மேலும் அறிய
Advertisement
மனு வழங்கிய 20 நிமிடத்தில் மாற்றுத்திறனாளிக்கு வீடு ஒதுக்கி ஆணையிட்ட கரூர் கலெக்டர்..!
கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று 99 பயனாளிகளுக்கு ரூ.67 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் பொது மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பயனாளிகளிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று 99 பயனாளிகளுக்கு ரூ.67 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறுஅரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். மேலும் ,இன்றைய கூட்டத்தில் ஓய்வூதியம், வங்கிகடன், இலவச வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, உதவி உபகரணங்கள், குடும்ப அட்டை கோருதல் மற்றும் இதர மனுக்கள் போன்றவைகள் கேட்டு மொத்தம் 531 மனுக்கள் பெறப்பட்டது.
மக்கள் குறைதீர் கூட்டம்:
மாற்றுத்திறனாளிகளிடம் 47 மனுக்கள் பெறப்பட்டது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகளை கூட்ட அரங்கு வரை அழைத்து வருவதை தவிர்த்து, அவர்களுக்கென்று பிரத்யேக இருக்கைகள் அமைத்து அமரவைக்கப்பட்டனர்.
மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கு சென்று மாவட்ட ஆட்சித்தலைவர் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய மனுக்களுக்கு, பிற மனுக்கள் மீதும் ஒரு வார காலத்தில் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு உரிய நிவாரணம் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
நலத்திட்டங்கள்:
மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பாக 4 நபர்க்கு தலா ரூ.2780 மதிப்பீட்டில் ரூ.11,120 மதிப்பில் காதொலி கருவிகளையும், கோயம்புத்தூர் அண்ணா பல்கலை கழக பொறியியல் கல்லூரியில் படிக்கும் அரவக்குறிச்சி வட்டம், சாந்தப்பாடி கிராமத்தை சேர்ந்த மாணவனுக்கு சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து கல்வி உதவித்தொகைக்காக ரூ.50,000 க்கான காசோலையினையும், கரூர் வடிவேல் நகரை சேர்ந்த மாற்றுத்திறனாளி சக்திவேல் என்பவர் மனு வழங்கிய 20 நிமிடத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் ரூ.8.67 தனி வீடு ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணை வழங்கினார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளையும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு தலா ரூ.4870 மதிப்பில் ரூ.48700 மதிப்பீட்டில் சலவைப்பெட்டியும், தாட்கோ நிதியுதவி கீழ் தொழில் முனைவோர்களுக்கான 79 நபர்களுக்கு ரூ.57,00,115 மதிப்பீட்டில் அரசு மானியத்துடன் வங்கி கடனுதவியும் ஆக மொத்தம் 99 பயனாளிகளுக்கு ரூ66,77,935 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் வழங்கினார்.
கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டத்தில் பயின்று டி.என்பி.சி தொகுதி -4 தேர்வில் தேர்ச்சி பெற்ற நித்யாஶ்ரீ, புனிதா,சபரிநாதன், முகம்மது ஆகிய 4 நபர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் பணி நியமண ஆணையினை காண்பித்து வாழ்த்து பெற்றார்கள்.
Join Us on Telegram: https://t.me/abpdesamofficial
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion