முகத்தில் கருப்பு மை பூசி வந்த சமூக ஆர்வலர் - கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது என்ன?
தன் உயிருக்கு பாதுகாப்பு வேண்டுமென்று முகத்தில் கருப்பு மையை பூசி கரூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தார்.
கரூரில் சமூக ஆர்வலர் தனக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மாவட்ட ஆட்சித் தலைவர் மனு அளித்தார்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை சார்ந்தவர் சமூக ஆர்வலர் அமிர்தானந்தம். இவர் அந்த பகுதியில் நடைபெறும் பேரூராட்சி சார்பில் நடைபெறும் பணிகள் தரம் இல்லாததாகவும் தொடர்ந்து பல்வேறு முறைகேடு நடைபெற்று வருவதாகவும் ஒப்பந்தாரின் மீது நடவடிக்கை எடுக்க கோரி பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அமிர்தானந்தம் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக முதல்வர் தனிப்பிரிவு, கரூர் மாவட்ட ஆட்சியர், காவல்துறை தலைவர், துணைத் தலைவர் பல்வேறு இடங்களில் மனு அளித்துள்ளார். இது சம்பந்தமாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன் உயிருக்கு பாதுகாப்பு வேண்டுமென்று முகத்தில் கருப்பு மையை பூசி கரூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்தார்.
மேலும், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். ஆனால் இதுவரை சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். மீண்டும் அமிர்தானந்தத்தை கொலை செய்ய குற்றம் சாட்டப்பட்டவர்கள் திட்டம் திட்டி வருவதாக உடனடியாக சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முகத்தில் கருப்பு மை பூசி வந்து மனு அளித்ததனால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
கரூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த புதிய தம்பதியர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அனைத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்பொழுது கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கொசூர் சந்தை பகுதியில் சேர்ந்த வயதான தம்பதிகளான தமிழரசி மற்றும் அவரது கணவர் ராஜவேல் மனு அளிக்க வந்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அவர்களில் கணவர் ராஜவேல் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அருகில் இருந்த காவலர்கள் அவர்களுக்கு அவருக்கு தண்ணீர் கொடுத்து அவரை நிதானத்திற்கு கொண்டு வந்தனர். அப்பொழுது ராஜவேலின் மனைவி தமிழரசி கொசூர் பகுதியில் வசித்து வருவதாகவும், தனது மகளுக்காக சிறிய வீடு ஒன்றை கட்டிக் கொடுத்து அதில் தாங்களும் வசித்து வருவதாகவும் திடீரென்று மகளின் கணவன் ஆகிய தங்களை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாகவும் வீட்டை அபகரித்துக் கொண்டதாகவும் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறினார்.
அப்பொழுது தமிழரசியும் திடீரென மயங்கி விழுந்தது பலரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது உடனடியாக அவருக்கும் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.