிழர்களுக்கு ஒன்றும் புதிதல்ல புறநானூறு காலத்தில் இருந்தே யுத்தங்கள் தமிழரின் ரத்தங்களில் ஊறியவைதான்.LTTE Prabhakaran: ‘அக்கிரமத்த கண்டு நாம தான் பொங்கி எழனும், இதுக்காக தனியா வருமா’ பிரபாகரனின் 67வது பிறந்தநாள்..!

தமிழர்களுக்கு ஆதரவாகதான் பிரபாகரன் ஆயுதங்களை கையிலெடுத்தாரே தவிர, அவர் ஒருபோதும் சிங்கள மக்களை எதிரியாக கருதியதுமில்லை, அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை கொன்றழிக்க வேண்டும் என்று நினைத்ததும் இல்லை என்று அவர் படைத் தளபதி கிட்டுவே சொல்லியிருக்கிறார்.

உலகில் பல்வேறு விடுதலை இயக்கங்கள் இருந்தாலும், எந்த விடுதலை இயக்கத்திலும் வான்படையோ, கடற்படையோ இருந்ததில்லை. ஆனால், பிரபாகரன் தங்கள் மக்களின் விடுதலைக்கு இவை இரண்டும் அத்தியாவசியம் என்று உணர்ந்ததனால், வான் படையையும், கடற்படையையும் தானே நிர்மாணித்தார். வன்னிகாடுகளில் இருந்து பறந்து சென்று கொழும்பு விமான படைதளத்தில் குண்டுகளை வீசி எறிந்துவிட்டு, மீண்டும் வன்னி காடுகளுக்கே திரும்பியது புலிகளின் விமானம். அப்போதுதான், இலங்கை அரசு அதிர்ந்தது, உலகம் வியந்தது. காடுகளுக்குள் இருந்துக்கொண்டு எப்படி விமானத்தை கட்டுமானம் செய்தார்கள் என்று மண்டைகளை பிய்த்துக்கொண்டார்கள்.

யுத்த களமே கொல்வதற்கும் எதிரிப்படைகளை அழிப்பதற்கும்தான் என்று இருந்தாலும் கூட, போரில் கூட விதிகளை மீறக்கூடாது என்று புலிகளுக்கு கட்டளையிட்டு அதை பின்பற்ற சொன்னவர் பிரபாகரன். ரசாயண பொருட்களை கொண்டு இலங்கை படையினர் மீது தாக்குதல் நடத்தலாம் என்று ஒருவர் யோசனை சொன்னபோது, அது சர்வதேச போர் விதிகளுக்கு முரணானது என மறுத்தவர் அவர் என கொளத்தூர் மணியே ஒரு நேர்காணலில் சொல்லியிருப்பார்.LTTE Prabhakaran: ‘அக்கிரமத்த கண்டு நாம தான் பொங்கி எழனும், இதுக்காக தனியா வருமா’ பிரபாகரனின் 67வது பிறந்தநாள்..!

விடுதலை புலிகளில் - தரைபுலிகள், பெண் புலிகள், கடற்புலிகள், ஈர் ஊடக படையணி, வான் புலிகள், கரும்புலிகள், வேவு புலிகள், விடுதலை புலிகளின் பொறியியல் பிரிவு என பல படையணிகளை கட்டமைத்து களம் கண்டவர்.  தன்னாட்சி, மரபு வழி தாயகம், தமிழ் தேசியம், இயக்க ஒழுக்கம், சாதி பேதமற்ற சமூகம், சம பெண் உரிமைகள், சமய சார்பின்மை, தனித்துவமான சம உடமை என புலிகளின் கொள்கைகளை கட்டியெழுப்பியவர். தேர்தலில் பங்குகொள்ளாத அரசியல் போரையும்,  ஆயுதப்போரையும் ஒரே நேரத்தில் ஒருமித்து செய்த ஆற்றல்மிக்கவர் அறியப்படுபவர் பிரபாகரன்.

ஒரு தனி மனிதரால் இதுவெல்லாம் சாத்தியமாயிற்று என்று எண்ணும்போது பிரபாகரனின் தலைமை பண்பு எப்பேர்பட்டது என்பது விளங்கும். இப்படி தமிழ் ஈழ விடுதலைக்காக கடைசி வரை போராடிய வீரத் தலைவன் மறைந்துவிட்டார் என்பதை ஒருகாலும் தமிழர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.  ‘அக்கிரமத்தை கண்டு பொங்கி எழுகிற அத்தனை பேரும் சாமிதான்’ இதுக்காக தனியா வருமா..?’ என்று நந்தா படத்தில் ராஜ்கிரன் சூர்யாவிடம் கேட்பாரே அப்படி கேட்டு, தன் மக்களுக்காக பொங்கி எழுந்தவர்தான் பிரபாகரன்.LTTE Prabhakaran: ‘அக்கிரமத்த கண்டு நாம தான் பொங்கி எழனும், இதுக்காக தனியா வருமா’ பிரபாகரனின் 67வது பிறந்தநாள்..!

பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார் தக்க சமயத்தில் ஒருநாள் அவர் உலகிற்கு தோன்றுவார் என்று தமிழ் இயக்கங்கள் சொல்லிவருவது பலித்துவிட வேண்டும் என்பதுதான் உலக தமிழர்களின் கனவு. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget