மேலும் அறிய

இந்த பேருந்துகளுக்கு எல்லாம் அனுமதி தரக்கூடாது - ஆய்வின்போது கரூர் எஸ்.பி., போட்ட உத்தரவு

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 92 தனியார் பள்ளிகளில்  இயங்கி வரும் 702 பேருந்துகளில் இயக்குவதற்கு தயார் நிலையில் உள்ள 556 பேருந்துகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் ஆய்வு செய்யப்பட்டன. 

கரூரில் தனியார் பள்ளி பேருந்துகளின் தரம் குறித்த ஆய்வின்போது ஓட்டுனர் வருகை இல்லாத, முதலுதவி பெட்டியை சரியாக பயன்பாட்டில் வைக்காத பேருந்துகளுக்கு அனுமதி தரக்கூடாது என எஸ்.பி பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த பேருந்துகளுக்கு எல்லாம் அனுமதி தரக்கூடாது - ஆய்வின்போது கரூர் எஸ்.பி., போட்ட உத்தரவு

கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்க உள்ளதால் தமிழக அரசு தனியார் பள்ளி வாகனங்கள் அனைத்தையும் ஆய்வு செய்ய கூறி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதையடுத்து, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 92 தனியார் பள்ளிகளில் இயங்கி வரும் 702 பேருந்துகளில் இயக்குவதற்கு தயார் நிலையில் உள்ள 556 பேருந்துகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் ஆய்வு செய்யப்பட்டன. கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தர்மானந்தம் ஆகியோர் பள்ளிப் பேருந்துகளை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தனர். 

இந்த பேருந்துகளுக்கு எல்லாம் அனுமதி தரக்கூடாது - ஆய்வின்போது கரூர் எஸ்.பி., போட்ட உத்தரவு

வாகனங்கள் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டுள்ளதா, வாகனங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஜி.பி.எஸ் கருவிகள், தீயணைப்பு கருவிகள், அவசரகால வழி கதவுகள் சரியாக செயல்படுகிறதா, முதலுதவி பெட்டி உள்ளதா என ஆய்வு செய்தனர். மேலும், பள்ளி வாகனங்கள் இயக்கும் ஓட்டுனர்கள் 10 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும் எனவும் விதிகளை பின்பற்ற வலியுறுத்தினர்.

இந்த பேருந்துகளுக்கு எல்லாம் அனுமதி தரக்கூடாது - ஆய்வின்போது கரூர் எஸ்.பி., போட்ட உத்தரவு

இந்த ஆய்வு பணியின் இடையே பள்ளி பேருந்து ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தீயணைப்பு துறையினரின் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்கள் வாகனத்தில் ஏறும்போதும், இறங்கும்போதும் சாலையை கடந்து பெற்றோரிடம் மாணவர்கள் செல்லும் வரையில் அவர்களது பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் எனவும், அவசர கதியில் பேருந்துகளை எடுப்பதால் தான் விபத்துகள் ஏற்படுவதாக எஸ்.பி பிரபாகர் தெரிவித்தார். மேலும் ஆய்வு பணியின் போது ஓட்டுநர் வருகை இல்லாத பேருந்து மற்றும் முதலுதவி பெட்டிகளை சரிவர பயன்பாட்டில் வைக்காத பேருந்துகளுக்கு அனுமதி தரக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தலைப்பு செய்திகள்

Singer Arivu arrest : தலைமைச்செயலகத்திற்குள் சவுண்டு விட்ட பாடகர் அறிவு.! கூட்டி வரச் சொன்ன சிஎம் விஜய்- என்ன காரணம்.?
தலைமைச்செயலகத்திற்குள் சவுண்டு விட்ட பாடகர் அறிவு.! கூட்டி வரச் சொன்ன சிஎம் விஜய்- என்ன காரணம்.?
Letter to MKS : ‘மு.க.ஸ்டாலின் இருட்டில் வைக்கப்பட்டார் – அதிமுக ஆட்சி மாதிரிதான் திமுகவும்’ ராஜினாமா செய்த நிர்வாகி பரபரப்பு கடிதம்..!
'அதிமுக ஆட்சி மாதிரிதான் திமுகவும்’ ராஜினாமா செய்த நிர்வாகி பரபரப்பு கடிதம்..!
மதுரையில் 3000 ஆண்டு அதிசயம்: ஆதிகால குகை, பாறை ஓவியம், இரும்பு உருக்காலை கண்டுபிடிப்பு!
மதுரையில் 3000 ஆண்டு அதிசயம்: ஆதிகால குகை, பாறை ஓவியம், இரும்பு உருக்காலை கண்டுபிடிப்பு!
சுய உதவிக்குழுவினருக்கு குஷியோ குஷி.! ரொம்ப கம்மி வட்டியில் ரூ.25 லட்சம் கடன்- விண்ணப்பிப்பது எப்படி.?
சுய உதவிக்குழுவினருக்கு குஷி.! ரொம்ப கம்மி வட்டியில் ரூ.25 லட்சம் கடன்- விண்ணப்பிப்பது எப்படி.?

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Singer Arivu arrest : தலைமைச்செயலகத்திற்குள் சவுண்டு விட்ட பாடகர் அறிவு.! கூட்டி வரச் சொன்ன சிஎம் விஜய்- என்ன காரணம்.?
தலைமைச்செயலகத்திற்குள் சவுண்டு விட்ட பாடகர் அறிவு.! கூட்டி வரச் சொன்ன சிஎம் விஜய்- என்ன காரணம்.?
Minister Rajmohan: பாடப்புத்தம் இனி படப்புத்தகம், குறையும் பை சுமை, கதைவழி கணிதம்: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
Minister Rajmohan: பாடப்புத்தம் இனி படப்புத்தகம், குறையும் பை சுமை, கதைவழி கணிதம்: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
Letter to MKS : ‘மு.க.ஸ்டாலின் இருட்டில் வைக்கப்பட்டார் – அதிமுக ஆட்சி மாதிரிதான் திமுகவும்’ ராஜினாமா செய்த நிர்வாகி பரபரப்பு கடிதம்..!
'அதிமுக ஆட்சி மாதிரிதான் திமுகவும்’ ராஜினாமா செய்த நிர்வாகி பரபரப்பு கடிதம்..!
Parandur Airport : ’பரந்தூர் விமான நிலைய இடம்’ திமுக எழுப்பிய கேள்வியால் வெளியான உண்மை..!
’பரந்தூர் விமான நிலைய இடம் மாற்றமா?’ மத்திய அரசு அதிரடி பதில்..!
மைலேஜை அள்ளித்தரும் டாப் 6 ஆஃப் ரோட் பைக்குகள் - என்னென்ன? விலை எப்படி?
மைலேஜை அள்ளித்தரும் டாப் 6 ஆஃப் ரோட் பைக்குகள் - என்னென்ன? விலை எப்படி?
Flying Electric Taxi: இனி பறந்துட்டே பயணிக்கலாம்; நாட்டின் முதல் EV டாக்சி, ஐஐடி சென்னை, அடுத்த ஆண்டில் அமல்- விவரம்
Flying Electric Taxi: இனி பறந்துட்டே பயணிக்கலாம்; நாட்டின் முதல் EV டாக்சி, ஐஐடி சென்னை, அடுத்த ஆண்டில் அமல்- விவரம்
டேங்கை நிரப்பினா 368 கி.மீட்டர் வரை மைலேஜ்.. சிட்டியில் மாஸ் காட்ட VLF Mobster ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
டேங்கை நிரப்பினா 368 கி.மீட்டர் வரை மைலேஜ்.. சிட்டியில் மாஸ் காட்ட VLF Mobster ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
DMK MLA: ரூல்ஸ் பேசிய திமுக எம்.எல்.ஏ.. ”அப்டிலாம் ஒன்னும் இல்லையே” விதிகளை அடுக்கிய சபாநாயகர்
ரூல்ஸ் பேசிய திமுக எம்.எல்.ஏ.. ”அப்டிலாம் ஒன்னும் இல்லையே” விதிகளை அடுக்கிய சபாநாயகர்
Embed widget