ஸ்ரீ மரகதவல்லி அம்பிகை சமேத மகாபலேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேக விழா
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மலைக்கோவிலூர் ஸ்ரீ மரகதவல்லி அம்பிகை சமேத ஸ்ரீ மகாபலேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. ஆன்மிக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
மலைக்கோவிலூர் பகுதியில் 1000 ஆண்டு பழமையான ஸ்ரீ மரகதவல்லி அம்பிகை சமேத மகாபலேஸ்வரர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மலைக்கோவிலூர் பகுதியில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஸ்ரீ மரகதவல்லி அம்பிகை சமேத ஸ்ரீ மகாபலேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. கோயிலில் கும்பாபிஷே விழா நடத்த பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தனர். அடிப்படையில் கும்பாபிஷேக விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த இரண்டு வருடங்களாக புனரமைக்கும் பணி நடைபெற்று வந்தது. நாள்தோறும் சுவாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆலயம் அருகே சிவாச்சாரியார்கள் பிரத்யேகமாக யாக குண்டங்கள் அமைத்து காவிரி ஆற்றில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தத்திற்கு நான்கு கால யாக பூஜை நடைபெற்றது.
கலசத்திற்கு தூப தீபங்கள் காண்பிக்கப்பட்ட பின்னர் சிவாச்சாரியார் மேல தாளங்கள் முழங்க கலசத்தினை தலையில் சுமந்தவாறு கோயிலை சுற்றி வலம் வந்த பிறகு கோபுர கலசத்தை வந்திருந்தது பின்னர் கோபுர கலசத்திற்கு பட்டாடை உடுத்தி வண்ண மாலைகள் அணிவித்த பிறகு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி உள்ளிட்டோர் பங்கேற்பு. ஸ்ரீ மரகதவல்லி அம்பிகை மற்றும் ஸ்ரீ மகாபாரேஸ்வரர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கரூர் மட்டுமின்றி அண்டை மாவட்டத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆன்மிக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்