மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு; சாம்பா சாகுபடிக்கு காவிரியில் நீர் திறப்பு
அமராவதி அணையில் இருந்து ஆற்றில் வினாடிக்கு 438 கன அடி தண்ணீரும், புதிய பாசன வாய்க்காலில் 250 கன அடி தண்ணீரும், திறக்கப்பட்டது. பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து 306 கன அடியாக இருந்தது.
மாயனூர் கதவனைக்கு 22,000 கன அடி நீர்வரத்து
காவிரி ஆற்றில் மாயனூர் கதவனைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. கரூர் அருகே மாயனூர் கதவனைக்கு வினாடிக்கு 16,72 கன அடி தண்ணீர் வந்தது. காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 22 ஆயிரத்து 694 கன அடியாக தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது. டெல்டா பாசன சாம்பா சாகுபடி பணிக்காக, காவிரிஆற்றில் 21,374 கன அடி தண்ணீரும், நான்கு பாசன கிளை வாய்க்காலில் வினாடிக்கு, 1,320 கான அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
அமராவதி அணை
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு காலை வினாடிக்கு 522 கன அடி தண்ணீர் வந்தது. காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு 626 கன அடி யாக நீர்வரத்து அதிகரித்தது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 89.47 அடியாக இருந்தது. அமராவதி அணையில் இருந்து ஆற்றில் வினாடிக்கு 438 கன அடி தண்ணீரும், புதிய பாசன வாய்க்காலில் 250 கன அடி தண்ணீரும், திறக்கப்பட்டது. அணைப்பகுதிகளில் மூன்று மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. கரூர் அருகே பெரிய ஆண்டாங் கோவில் தடுப்பணைக்கு காலை ஆறு மணி நிலவரப்படி வினாடிக்கு தண்ணீர் வரத்து 306 கன அடியாக இருந்தது.
நங்காஞ்சி அணை
திண்டுக்கல் மாவட்டம், நங்கஞ்சி அணைக்கு, வடகாடு மலைப்பகுதிகளில் மழை காரணமாக காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 42 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து, நான்கு பாசன வாய்க்காலில் தலா, 10 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. 39.37 அடி உயரம் கொண்ட, அணையின் நீர்மட்டம், 39.34 அடியாக இருந்தது.
.
ஆத்துப்பாளையம் அணை
கரூர் மாவட்டம்,கா. பரமத்தி அருகே கார்வாலி ஆத்துப்பாளையம் அணைக்கு, காலை 6 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 26 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
பொன்னணி ஆறு அணை
கடவூர் அருகே உள்ள பொன்னணி ஆறு அணைக்கு, காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 51 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 27.93 அடியாக இருந்தது.
கரூர் நொய்யல் அணையில் இருந்து நீர் திறப்பு.
19,480 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறும்.கரூர் மாவட்டம் புகலூர் வட்டம் நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து நீர்வளத்துறை செயலாளர் சந்திப்பு சக்சேனா வெளியிட்டுள்ள அறிக்கை. மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்கள் மூலம் சேலம், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பாசனம் பெறும் 45 ஆயிரம் ஏக்கர் பதிவு பெற்ற ஆயகட்டு நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கும் பொருட்டு 137 நாட்களுக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்பொழுது மேட்டூர் அணையிலிருந்து மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு கூறிய மேட்டூர் வலது கரை வாய்க்கால் விவசாயிகள் பாசன சங்கத்தின் கோரிக்கைகளை ஏற்று மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்கள் பாசனத்திற்கு நாள் ஒன்றுக்கு 600 கன அடி வீதம் மேலும் 44 7 நாட்களுக்கு கால நீட்டிப்பு செய்தது தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் சேலம், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். அதே போன்று கரூர் மாவட்டம் புகலூர் வட்டம் நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்தில் இருந்து நொயில் கால்வாயில் உள்ள பாசனப்பகுதிகளுக்கு 40 நாட்களுக்கு 276.480 மில்லி கன அடிக்கு மிகாமல் சிறப்பு நடைப்பிற்கு தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்து அரசு உத்தர விட்டுள்ளது. இதனால் கரூர் மாவட்டம் புகலூர் மற்றும் மன்மங்கலம் வட்டங்களில் உள்ள 19.480 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.