மேலும் அறிய

30 ஆண்டாக பயனற்று கிடந்த கிணறு..இளைஞர்களின் செயலால் இப்ப கிராமமே ஹேப்பி அண்ணாச்சி

தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அரசாங்கத்தின் உதவி இன்றி, இளைஞர்கள் ஒன்று கூடி 15,000 லிட்டர் தண்ணீர் இருக்கும் வகையில் கிணற்றை தூர்வாரி உள்ளனர்.

கரூர் மாவட்ட எல்லையில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க 30 ஆண்டுகாலமாக பயனற்று இருந்த கிணற்றை இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி தூர்வாரினர். கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் தண்ணீரை எடுத்து சென்றதை

 

மகிழ்ச்சியுடன் தண்ணீரை எடுத்துச் சென்ற கிராம மக்கள் - ஊர் திருவிழாவாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

 

 


30 ஆண்டாக பயனற்று கிடந்த கிணறு..இளைஞர்களின் செயலால் இப்ப கிராமமே ஹேப்பி அண்ணாச்சி

 

கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள காளப்பட்டி கிராம பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.  கிராமத்தின் மையப் பகுதியில் சுமார் 60 ஆண்டிற்கு முன்பாக குடிநீர் தேவைக்காக கிணறு தோண்டப்பட்டு மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

 


30 ஆண்டாக பயனற்று கிடந்த கிணறு..இளைஞர்களின் செயலால் இப்ப கிராமமே ஹேப்பி அண்ணாச்சி

 

கடந்த 30 ஆண்டு காலமாக  கிணறு பராமரிப்பின்றி பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. குடிப்பதற்கு பஞ்சாயத்து குடிநீர் சரியாக வராததாலும், போர் பைப்பில் உப்பு தண்ணீர் வருவதால் அப்பகுதியை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று கூடி ஊர் பொதுமக்களுடன் இணைந்து கிணறை தூர்வார முடிவெடுத்தனர்.

தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடிவெடுத்து சுமார் 15 நாட்களுக்கும் மேலாக 75 ஆயிரம் ரூபாய் செலவு செய்து 65 அடி ஆழமுள்ள கிணற்றில் 12 அடி தூர்வாரி கிணற்றுக்கு கம்பிகள் அமைத்து கயிறு உதவியுடன் வாளி மூலம் குடிநீர் எடுப்பதற்கான அமைப்பை செய்துள்ளனர். இதனை திருவிழாவாக கொண்டாடும் வகையில் கிணறு அருகே அமைந்துள்ள காளியம்மன் மற்றும் விநாயகர் கோவிலை சுத்தம் செய்து, பொங்கல் வைத்தும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

 


30 ஆண்டாக பயனற்று கிடந்த கிணறு..இளைஞர்களின் செயலால் இப்ப கிராமமே ஹேப்பி அண்ணாச்சி

குறிப்பாக தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அரசாங்கத்தின் உதவி இன்றி, இளைஞர்கள் ஒன்று கூடி 15,000 லிட்டர் தண்ணீர் இருக்கும் வகையில் கிணற்றை தூர்வாரி உள்ளனர். அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் புன்னகையுடன் கிணற்றில் தண்ணீர் எடுத்தனர். சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் உற்சாகத்துடன் தண்ணீரை பருகினர்.

 


30 ஆண்டாக பயனற்று கிடந்த கிணறு..இளைஞர்களின் செயலால் இப்ப கிராமமே ஹேப்பி அண்ணாச்சி

இதுகுறித்து ஊர் பொதுமக்கள் கூறுகையில், “எங்கள் பகுதி மிகவும் வறட்சியான பகுதி தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பகுதி, போர் பைப்பில் சரிவரத் தண்ணீர் வராததாலும் சுமார் 30 ஆண்டுக்கு மேலாக உறை கிணறு பயனற்று இருந்ததை குடிநீர் தேவைக்காக பயன்படுத்தலாம் என்று ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் முடிவெடுத்து கிராம மக்களிடம் நிதி வசூல் செய்து 12 அடிக்கும் மேல் இருந்த மண்களை தூர்வாரி எடுத்து குடிநீர் பயன்பாட்டிற்காக கொண்டு வந்துள்ளோம். நாள் ஒன்றுக்கு பத்தாயிரம் லிட்டர் தண்ணீரை பயன்படுத்தும் வகையில் தூர்வாரப்பட்டுள்ளது. ஊரின் வளர்ச்சியை முடிந்த அளவிற்கு இந்த கிணற்று தண்ணீர் தீர்க்கும் நம்பிக்கை உள்ளது.  அரசு தாமாக முன்வந்து கிராம பகுதியில் குடிநீர் தேவைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? ஆதம்பாக்கத்தில் உருவான இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!
பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!
தங்கம், வெள்ளி ஆபரணங்கள் அணிவது அழகிற்காகவா? பின்னணியில் உள்ள அறிவியல்பூர்வ உண்மை
தங்கம், வெள்ளி ஆபரணங்கள் அணிவது அழகிற்காகவா? பின்னணியில் உள்ள அறிவியல்பூர்வ உண்மை
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
"ராகுல் கிட்ட மேகதாது பத்தி ஏன் பேசல?" - விஜய்யைக் கேள்வி கேட்டு வெளுத்த இயக்குநர் கெளதமன்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Maruti Fronx on Discount: செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
Alto K10 Price: நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Embed widget