மேலும் அறிய

கரூரில் இரண்டாவது நாளாக தொடரும் வருமானவரித்துறை சோதனை

கரூரில் முன்னாள் மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் வாசுகி முருகேசனின் சகோதரி வீடு உட்பட மூன்று இடங்களில் இரண்டாவது நாளாக தொடரும் வருமான வரி சோதனை.

தமிழகம் முழுவதும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய கல்லூரி, வீடு, அலுவலகம் நண்பர்கள் வீடு, உறவினர்கள் வீடு, உறவினர்கள் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரி துறை அதிகாரிகள் நேற்று காலை 7 மணி முதல் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் சோதனையை தொடங்கினர்.

கரூரில் இரண்டாவது நாளாக தொடரும் வருமானவரித்துறை சோதனை

இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் கரூர் மாவட்ட திமுக செயலாளர் வாசுகி முருகேசனின் சகோதரி பத்மாவின் வீடு, காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள சுரேஷ் என்பவரது (பைனான்ஸ்) நிதி நிறுவனம் மற்றும் வையாபுரி நகர் முதல் கிராஸ் பகுதியில் அமைந்துள்ள அவரது வீடு, தோட்டக்குறிச்சி பகுதியில் உள்ள திமுக முன்னாள் கவுன்சிலர் வீடு மற்றும் அவரது அலுவலகம் என கரூர் மாவட்டத்தில் ஐந்து இடங்களில் நேற்று காலை 7  மணியிலிருந்து 15 மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகளின் சோதனை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நேற்று இரவு நேரத்திலும் வருமானவரித்துறை சோதனை தொடர்ந்தது.

கரூரில் இரண்டாவது நாளாக தொடரும் வருமானவரித்துறை சோதனை

மேலும் கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம் தோட்டக்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் சக்திவேல் என்பவரது வீட்டில் நேற்று காலை 07.00 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை 07.00 மணி அளவில் முடிந்தது.  இந்த நிலையில் கரூரில் மூன்று இடங்களில் மட்டும் தொடர்ந்து இரவிலும் நடைபெறும் சோதனையின் வாயிலாக, அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி இருக்கலாம் எனவும், அதன் அடிப்படையில் தொடர் சோதனை நடத்தலாம் எனவும் கூறப்படுகிறது.

கரூரில் இரண்டாவது நாளாக தொடரும் வருமானவரித்துறை சோதனை

இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்று வருமானவரித்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது. இரவு நேரத்திலும் சோதனை முடியாமல் தொடரும் நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் வருமான வரி சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்று வருமானவரித்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது .

கரூரில் இரண்டாவது நாளாக தொடரும் வருமானவரித்துறை சோதனை

கடந்த பல்வேறு மாதங்களுக்கு முன்பு கரூரில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, அலுவலகம் மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனைகள் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக அமலாக்கத்துறை சோதனையும் நடைபெற்றன. தற்போது சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் இலாக்கா இல்லாத அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருக்கும் நிலையில் தற்போது மீண்டும் கரூரில்  எ.வ.வேலு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்று வருவதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

62 மத்திய அரசு பணியிடங்கள்... செப்.15 வரை விண்ணப்பிக்கலாம்: எங்கு தெரியுங்களா?
62 மத்திய அரசு பணியிடங்கள்... செப்.15 வரை விண்ணப்பிக்கலாம்: எங்கு தெரியுங்களா?
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Embed widget