மேலும் அறிய

ஆடு மேய்க்க சென்ற சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 40 வயது நபருக்கு 20 ஆண்டு சிறை

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழ்நாடு அரசு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் பரிந்துரை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

கரூர் அருகே ஆடு மேய்க்க சென்ற சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பல முறை பாலியல் வன்கொடுமை செய்து, குழந்தை பிறக்க காரணமாக இருந்த 40 வயது மகேஷ் என்பவருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்ச ரூபாய் அரசு இழப்பீடு வழங்கவும் கரூர் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளது.

 


ஆடு மேய்க்க சென்ற சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 40 வயது நபருக்கு 20 ஆண்டு சிறை

 

கரூர் மாவட்டம் குரும்பபட்டியை அடுத்த ஒலிகரட்டூரில் 9ம் வகுப்பு வரை படித்து விட்டு இடை நிற்றலாகிய சிறுமி, பெற்றோர் கூலி வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் இருக்கும் ஆடுகளை மேய்ச்சலுக்காக அருகில் உள்ள காட்டிற்கு அழைத்துச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அப்போது அதே கிராமத்தில் வசிக்கும் மகேஷ் என்கின்ற மகேஷ்வரன் (வயது 40) அதே காட்டில் ஆடு மேய்க்க வந்துள்ளார். சிறுமியை காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார். பிறகு திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 2021ம் ஆண்டு தீபாவளி தினத்தன்று சிறுமிடம் அத்து மீறியுள்ளார்.

 


ஆடு மேய்க்க சென்ற சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 40 வயது நபருக்கு 20 ஆண்டு சிறை

அதனை தொடர்ந்து ஒரு வருடமாக அவரிடம் நெருங்கி பழகியதால் சிறுமி கற்பமடைந்து விட்டார். இதனை வீட்டில் சொல்லக் கூடாது என மகேஷ் சொல்லி இருந்ததால் சிறுமியும் யாரிடமும் சொல்லாமல் மறைத்து விட்டார். ஒரு கட்டத்தில் சிறுமியின் கை, கால்கள் வீங்கிய நிலையில், வயிற்று வலி ஏற்பட்டதால் அவரை கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். கடந்த 14.02.2023 அன்று சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து பெற்றோர் குழந்தைகள் நல பாதுகாப்பு அலகிற்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த அலுவலர்கள் சிறுமியிடம் விசாரித்த பிறகு கரூர் ஊரக உட்கோட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

 


ஆடு மேய்க்க சென்ற சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 40 வயது நபருக்கு 20 ஆண்டு சிறை

 

அதன் அடிப்படையில் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து மகேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  நடைபெற்ற இறுதி விசாரணையில் குற்றவாளிக்கு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழ்நாடு அரசு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் பரிந்துரை செய்து நீதிபதி நசீமா பானு தீர்ப்பளித்தார். இதனை தொடர்ந்து குற்றவாளி மகேஷை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் அழைத்துச் சென்றனர்.

 

 

 

 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs DC LIVE Score: டூ ப்ளெசிஸ், விராட் கோலி அவுட்; பந்து வீச்சில் கெத்து காட்டும் டெல்லி கேப்பிடல்ஸ்!
RCB vs DC LIVE Score: டூ ப்ளெசிஸ், விராட் கோலி அவுட்; பந்து வீச்சில் கெத்து காட்டும் டெல்லி கேப்பிடல்ஸ்!
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-க்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-க்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
"எம்.ஜி.ஆர். மாதிரி இருக்க நினைக்கிறார்! நடிகர் விஜய் கட்சி தொடங்கியது மகிழ்ச்சி" முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala on Marriage | ”காலைல 4:30க்கு கல்யாணம்! தேதி பின்னர் அறிவிக்கப்படும்” பாலா நச் பதில்Savukku Shankar Goondas | சவுக்கு மீது குண்டாஸ்! சென்னை காவல்துறை அதிரடி! வச்சு செய்யும் வழக்குகள்Modi's Mother Heeraben patel | ”அம்மா PHOTO-அ கொடுங்க” பரிசுடன் வந்த இளைஞர்கள்! கலங்கிய மோடிSavukku Shankar asset |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs DC LIVE Score: டூ ப்ளெசிஸ், விராட் கோலி அவுட்; பந்து வீச்சில் கெத்து காட்டும் டெல்லி கேப்பிடல்ஸ்!
RCB vs DC LIVE Score: டூ ப்ளெசிஸ், விராட் கோலி அவுட்; பந்து வீச்சில் கெத்து காட்டும் டெல்லி கேப்பிடல்ஸ்!
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-க்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-க்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
"எம்.ஜி.ஆர். மாதிரி இருக்க நினைக்கிறார்! நடிகர் விஜய் கட்சி தொடங்கியது மகிழ்ச்சி" முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
"அவரோட வயச விட கம்மியான தொகுதிகளில்தான் காங்கிரஸ் வெற்றிபெறும்" ராகுல் காந்தியை கலாய்த்த பிரதமர் மோடி!
INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளரா கெஜ்ரிவால்? அவரே அளித்த சுவாரஸ்ய பதில்!
INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளரா கெஜ்ரிவால்? அவரே அளித்த சுவாரஸ்ய பதில்!
இந்தியாவில் சாதிய பாகுபாடு இல்லையா? எங்கு வாழ்கிறீர்கள்? இயக்குனர் வெற்றி மாறன் விளாசல்!
இந்தியாவில் சாதிய பாகுபாடு இல்லையா? எங்கு வாழ்கிறீர்கள்? இயக்குனர் வெற்றி மாறன் விளாசல்!
"சர்ப்ரைஸ் இருக்கு.. மைதானத்தில் காத்திருங்க" ரசிகர்களுக்கு சிஎஸ்கே நிர்வாகம் வேண்டுகோள்!
Embed widget