மேலும் அறிய

கரூரில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தம்

ஒரு ஆடு இறந்த நிலையிலும், ஒரு ஆடு கடிபட்டு காயமுற்ற நிலையிலும் இருந்தது. கண்டறியப்பட்டு தகவல் கிடைத்தவுடன் வனத்துறை அலுவலர்களை அப்பகுதிக்கு உடன் அனுப்பி வைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய பகுதியான அத்திப்பாளையம் புதூர் பகுதியில் வனவிலங்கு நடமாட்டம் உள்ளதாக தெரியவந்ததால் அப்பகுதியில் வன விலங்கை பிடிப்பதற்காக வன துறையுடன் சேர்ந்து மாவட்ட நிர்வாகம் முழு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் தெரிவித்தார்.

கரூரில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தம்

கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய பகுதி அத்திப்பாளையத்தில் வனவிலங்கு நடமாட்டம் உள்ளதாக அறியப்பட்டதால் அந்த வனவிலங்கை பிடிப்பதற்காக கூண்டுகள் அமைத்து வனத்துறையும், மாவட்ட நிர்வாகமும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. அப்பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர்பிரபு சங்கர்  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது,

கரூரில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தம்

கரூர் மாவட்டம் ஊராட்சி ஒன்றியம், அத்திப்பாளையம் புதூர் பகுதியில் நாச்சிமுத்து ஆட்டுப்பட்டியில் ஒரு ஆடு இறந்த நிலையிலும், ஒரு ஆடு கடிபட்டு காயமுற்ற நிலையிலும் இருந்தது. கண்டறியப்பட்டு அது குறித்த தகவல் கிடைத்தவுடன் வனத்துறை அலுவலர்களை அப்பகுதிக்கு உடன் அனுப்பி வைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வின் அடிப்படையில் ஆடு கடிபட்ட இடம் மற்றும் அருகாமையில் பதிந்துள்ள வனவிலங்கின் கால் தடத்தை வைத்து ஆய்வு செய்தபோது அது சிறுத்தையாக இருக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் கடந்த வாரத்தில் அருகாமையில் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக அறியப்பட்டு அதை ஆய்வு செய்த போது எடுக்கப்பட்ட கால் தடமும் தற்போது இங்கு எடுக்கப்பட்ட கால் தடமும் பெருமளவு ஒற்றுமையாக உள்ளதால் அந்த சிறுத்தை இடம் பெயர்ந்து இங்கு வந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அந்த சிறுத்தையை பிடிப்பதற்காக 4 கூண்டுகள், 3 வலைகள் மற்றும் வனத்துறையை சேர்ந்த அதிவிரைவு படையினர் கொடைக்கானலில் இருந்து வரவழைக்கப்பட்டு உள்ளனர். மேலும் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக இரவு நேரங்களிலும் நன்றாக பதிவாக கூடிய வகையில் 19 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது.

எனவே மாலைநேரங்களில் குழந்தைகள், பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியில் வர வேண்டாம் எனவும் அவசியம் வருவதாக இருந்தால் இரண்டு மூன்று பேராக சேர்ந்து கையில் கம்பு மற்றும் கை விளக்குடன் வரவேண்டும். ஆட்டுப்பட்டிகளில் இரவு முழுவதும் விளக்குகளை எரிய விடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக சுற்று வட்டார பகுதியில் உள்ள ஐந்து கிராமங்களில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து 24 மணி நேரமும் வனத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் சிறுத்தையை பிடிப்பதற்கான பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். என மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்தார்.

கரூரில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தம்

இந்த ஆய்வின்போது மாவட்ட வன அலுவலர் சரவணன், ஓசூர் வன உயிரின கால்நடை மருத்துவர் பிரகாஷ், கரூர் வருவாய் கோட்டாட்சியர் ரூபினா, க.பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, புகலூர் வட்டாட்சியர் திருமுருகன், மச்சி அத்திப்பாளையம் கிராம ஊராட்சி தலைவர்  பழனிச்சாமி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

தலைப்பு செய்திகள்

தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
சிந்தாமணி ஸ்டேஷனில் லாக்கப் மரணம்? “தவெக ஆட்சியில் தொடரும் கொடூரம்” - டிடிவி தினகரன் கொந்தளிப்பு
சிந்தாமணி ஸ்டேஷனில் லாக்கப் மரணம்? “தவெக ஆட்சியில் தொடரும் கொடூரம்” - டிடிவி தினகரன் கொந்தளிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
Embed widget