அரசு மருத்துவமனையில் அடிக்கடி கட் ஆகும் கரண்ட்; கர்ப்பிணிகள், தாய்மார்கள் பாதிப்பு
குழந்தை பிறந்த தாய்மார்கள் அவர்களின் உறவினர்கள் குழந்தையை அறையில் வைத்திருக்க முடியாமல் மரத்தடியில் விசிறி மூலம் குழந்தையை பாதுகாத்து வருகின்றனர்.

குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மின்தடை ஏற்படுவதால் நோயாளிகள், கர்ப்பிணி தாய்மார்கள் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.
கரூர் மாவட்டம் குளித்தலையில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் குளித்தலை சுற்றியுள்ள 300க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து கர்ப்பிணி, தாய்மார்கள் முதியோர்கள் மற்றும் சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்கள் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக இந்த மருத்துவமனையில் ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு தாய் சேய் மட்டும் சிசு பராமரிப்பு மையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இடையிடையே அறிவிக்கப்படாத மின் தடையால் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் மின்சாரம் இல்லாததால் இருக்கையில் உள்ள கர்ப்பிணி, தாய்மார்கள் அவசர சிகிச்சை நோயாளிகள் கடுமையான வெயிலால் பெட்டில் இருக்க முடியாமல் மரத்தடியில் இருக்கும் அவல நிலை இருந்து வருகிறது. மேலும் குழந்தை பிறந்த தாய்மார்கள் அவர்களின் உறவினர்கள் குழந்தையை அறையில் வைத்திருக்க முடியாமல் மரத்தடியில் விசிறி மூலம் குழந்தையை பாதுகாத்து வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் கடுமையான வெயில் காலங்களை கருத்தில் கொண்டு அரசு மருத்துவமனையில் மின் துண்டிக்காத வகையில் நோயாளிகளுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க வகையில் மின்சாரம் தொடர்ந்து வழங்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மருத்துவமனையில் மிகப்பெரிய ஜெனரேட்டர் வசதி இருந்தும் நோயாளிகளுக்கு தடையில்லா மின்சார வழங்க முடியாத நிலை இருந்து வருகிறது. தாய்மார்கள், சிசு குழந்தைகள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் அரசு மருத்துவமனைகளை ஆய்வு செய்து தடையில்லா மின்சார வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

