மேலும் அறிய

Krishna Jayanthi 2024: கிருஷ்ண ஜெயந்தி - சேலம் பூம்புகார் விற்பனை நிலையத்தில் "கிருஷ்ண தரிசனம்" கண்காட்சி

குறைந்தபட்சம் ரூ. 100 முதல் ரூ. 40,000 விலை வரை 5,000 கிருஷ்ணர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சி கழகமான பூம்புகார் விற்பனை நிலையத்தில் 'கிருஷ்ணர் தரிசனம் திருவிழா' என்ற பெயரில் ஆண்டுதோறும் கிருஷ்ணர் ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணர் சிலைகள் கண்காட்சி மற்றும் விற்பனை நடத்தி வருகிறது. இதின் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சி கழகம் பூம்புகார் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.

Krishna Jayanthi 2024: கிருஷ்ண ஜெயந்தி - சேலம் பூம்புகார் விற்பனை நிலையத்தில்

கிருஷ்ண தரிசனம் திருவிழா:

இதில் பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு இவைகளை கைவினை கலைகள் மூலம் உருவாக்கப்படும் கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரமாகவும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் அவர்களுக்கு பல விருதுகளை கொடுத்து ஊக்குவித்து மற்றும் கைவினை கலைகள் அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் வகையில் செயல்பட்டு வருகிறது.

கைவினைக் கலைஞர்கள், பொது மக்களும் பயன்பெறும் வகையில் பண்டிகை காலங்களிலும் மற்றும் விழா காலங்களிலும் பல கண்காட்சிகளை சேலத்தில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையம் நடத்தி வருகிறது. இந்த வகையில் இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு "கிருஷ்ண தரிசனம் திருவிழா" என்ற பெயரில் சிறப்பு கண்காட்சி 19.08.2024 முதல் 30.08.2024 வரை நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் சிறப்பு அம்சமாக கிருஷ்ணர் திருவுருவம் கொண்ட களிமண், காகிதக்குள், மார்பில் துகள் பொம்மைகள், பஞ்சலோகம், பித்தளை, பருப்பு உலோக சிலைகள், தஞ்சாவூர் மர சிலைகள் மற்றும் நூக்க மர உட் பதிப்பு ஓவியங்கள் போன்ற எண்ணற்ற வகையான கிருஷ்ண சிலைகள் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.

விதவிதமான கிருஷ்ணர்கள்:

காகிதக்கூழ் மற்றும் களிமண்களால் ஆன குழந்தை கிருஷ்ணர், தவழும் கிருஷ்ணர், விடோபா கிருஷ்ணர், வெண்ணை கிருஷ்ணர், பாமா ருக்மணி கிருஷ்ணர், லட்டு கிருஷ்ணர், ராதா கிருஷ்ணர், பசு மாடு கிருஷ்ணர், தொட்டில் கிருஷ்ணர், ஊஞ்சல் கிருஷ்ணர், ஆலிலை கிருஷ்ணர், ராதை அலங்கார செட், 1 அடி முதல் 3 அடி வரை நின்ற கோலத்தில் கிருஷ்ணர், சுவரில் பொருத்தக்கூடிய உலோகம் மற்றும் நூக்க மர கிருஷ்ணர், ராதை கிருஷ்ணர், வெண்மர ராதா கிருஷ்ணர், சந்தனமர கிருஷ்ணர், மார்பில் துகில் கிருஷ்ணர், தஞ்சாவூர் ஓவிய கிருஷ்ணர், துணியில் வரையப்பட்ட ஓவிய கிருஷ்ணர் என பல வகையான கிருஷ்ணர் சிலைகள் மற்றும் கிருஷ்ணர் ஓவியங்கள் விற்பனைக்கு உள்ளது. மேலும், பூஜை பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

Krishna Jayanthi 2024: கிருஷ்ண ஜெயந்தி - சேலம் பூம்புகார் விற்பனை நிலையத்தில்

இந்த ஆண்டு கண்காட்சியில் சுமார் ரூபாய் 7 இலட்சம் வரை விற்பனை எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தபட்சம் ரூ. 100 முதல் ரூ. 40,000 விலை வரை 5,000 கிருஷ்ணர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்திற்கும் 10% சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

இக்கண்காட்சி குறித்து மேலாளர் நரேந்திர போஸ் கூறுகையில், இக்கண்காட்சியில் காட்சிக்கு மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் பல்வேறு வகையான கிருஷ்ணர் சிலைகள் மற்றும் பூஜை பொருட்களை சேலம் மாநகர மக்கள் வாங்கி தங்கள் கிருஷ்ணர் ஜெயந்தி விழாவை மகிழ்ச்சியாக கொண்டாடும், மேலும் இந்த பொம்மைகள் மற்றும் சிலைகளை உற்பத்தி செய்யும் கைவினை  கலைஞர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்று கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
Embed widget