மேலும் அறிய

கரூரில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி தொடக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் என்ற பெயரில் மாநிலம் முழுவதும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் விளையாட்டுப் போட்டிகளை மாநில அளவில் நடத்திட ஆணையிடப்பட்டுள்ளது,

கரூரில் முதலமைச்சர் கோப்பைக்காண விளையாட்டு போட்டியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கரூர் மாவட்டம் சார்பில் முதலமைச்சர்  44 வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவின் போது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மற்றும் கபடி, சிலம்பாட்டம் ஆகிய இரண்டு பாரம்பரிய விளையாட்டுகளுக்காக மாநில மற்றும் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்காண விளையாட்டுப் போட்டிகள் விரைவில் நடைபெற உள்ளது என அறிவித்தார். மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மாணவ/மாணவிகளுக்கு கல்வி மட்டும் போதாது கல்வியோடு சேர்த்து விளையாட்டு போட்டியிலும் அனைவருக்கும் தேவை என்று தெரிவித்தார்.

கரூரில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி தொடக்கம்

அதன் அடிப்படையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் தமிழகம் முழுவதும் பல்வேறு வயது பிரிவினருக்கு விளையாட்டுப் போட்டிகளுக்கான முக்கியத்துவம் மற்றும் அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவ/மாணவியர்கள். பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளர்களுக்கு வெவ்வேறு பிரிவுகளில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட மற்றும் மாநில அளவில் நடத்திட ஆணையிடப்பட்டுள்ளது.

அதன்படி தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 202-23 என்ற பெயரில் மாநிலம் முழுவதும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடந்த ஆணையிடப்பட்டுள்ளது. மண்டல அளவிலான போட்டிகளை நடத்திட ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி. கல்லூரி மாணவ/மாணவியர்கள். பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளர்கள் ஆகிய ஐந்து பிரிவுகளில் ஆண் பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் பள்ளி மாணவ/மாணவியர்களுக்கு 11 வகையான விளையாட்டு போட்டிகளும், கல்லூரி மாணவ/மாணவியர்களுக்கு 11 வகையான விளையாட்டு போட்டிகளும், அரசு ஊழியர்களுக்கு 5 வகையான விளையாட்டு போட்டிகளும், பொதுபிரிவினருக்கு 5 வகையான விளையாட்டு போட்டிகளும்; மாற்றுதிறனாளர்களுக்கு 8 வகையான விளையாட்டு போட்டிகளும் என மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என மொத்தம் 50 வகையான போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

கரூரில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி தொடக்கம்

ஒவ்வொரு மாவட்டத்திலும் 588 நபர்களுக்கும். ஒவ்வொரு மண்டலத்திலும் 40 நபர்களுக்கும் என மாநில முழுவதும் 71,592 பரிசுகள் வழங்கப்பட உள்ளன. அதன்படி மாவட்ட அளவிலான போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்குவதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா 9.00.000/- வீதம் அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் தனிநபர் மற்றும் குழுப் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்/வீராங்கனைகளுக்கு முதல் பரிசாக ரூ 3000/-. இரண்டாம் பரிசாக ரூ 2000/. மூன்றாம் பரிசாக ரூ 1000/- ம் வழங்கப்படும்.

மாநில அளவிலான தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறும் வீரார்/வீராங்கனைகளுக்கு முதல் பரிசாக ஒரு 1,00,000/- இரண்டாம் பரிசாக ரூ 75,000/- மூன்றாம் பரிசாக ரூ 50,000/-ம் வழங்கப்படும். கரூர் மாவட்டத்திற்கு விளையாட்டுகளில் முதல் மூன்று இஇடங்களில் வெற்றி பெறும் தனி நபர் மற்றும் குழு விளையாட்டு வீரர்/வீராங்கனைகளுக்கு பரிசுத் தொகை மட்டும் ரூ 4208,000 (நூற்பத்திரண்டு லட்சத்து எட்டாயிறம் மட்டும்) வழங்கப்பட உள்ளது.

கரூரில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி தொடக்கம்

தமிழகம் முழுவதும் விளையாட்டுகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் தனி நபர் மற்றும் குழு விளையாட்டு வீரர்/வீராங்கனைகளுக்கு பரிசுத் தொகை மட்டும் ரூ 15,99, 04,000 (பதினைந்து கோடியே தென்னுற்றி ஒன்பது லட்சத்து நான்காயிரம் மட்டும்) வழங்கப்பட உள்ளது. கரூர் மாவட்டத்தில் 08.02.2023 இன்று முதல் முதலமைச்சர் கோப்பைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் துவங்கப்பட உள்ளன.

கரூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிகளில் பங்கு பெறுவதற்கு இணையதளம் வாயிலாக தனிநபர் விளையாட்டு பிரிவில் மொத்தம் 6451 நபர்களும், குழு விளையாட்டுப்போட்டிகளில் 10000 நபர்களும் மொத்தம் 16451 விளையாட்டு விரர்/வீராங்கனைகள் பதிவு செய்துள்ளார்கள்.

கரூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பை காண விளையாட்டுப் போட்டியை இன்று கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் விளையாட்டு துறை அதிகாரிகள் மற்றும் அரசு துறை அதிகாரிகள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் உடன் இருந்தனர்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
"இட்லி, சாம்பார் வித்ததால் வரல" குறையும் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள்.. பாஜக எம்எல்ஏ சொன்ன காரணம்!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
AI Girl Cheating: டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sexual Harassment | வீட்டில் தனியாக இருந்த பெண் மர்ம நபர் பாலியல் தொல்லை வாணியம்பாடியில் பகீர் சம்பவம்Jyotika on Hindi | ”என் மகனுக்கு இந்தியே பிடிக்காது” அடித்துக்கொள்ளும் DMK, BJP ஜோதிகா கொடுத்த பேட்டிகண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
Seeman Case: உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற சீமான்..தீவிரமாகும் வழக்கின் விசாரணை.! வழக்கு என்ன?
"இட்லி, சாம்பார் வித்ததால் வரல" குறையும் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள்.. பாஜக எம்எல்ஏ சொன்ன காரணம்!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
திருச்சி மக்களே உங்களின் எதிர்பார்ப்பு அடுத்த மாதம் நிறைவேற போகுது.. ரெடியா இருங்க..!
AI Girl Cheating: டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
டேய்..நீ லவ் பண்ண வேற ஆளே கிடைக்கலையாடா.? சீன இளைஞரிடம் சம்பவம் செய்த ஏஐ காதலி...
நாளை வானில் நிகழப்போகும் அதிசயம்.! ஒரே நேரத்தில் தெரியும் 7 கோள்கள்.! எப்படி பார்ப்பது?
நாளை வானில் நிகழப்போகும் அதிசயம்.! ஒரே நேரத்தில் தெரியும் 7 கோள்கள்.! எப்படி பார்ப்பது?
தென் மாநிலங்களுக்கு ஆபத்தா? ஸ்டாலினை தொடர்ந்து களத்தில் குதித்த சித்தராமையா!
தென் மாநிலங்களுக்கு ஆபத்தா? ஸ்டாலினை தொடர்ந்து களத்தில் குதித்த சித்தராமையா!
PAK vs BAN: பாகிஸ்தானை முடிச்சுவிட்ட சாம்பியன்ஸ் டிராபி - சொந்த நாட்டில் சொதப்பல்!
PAK vs BAN: பாகிஸ்தானை முடிச்சுவிட்ட சாம்பியன்ஸ் டிராபி - சொந்த நாட்டில் சொதப்பல்!
சீமான் வீட்டு காவலாளி - போலீஸ் இடையே அடிதடி! அண்ணன் வீட்டில் சினிமா பாணியில் சண்டை!
சீமான் வீட்டு காவலாளி - போலீஸ் இடையே அடிதடி! அண்ணன் வீட்டில் சினிமா பாணியில் சண்டை!
Embed widget