![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Rain Alert: மிக்ஜாமில் இருந்தே இன்னும் மீளல.. அதுக்குள்ள அடுத்ததா? வானிலை ஆய்வு மையம் கொடுத்த ஷாக்!
இந்த வாரத்தின் தொடக்கித்தில் மிக்ஜாம் புயலினால் ஒட்டுமொத்த வட தமிழ்நாடும் மொத்தமாக ஸ்தம்பித்தது.
![Rain Alert: மிக்ஜாமில் இருந்தே இன்னும் மீளல.. அதுக்குள்ள அடுத்ததா? வானிலை ஆய்வு மையம் கொடுத்த ஷாக்! Low Pressure Area Forming Over Southeast Arabian Sea During Next 24 Hours - Met Office Rain Alert: மிக்ஜாமில் இருந்தே இன்னும் மீளல.. அதுக்குள்ள அடுத்ததா? வானிலை ஆய்வு மையம் கொடுத்த ஷாக்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/06/8211f30166aab75f2f8337192ee9ddf01701841992322737_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தென்கிழக்கு அரபிக்கடலில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வாரத்தின் தொடக்கித்தில் மிக்ஜாம் புயலினால் ஒட்டுமொத்த வட தமிழ்நாடும் மொத்தமாக ஸ்தம்பித்தது. இந்நிலையில் தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள இந்த அறிவிப்பினால் கேரளா மற்றும் கன்னியாகுமரிக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என கூறப்படுகின்றது.
இது தொடர்பாக திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “தென்கிழக்கு அரேபிய கடல் மற்றும் அதை ஒட்டிய மாலத்தீவு பகுதியில் சராசரி கடல் மட்டத்திலிருந்து 4.5 கிமீ உயரத்தில் சூறாவளி சுழற்சி நீடிக்கிறது. இதன் தாக்கத்தால் அடுத்த 24 மணி நேரத்தில் அதே பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது” என கூறப்பட்டுள்ளது.
https://t.co/MF5lMQtkLR pic.twitter.com/LIhrEebzuw
— Dr V K Mini (@Mini1Vk) December 8, 2023
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலால் தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு,காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் கடுமையான கனமழை பெய்தது. இதில் சென்னை மாவட்டம் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் நிலைகுலைந்து போனது. 24 மணி நேரமாக தொடர்ச்சியாக மழை பெய்ததால் தமிழ்நாடு அரசாலும் நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள முடியவில்லை. அதற்குள் சென்னையை வெள்ளம் சூழந்தது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி தமிழ்நாடு அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாநகராட்சி ஊழியர்கள், காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர், தன்னார்வலர்கள் என அனைவரும் களத்தில் இறங்கி வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டதோடு, நிவாரண முகாமுக்கு அழைத்து சென்றனர். நிலைமை சீராகி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார்.
"PM Modi has approved the first urban flood mitigation project of Rs. 561.29 crore for ‘Integrated Urban Flood Management activities for Chennai Basin Project’ under the National Disaster Mitigation Fund (NDMF), which also includes Central assistance of Rs. 500 crore. This… pic.twitter.com/z2I84UoEXV
— ANI (@ANI) December 7, 2023
இதனைத் தொடர்ந்து புயல் பாதிப்பை சரி செய்ய மத்திய அரசு இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த கடிதமானது திமுக எம்.பி., டி.ஆர்.பாலு மூலமாக பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் வெள்ளச் சேதம் குறித்து பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். இந்நிலையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை சரி செய்ய தமிழ்நாட்டிற்கு முதற்கட்டமாக ரூ.450 கோடி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதேபோல் சென்னையில் வெள்ள மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த ரூ. 561.29 கோடி வழங்க மத்திய அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டிருந்தார். கனமழையால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மத்திய சார்பில் வெள்ள மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)