மேலும் அறிய

Tamilnadu Lockdown | தமிழகத்தில் 7-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டில் ஊரடங்கு வரும் ஜூன் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக வரும் 31-ஆம் தேதி வரை எந்த தளர்வும் இல்லாத முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மேலும் ஒரு வாரத்திற்கு (7-ஆம் தேதி) வரை எந்த தளர்வும் இல்லாத முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

இதுதொடர்பாக, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது,

" கடந்த 22-5-2021 அன்று அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், முன்னதாக மருத்துவ வல்லுநர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளைக் கேட்டறிந்தும், ஆலோசனை மற்றும் கருத்துகளைப் பரிசீலித்தும், கொரோனா பெருந்தொற்று நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த, கடந்த 24-5-2021 முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஊரடங்கு வரும் 31-5-2021 அன்று காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில், நோய்த் தொற்றின் தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும், நோய்த் தொற்று பரவாமல் தடுத்து, மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கத்திலும், இந்த முழு ஊரடங்கு 7-6-2021 காலை 6-00 மணி வரை, மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளேன்.

Tamilnadu Lockdown | தமிழகத்தில் 7-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - தமிழக அரசு அறிவிப்பு

எனினும், பொதுமக்கள் அத்தியாவசிய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தில், அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறையில் இருந்துவரும் நடமாடும் காய்கறி / பழங்கள் விற்பனை தொடர்புடைய துறைகள் மூலம் தொடர்ந்து நடைபெறும். மேலும், மளிகைப் பொருட்களை அந்தந்தப் 1

பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகளால் வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன், குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று விற்பளை செய்யவும், ஆன்லைன் மற்றும் தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர் கோரும் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கவும் காலை 7-00 மணி முதல் மாலை 6-00 மணிவரை அனுமதிக்கப்படுகிறது.

இது தவிர, பொது மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில், 13 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம், வரும் ஜூன் மாதம் முதல் வழங்கிட, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

Tamilnadu Lockdown | தமிழகத்தில் 7-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, பொது மக்களின் நலன் கருதி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும் கூட்டங்களையும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்,

மேலும், கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக் கவசம் அணிவது. சமூக இடைவெளியினை கடைபிடிப்பது. கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்றவும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை / சிகிச்சை பெறவும் கேட்டுக்கொள்கிறேன்.

மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

விமான நிலைய பார்சல்களை ஆட்டையை போட்ட துப்புரவுத் தொழிலாளி !! ரூ.3 லட்சம் மோசடி பெண் கைது
விமான நிலைய பார்சல்களை ஆட்டையை போட்ட துப்புரவுத் தொழிலாளி !! ரூ.3 லட்சம் மோசடி பெண் கைது
பள்ளி தோழியுடன் அந்தரங்க உறவு !! செல்போனில் வீடியோ காட்சிகள் - மிரட்டிய இளைஞர்
பள்ளி தோழியுடன் அந்தரங்க உறவு !! செல்போனில் வீடியோ காட்சிகள் - மிரட்டிய இளைஞர்
மழை வரப்போகுது... மரக்காணத்தில் களமிறங்கிய கலெக்டர்! ஏரி முதல் கடற்கரை வரை ஆய்வு
மழை வரப்போகுது... மரக்காணத்தில் களமிறங்கிய கலெக்டர்! ஏரி முதல் கடற்கரை வரை ஆய்வு
சென்னை மக்களுக்கு அதிர்ச்சி !! ஏரி நீரில் பாக்டீரியா - பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு
சென்னை மக்களுக்கு அதிர்ச்சி !! ஏரி நீரில் பாக்டீரியா - பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Embed widget