மேலும் அறிய

கலைஞரின் வேளாண் வளர்ச்சி திட்டம்: கரூரில் 2.65 லட்சம் மரக்கன்று விநியோகிக்க இலக்கு

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் கரூர் மாவட்டத்திற்கு ஆண்டு 2.65 லட்சம் மரக்கன்றுகள் வினியோகம் செய்ய இலக்கு என வேளாண் இணை இயக்குனர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் கரூர் மாவட்டத்திற்கு இந்த ஆண்டு 2.65 லட்சம் மரக்கன்றுகள் வினியோகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, கரூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

கலைஞரின் வேளாண் வளர்ச்சி திட்டம்: கரூரில் 2.65 லட்சம் மரக்கன்று விநியோகிக்க இலக்கு

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: கரூர் தமிழ்நாட்டின் பசுமை வனப்பரப்பு மொத்த பரப்பரப்பில் கிட்டத்தட்ட 24 சதவீதம் என்ற அளவில் உள்ளது. தேசிய வனக் கொள்கையின் படி பசுமை வனப்பரப்பு 33 சதவீதம் வரை இருக்க வேண்டும், எனவே, தமிழகத்தில் பசுமை வனப்பரப்பை அடுத்து 10 ஆண்டுகளில் 34 சதவீதத்திற்கு உயர்த்துவதற்காக தமிழ்நாடு பண்ணை நிலங்களில் நீடித்த பசுமை போர்வை இயக்கம் என்னும் வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தை அரசு கடந்தாண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.  

இந்த திட்டத்தினால் விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் கூடுதல் வருமானம் கிடைப்பதுடன், வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் மேம்படுவதோடு பசுமைப் பரப்பு அதிகரிப்பு, மண்ணின் அங்கக உயிர் பொருள் அதிகரிப்பின் மூலம் மண்வளம் மேம்பாடு மற்றும் கால்நடைகளுக்கு தேவையான தீவனப் பயிர்கள் உற்பத்தி மற்றும் உலக வெப்பமயமாதலில் ஏற்படும் தீய விளைவுகள் குறையும். இந்த திட்டத்தில், செம்மரம், மாக்கோகனி, ரோஸ்வுட், தேக்கு,  வேங்கை,  மலைவேம்பு ,புளியன்,  கடம்பு உட்பட 27 வகையான மரக்கன்றுகள் வனத்துறை நாற்றங்களில் உற்பத்தி செய்து, வேளாண் உழவர் நலத்துறையின் மூலம் 2.65 லட்சம் மரக்கன்றுகள் விநியோகம் செய்யப்பட உள்ளது. 

கலைஞரின் வேளாண் வளர்ச்சி திட்டம்: கரூரில் 2.65 லட்சம் மரக்கன்று விநியோகிக்க இலக்கு

கரூர் மாவட்ட விவசாயிகள் தங்களது வரப்பு ஓரங்களில் நடவு செய்வதாக இருந்தால் ஹெக்ட்டா இருக்கு 160 மரக்கன்றுகளும் வயல் முழுவதும் நடவு செய்வதாக இருந்தால்  ஹெக்டேருக்கு 500 மரக்கன்று இலவசமாக வழங்கப்படும். ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஹெக்டேருக்கு மரக்கன்று வழங்கப்படும். மரக்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள் வேளாண்மை உழவர் நலத்துறையின் உழவன் செயலி மூலம் தங்களது சர்வே எண் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்யப்பட்ட வயலை தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலர் ஆய்வு செய்து உரிய அனுமதி வழங்குவார் பின்னர் தங்களுக்கு தேவைப்படும் மரக்கன்றுகளை வனவியல் விரிவாக்கம்  நாற்றங்காலில் இருந்து பெற்று நடவு செய்து கொள்ளலாம். 

கலைஞரின் வேளாண் வளர்ச்சி திட்டம்: கரூரில் 2.65 லட்சம் மரக்கன்று விநியோகிக்க இலக்கு

கரூர் மாவட்டத்திற்கு இந்த ஆண்டு 2.65 லட்சம் மரக்கன்றுகள் வினியோகம் செய்ய இலக்கு பெறப்பட்டு, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராம பஞ்சாயத்துகளில் உள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வினியோகம் செய்யப்பட உள்ளது.

எனவே மரக்கன்றுகள் வளர்க்க ஆர்வமாக உள்ள விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலர் அல்லது சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டு இலவசமாக மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
"விஜயை விமர்சிக்க வேண்டாம்" இபிஎஸ் போடும் புது கணக்கு.. 2026 தேர்தலில் சம்பவம் இருக்கு போலயே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK vs VCK Flag issue | ”எங்க கொடிதான் பறக்கணும்”தவெக- விசிக கடும் மோதல் களத்துக்கு வந்த போலீசார்Vijay Thiruma meeting :”ஒரே மேடையில் திருமா, விஜய்”ஆதவ் அர்ஜுனா SKETCH!திமுகவை அதிரவைத்த உளவுத்துறை!Tirupati Laddu Row BR Naidu : ”இந்துவா இருந்தால் தான் வேலை..இல்லனா வெளியே போ!” தேவஸ்தானம் பகீர்!Police Passed away | பேனரால் நிகழ்ந்த விபரீதம்பரிதாபமாக இறந்த காவலர் சோகத்தில் மூழ்கிய கிராமம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
"விஜயை விமர்சிக்க வேண்டாம்" இபிஎஸ் போடும் புது கணக்கு.. 2026 தேர்தலில் சம்பவம் இருக்கு போலயே!
Prashant Kishor: ஒரு தேர்தல் ஆலோசனைக்கு எவ்வளவு வாங்கினேன் தெரியுமா? பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்.!
ஒரு தேர்தல் ஆலோசனைக்கு எவ்வளவு வாங்கினேன் தெரியுமா? பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்.!
"ஊர்களுக்கு ராமர், கிருஷ்ணர்னுதான் பேர் வைக்கனும்" தடாலடியாக பேசிய அஸ்ஸாம் முதல்வர்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
Kodaikanal: தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
Embed widget