கரூர்: மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து 12 ஆயிரம் கனஅடியாக உயர்வு
டெல்டா பாசன சாகுபடி பணிக்காக காவிரி ஆற்றில் 11 ஆயிரத்து 816 கனஅடி தண்ணீரும் நான்கு பாசன வாய்க்காலில் 470 தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
கரூர் அருகே மாயனூர் கதவணைப்பு நேற்று வினாடிக்கு 11 ஆயிரம், 144 கன அடி தண்ணீர் வந்தது. காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 12 ஆயிரத்து 286 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. டெல்டா பாசன சாகுபடி பணிக்காக காவிரி ஆற்றில் 11 ஆயிரத்து 816 கனஅடி தண்ணீரும் நான்கு பாசன வாய்க்காலில் 470 தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
அமராவதி அணை நீர்வரத்து நிலவரம்
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு நேற்று காலை 6 மணி நிலவரப்படி அமராவதி அணைக்கு வினாடிக்கு 335 கன அடி தண்ணீர் வந்தது. அமராவதி ஆற்றில் வினாடிக்கு 400 கன அடி தண்ணீரும் புதிய பாசன வாய்க்காலில் 381 தண்ணீரும் திறக்கப்பட்டது. 90 அடி கொண்ட அணையின் நீர்மட்டம், 87.27 அடியாக நிரம்பியுள்ளது.
நங்காஞ்சி அணை நீர்வரத்து நிலவரம்
திண்டுக்கல் மாவட்டம் நங்காஞ்சி அணைக்கு வடகாடு மலைப்பகுதிகளில் மழை காரணமாக நேற்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு, 10 கன அடி தண்ணீர் வந்தது அணையில் இருந்து ஆற்றில் வினாடிக்கு 10 அடி கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 39.37 அடி உயரம் கொண்ட அணை தற்போது நிரம்பியுள்ளது.
ஆத்துப்பாளையம் அணை நீர்வரத்து நிலவரம்
கரூர் மாவட்டம், கரூர் பரமத்தி அருகே கார் வழி வைகுண்டர் மணிக்கு நேற்று காலை 6 மணி நிலவரப்படி அனைத்து தண்ணீர் வரத்து இல்லை 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 22.96 அடியாக இருந்தது அணையில் இருந்து நொய்யல் வாய்க்காலில் வினாடிக்கு 52 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் பெரும்பாலும் இடங்களில் மழை அளவு பெய்யாத நிலையில் தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாக மாவட்டத்தின் மழை அளவு பூஜ்ஜியமாகவே உள்ளது. அதேபோல் வெயிலின் தாக்கம் பல்வேறு இடங்களில் அதிக அளவில் இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தின் போது மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.