மூழ்கிய பாலம், ஓசூரில் மலைபோல் உருவாகிய ரசாயன நுரை: விரைந்த தீயணைப்புத் துறை
kelavarapalli Dam Foam: கனமழை காரணமாக கெலவரப்பள்ளி அணையிலிருந்து, நீர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் மலை போல் ரசாயன நுரையானது உருவாகியுள்ளது.
ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் 4,160 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது, இதனால் தரைப்பாலம் மூழ்கி உருவாகியுள்ள நிலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
கெலவரப்பள்ளி அணை நீர் வெளியேற்றம்:
கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மாநில எல்லை பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து, தென்பெண்ணை ஆற்றில் அதிகப்படியாக வினாடிக்கு 4,160 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால், ஓசூர் - நந்திமங்கலம் சாலையில் தட்டகானப்பள்ளி அருகே உள்ள ஆற்றின் தரைப்பாலம் நீரில் முழுமையாக மூழ்கி உள்ளது.
ரசாயன நுரைகள்
தரைப்பாலத்தின் மீது 5 அடி உயரத்திற்கு செல்லும் ஆற்று நீரில் அதிகப்படியான ரசாயன நுரைகள் பொங்கி, ராட்சத நுரைகள் பல அடி உயரத்திற்கு தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ராட்ச நுரையில் சிப்காட் குடிநீர் வடிகால் வாரியத்தில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் செல்பி எடுத்தும், நுரையில் விளையாடி வருகின்றனர்
தட்டனப்பள்ளி, சித்தனப்பள்ளி, தேவிசெட்டிப்பள்ளி உள்ளிட்ட 10க்கும் அதிகமான கிராம மக்கள் சென்று வந்த பொது போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருப்பதால் 15 கிமீ தூரம் சுற்றிதான் ஓசூருக்கு வர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
Also Read: கதி கலங்க வைக்கும் டானா புயல்.. களத்தில் இறங்கிய கடற்படை.. அத்தியாவசிய பொருள்கள் ரெடி!
வெள்ள அபாய எச்சரிக்கை:
துர்நாற்றம் வீசி ராட்சத நுரைகள் ஆற்றில் செல்லும் நிலையில் அதிகப்படியான நீர் ஆற்றில் ஆர்ப்பரித்து செல்வதால் 7 வது நாளாக அணை ஒட்டிய கிராமங்கள் ஆற்றங்கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை வருவாய்த்துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது..
1000 கனஅடிகளை கடந்தாலே வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும் நிலையில் அணைக்கு வரத்தாக உள்ள 4160 கனஅடிநீர், அணையின் பாதுகாப்பை கருதி முழுமையாக தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
தரைப்பாலத்தின் மீது சுமார் 30 அடி உயரத்திற்கு தேங்கி உள்ள ராட்சத நுரைகளை அகற்ற தீயணைப்பு துறையினர் வருகை புரிந்து, தண்ணீர் பீய்ச்சி அடித்து அகற்றும் பணியில் இறங்கினர். மேலும், பலர் நுரைக் காட்சிகளை ஆச்சரியத்துடன் பார்த்தும், செல்ஃபி எடுத்தும் செல்கின்றனர்.
TVK Conference: விஜய் மாநாட்டின் ஏற்பாடுகள்: சூசகமாக விஜய் உணர்த்திய 2 குறிப்புகள்