மேலும் அறிய

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூதாட்டி சடலமாக மீட்பு !! 24 மணி நேரத்தில் சிக்கிய கொலையாளி

மூதாட்டியைக் கொலை செய்து நகைகளைத் திருடிச் சென்ற 19 வயது இளைஞரை போலீஸார் சினிமா பாணியில் விரட்டிப் பிடித்தனர்

கை - கால்கள் கட்டிய நிலையில் இறந்து கிடந்த மூதாட்டி

கரூர் மாவட்டம் வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலப்பட்டியில் தனியாக வசித்து வந்தவர் 79 வயதுடைய தாயாரம்மாள். இவர் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை லந்தகோட்டையில் வசிக்கும் தனது மகள் மனோரஞ்சிதத்துடன் செல்போனில் பேசி விட்டு வீட்டிற்கு வெளியே உள்ள திண்ணை அருகே கட்டிலில் படுத்து உறங்கியுள்ளார்.

மறுநாள் காலை மூதாட்டியின் உறவினர் அருணாச்சலம் அந்த வழியாக சென்றுள்ளார். வீட்டு வேலைகளை செய்யும் தாயாரம்மாள் அன்றைய தினம் நேரமாகியும் எழாததால் சந்தேகம் அடைந்து வீட்டு வாசல் கேட்டை திறந்து உள்ளே சென்று பார்த்த போது கை, கால்கள், மற்றும் வாய் ஆகியவை துணியால் கட்டப்பட்டு இறந்த நிலையில் தாயாரம்மாள் கிடந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர் அருணாச்சலம் மூதாட்டியின் மகள் மனோரஞ்சிதத்திற்கு போன் மூலம் தகவல் தெரிவித்த நிலையில், அவர் சாலப்பட்டிக்கு விரைந்து வந்திருக்கிறார்.

காணாமல் போன நகை

தாயாரின் சடலத்தை பார்த்த மனோரஞ்சிதம் அவர் அணிந்திருந்த அரை சவரன் தோடு மற்றும் கால் சவரன் மூக்குத்தி ஆகியவை இல்லாததை கவனித்து இது குறித்து வெள்ளியணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

தகவலின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்ததில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த 19 வயதுடைய பாண்டீஸ்வரன் என்பவர் தான் மூதாட்டி தயாரம்மாளை கொலை செய்து விட்டு தப்பியது தெரிய வந்தது.

தொடர்ந்து அவரது செல்போன் எண்ணை ஆய்வு செய்த போது ஆலப்புழாவில் இருந்து தன்பாத் செல்லும் ரயிலில் பொதுப் பெட்டியில் அமர்ந்து பயணம் செய்வது தெரிய வந்தது. இதையடுத்து கரூர் மாவட்ட போலீசார் சென்னை சென்ட்ரல் போலீசாரை அலர்ட் செய்த நிலையில் சென்ட்ரல் போலீசார் பாண்டீஸ்வரனை கைது செய்து கரூர் மாவட்டம் வெள்ளியணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சென்னை விரைந்த வெள்ளியணை போலீசார், கொலையாளி பாண்டீஸ்வரனை கைது செய்து கரூர் அழைத்துச் சென்றனர்.

தலைப்பு செய்திகள்

CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
TN Assembly Debate : ’மாண்புமிகு சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி, குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
’சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
TN Assembly Debate : ’மாண்புமிகு சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி, குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
’சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
TN Assembly : 'யார் ஆட்சியில் அதிக டென்ஷன்?' பேரவையில் MRK பன்னீர்செல்வம் – அமைச்சர் ஆனந்த் இடையே ஜாலியான விவாதம்..!
யார் ஆட்சியில் அதிக டென்ஷன்? பேரவையில் ஜாலியான விவாதம்..!
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
Embed widget