மூன்றாம் ஆண்டு அடி எடுத்து வைப்பது சாதாரண காரியம் அல்ல - அமைச்சர் செந்தில்பாலாஜி
ஆட்சிக் பொறுப்பேற்று நிதி நிலையை ஓரளவு சரி செய்து தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை 85 விழுக்காடு வாக்குறுதிகளை தமிழ்நாட்டு முதலமைச்சர் நிறைவேற்று தந்திருக்கின்றார்.
கரூர் மாநகரில் உள்ள தனியார் மஹாலில் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பாக நடைபெற்ற மாவட்ட அளவிலான கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியினை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு மாநில ஒருங்கிணைப்பாளர்- ஆசிரியர் .பேரா.முனைவர் .திரு.ஜே.கான்ஸ்டன்டையன் ரவீந்திரன் அவர்கள் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.மாணிக்கம்,(குளித்தலை), இளங்கோ(அரவக்குறிச்சி), க.சிவகாமசுந்தரி (,கிருஷ்ணராயபுரம்) வணக்கத்திற்குரிய கரூர் மாநகராட்சி மேயர் வெ.கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பேசுகையில்,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்று நேற்றோடு இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்து இன்று மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றார்கள் . மூன்றாம் ஆண்டு அடி எடுத்து வைப்பது என்று ஒரு சாதாரண காரியம் அல்ல. காரணம் 2021 ஆட்சி பொறுப்பேற்ற பொழுது தமிழ்நாட்டினுடைய நிதிநிலை மிக மோசமாக அகல பாதாளத்தில் இருக்கக்கூடிய ஒரு சூழலில் கடந்த காலங்களில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள் உருவாக்கி விட்டு சென்றார்கள். அப்படிப்பட்ட சூழலில் ஆட்சிக் பொறுப்பேற்று நிதி நிலையை ஓரளவு சரி செய்து தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை 85 விழுக்காடு வாக்குறுதிகளை தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்கள் நிறைவேற்று தந்திருக்கின்றார்கள். இங்கே மாணவ மாணவிகள் வருகை தந்திருக்கின்றார்கள். உள்ளபடியே கல்வி என்பது தமிழ்நாட்டின் உடைய முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு தளபதி அவர்கள் எத்தனை துறைகள் இருந்தாலும் கல்வித்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கான நிதிகளை வழங்கக்கூடிய முதலமைச்சர் மாண்புமிகு தளபதி அவர்கள் அரசின் கூட திட்டங்களை பல்வேறு வழிகளில் செயல்படுத்தக்கூடிய முக்கியமான ஒருவரின் முதன்மையானவராக இங்கே வருகை தந்திருக்க கூடிய திரு கான்ஸ்டன்டையன் ரவீந்திரன் அவர்கள் மிகச் சிறப்பாக முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதல்படி செயல்பட்டு கொண்டிருக்கின்றார்கள். இன்று கரூர் மாவட்டத்திற்கு குறிப்பாக மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கின்ற இந்நன்னாளில் வருகை தந்து இந்த நிகழ்ச்சியினை நடத்துவதற்கு வாய்ப்பைத் தந்து அண்ணன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டு வருகை தந்துள்ள உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் அன்போடு தெரிவித்துக் கொண்டு மாண்புமிகு முதலமைச்சர் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளுக்கு நமது மாவட்டத்தில் இருந்து வந்திருக்கக்கூடிய மாணவச் செல்வங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொண்டு அனைவருக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என மாண்புமிகு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
விழாவில் முனைவர்.த.கருவூர் கன்னல், பள்ளப்பட்டி நகராட்சி .முனவர் ஜான், ஆசிரியர்கள் , மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.