மேலும் அறிய

உயிர்காக்கும் தெய்வங்கள்...தேசிய மருத்துவர்கள் தினத்துக்கு தலைவர்கள் வாழ்த்து!

National Doctors Day 2026: எக்ஸ் தள பதிவில், “மனித உயிர்களைக் காக்கும் உன்னதப் பணியில் இரவு பகல் பாராது அயராது பணியாற்றும் அனைத்து மருத்துவர்களுக்கும் தேசிய மருத்துவர்கள் தினமான இந்நாளில் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

மனித உயிர்களை காக்கும் மகத்தான பணிக்கு நன்றி சொல்லும் நாள் இன்று ....

உலகில் கடவுளுக்கு இணையாக மதிக்கப்படும் ஒரு நபர் உண்டு என்றால், அவர் மருத்துவராகத்தான் இருப்பார்கள். அவர்களைப் போற்றி பாராட்டும் விதமாக ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதி இந்தியாவில் மருத்துவர்கள் தினம் (Doctor's Day)   கொண்டாடப்படுகிறது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ஆம் தேதி தேசிய மருத்துவர் தினம் (National Doctors' Day) கொண்டாடப்படுகிறது. புகழ்பெற்ற மருத்துவர் மற்றும்  மேற்கு வங்கத்தின் 2வது  முன்னாள் முதலமைச்சருமான டாக்டர் பிதான் சந்திர ராய் (Dr. B.C. Roy) அவர்களின் பிறந்தநாளைக் சிறப்பிக்கும் வகையில் இந்நாள் கொண்டாடப்படுகிறது. 

இவருடைய பிறந்தநாளும் மறைந்த நாளும் ஜூலை 1 என்பதால், இந்திய அரசு இவரைப் பெருமைப்படுத்த இந்த நாளைத் தேர்ந்தெடுத்தது.

தேசிய மருத்துவர்கள் தினம் (National Doctors' Day) இந்தியாவெங்கும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தனது சமூக வலைத்தளங்களில் அரசியல் தலைவர் வாழ்த்து தெருவிக்கின்றனர் .

முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து!

எக்ஸ் தள பதிவில், “மனித உயிர்களைக் காக்கும் உன்னதப் பணியில் இரவு பகல் பாராது அயராது பணியாற்றும் அனைத்து மருத்துவர்களுக்கும் தேசிய மருத்துவர்கள் தினமான இந்நாளில் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

மருத்துவ சிகிச்சை பெறுபவர்களின் முகத்தில் புன்னகையையும், அவர்கள் குடும்பத்தில் நம்பிக்கையையும் விதைக்கும் மருத்துவர்கள் மகிழ்ச்சியும் மனநிறைவும் பெற்று, தொடர்ந்து மக்கள் சேவை ஆற்றிட இந்நாளில் வாழ்த்துகிறேன் என்று  முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து!

பிரதமர் நரேந்திர மோடி 
அர்ப்பணிப்புமிக்க மருத்துவர்களின் கடின உழைப்பு, இரக்கம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை இந்தியாவின் சுகாதார அமைப்பின் முதுகெலும்பாகும். மிகவும் சவாலான சூழ்நிலையிலும் அவர்கள் செய்யும் அயராத உழைப்பும்  எண்ணற்ற மக்களின் நம்பிக்கையையும் நன்றியையும் பெற்றுத் தந்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 
 "மக்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை வழங்குவதிலும், நோய்களைக் குணப்படுத்துவதிலும் மருத்துவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தியாகம் ஆரோக்கியமான சமுதாயத்திற்கு வழிவகுக்கிறது" என்று வாழ்த்தியுள்ளார்.

பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்
மருத்துவப் பின்புலம் கொண்ட தலைவரான இவரும் மருத்துவர் தினத்தை முன்னிட்டுத் தனது வாழ்த்துச் செய்தியைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

"மருந்துகள் நோயைக் குணப்படுத்தலாம், ஆனால் மருத்துவர்கள் மட்டுமே மனிதர்களைக் குணப்படுத்த முடியும்." என்று அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர் .

Advertisement

தலைப்பு செய்திகள்

7 மாதங்களில் 10,309 உயிர்கள் பலி.. தமிழகத்தில் அரங்கேறும் பயங்கரம்! பின்னணி என்ன?
7 மாதங்களில் 10,309 உயிர்கள் பலி.. தமிழகத்தில் அரங்கேறும் பயங்கரம்! பின்னணி என்ன?
தொகுதி மறுவரையறை நாடகம்: முதல்வர் விஜய்யின் நிலைப்பாடு அம்பலம் - டிடிவி தினகரன்
தொகுதி மறுவரையறை நாடகம்: முதல்வர் விஜய்யின் நிலைப்பாடு அம்பலம் - டிடிவி தினகரன்
Chennai Bengaluru Bullet Train: 350 கி.மீ SPEED... வெறும் 1.13 மணி நேரம்.! சென்னை- பெங்களூர்- அமராவதி வழியாக புல்லட் ரயில்.! அசத்தல் PLAN
350 கி.மீ SPEED... வெறும் 1.13 மணி நேரம்.! சென்னை- பெங்களூர்- அமராவதி வழியாக புல்லட் ரயில்.! அசத்தல் PLAN
தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று பலத்த காற்றுடன் மழை பெய்யும்? - வானிலை கொடுத்த வார்னிங்
தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று பலத்த காற்றுடன் மழை பெய்யும்? - வானிலை கொடுத்த வார்னிங்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
Chennai Bengaluru Bullet Train: 350 கி.மீ SPEED... வெறும் 1.13 மணி நேரம்.! சென்னை- பெங்களூர்- அமராவதி வழியாக புல்லட் ரயில்.! அசத்தல் PLAN
350 கி.மீ SPEED... வெறும் 1.13 மணி நேரம்.! சென்னை- பெங்களூர்- அமராவதி வழியாக புல்லட் ரயில்.! அசத்தல் PLAN
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Embed widget