அமராவதி ஆற்றில் மீண்டும் மணல் திருட்டு - அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
அமராவதி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதால், ஆற்றில் மீண்டும் மணல் திருட்டு தொடங்கியுள்ளது. ஆற்றுவலத்தை பாதுகாக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அமராவதி ஆற்றில் மணல் திருட்டு.
அமராவதி ஆற்றில் தண்ணீர்வரத்து குறைந்துள்ளதால், ஆற்றில் மீண்டும் மணல் திருட்டு தொடங்கியுள்ளது. ஆற்றுவலத்தை பாதுகாக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். அமராவதி அணையிலிருந்து, திறந்து விடப்படும் தண்ணீர், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, கா. பரமத்தி தான்தோன்றி மலை, கரூர் ,பஞ்சாயத்து யூனியன், பகுதிகளை கடந்து திருமக்கூடலூர் காவிரி ஆற்றில் கலக்கிறது. அமராவதி ஆற்று பாசனம் மூலம் கரூர் மாவட்டத்தில் பல ஆயிரக்கணக்கான நிலங்களில் விவசாயம் நடந்து வருகிறது. மேலும் கிராம பஞ்சாயத்துக்களுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம், அனுமதிக்கப்பட்ட நீர்த்தேக்க கிணறுகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. இந்நிலையில் சம்பா சாகுபடி, நெல் நடவு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி நிலவரப்படி அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 200 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது.
அமராவதி ஆற்றில் மணல் அல்ல உயர்நீதிமன்ற மதுரை கிளை ஏற்கனவே தடை விதித்தது. ஆனால், தற்போது தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால், ராஜபுரம், சின்னதாராபுரம், கிருஷ்ணராயபுரம், திருமாநிலையூர், கோயம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ,அமராவதி ஆற்றில் மீண்டும் திருட்டு தொடங்கியுள்ளது. குறிப்பாக, மாட்டுவண்டிகள், டூவீலர்களில் இரவு நேரத்தில், மணல் திரட்டு நடக்கிறது. இதற்காக, பகல் நேரத்தில் மணலை சல்லடை மூலம், சலித்து கரையோர பகுதிகளில் குவிந்து வைத்துள்ளனர். தொடர்ந்து அழகு பாராமல் மணல் அள்ளப்படுவதால் கரூர் மாவட்ட அமராவதி ஆற்றுப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயத்துக்கு பாதிப்பு குடிநீர் தட்டுப்பாடு வறட்சி போன்ற அபாயம் ஏற்படும் நிலை உள்ளது.
மணல் திருட்டு குறித்து, மாவட்ட கலெக்டர், ஆர்டிஓ, தாசில்தார், குடிநீர் வடிகால் வாரியம், என அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் அளித்தும் அரசுத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளது. அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோடை காலம் நெருங்கும் நிலையில், நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில் அமராவதி ஆற்றில் மணல் திருட்டை தடுக்க வேண்டியது அவசியம்.
முயல் வேட்டையில் ஈடுபட்ட ஏழு பேருக்கு ரூ 63,000 அபராதம்.
கரூர் மாவட்ட வன அலுவலர் சரவணன் அறிவுரைப்படி கரூர் வனச்சராக அலுவலர் தண்டபாணி, கரூர் பிரிவு வனவர் சாமியப்பன் தலைமையிலான வனத்துறையினர் மணவாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மணவாடி பகுதியில் பட்டா நிலங்களில் சிலர் வேட்டை நாய்களுடன் முயல் வேட்டையில் ஈடுபட்டு இருந்துள்ளனர் .இதை அடுத்து அவர்களை வனத்துறையினர் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கடவூர் அருகே உள்ள வளையப்பட்டியைச் சேர்ந்த தர்மர், கருப்பையா, பழனியாண்டி, லட்சுமணன், தங்கவேல், கதிர்வேல், பாஞ்சாலி ராஜன் ,என்பது தெரியவந்தது. இதை அடுத்து 7 பேரும் மீதும் வழக்கு பதிவு செய்து தர்மர், கருப்பையா, பழனியாண்டி, லட்சுமணன், ஆகிய 4 பேருக்கு தலா 15000 விதம் மொத்தம் 60 ஆயிரம் தங்கவேல், கதிர்வேல், பஞ்சாலி ராஜன் ,ஆகிய மூன்று பேருக்கு தலா ரூ.1000 வீதம் 3 ஆயிரம் மாவட்ட வன அலுவலரால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.