சிறுவயதில் இருந்து நீங்கள் விளையாட்டில் ஆர்வம் கொண்டால் பல்வேறு சாதனைகளை படைக்கலாம் - கரூர் கலெக்டர் அட்வைஸ்
மாணவ செல்வங்களாகிய நீங்கள் விளையாட்டுப் போட்டிகளில் அனைவரும் கலந்து கொண்டு உங்கள் உடலின் வலிமையையும் மனதின் வலிமையையும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தெரிவித்தார்.
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது பிரிவு சார்ந்த இளைஞர்களுக்கான மாவட்ட அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் பரிசுகளை வழங்கினார்.
கரூர் மாவட்டத்தில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாவட்ட அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்ற பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது பிரிவின் சார்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டு கபடி போட்டி, கால்பந்து போட்டி மற்றும் கையுந்து பந்து போட்டிகள் பெண்கள் மற்றும் ஆண்கள் பிரிவுகளில் நடைபெற்றது. மேலும் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி,வினாடிவினா, ஓவிய போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் பரிசுகளை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.
இந்நிகழ்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது:
நமது விளையாட்டுப் போட்டிகள் என்பது உங்களுக்கு புதிதானது ஒன்று அல்ல ஏனென்றால் தமிழ்நாட்டில் நமது விஸ்வநாதன் ஆனந்த் செஸ் விளையாட்டில் வந்த பொழுது உலக அளவில் சிறுவயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றவர். இவருக்குப் பிறகு இப்பொழுது நடந்த செஸ் விளையாட்டு போட்டிகளில் பிரக்யானந்தா மற்றும் வைஷாலி ஆகியோர் தமிழ்நாட்டில் இருந்து கிரான் மாஸ்டர் பட்டம் வென்றார்கள் நமது தமிழ்நாடு அரசு இளைஞர்களின் ஆற்றலை திறன்களை வெளிக்கொண்டுவதற்கு தனித்துறையினை உருவாக்கி இத்துறைக்கு மாண்புமிகு அமைச்சர் அவர்களை நியமனம் செய்து ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி மாணவர்களை ஊக்குவித்தும் அவர்களுடைய இருக்கும் திறமைகளை கண்டறிந்து மேலும் தேசிய அளவிலான போட்டிகளுக்கு தயார் செய்ய வேண்டும் பின்னர் சர்வதேச அளவிலான போட்டிகளுக்கும் தயார் செய்ய வேண்டும் என்ற பல்வேறு திட்டங்களை தீட்டி வருகின்றது நம்முடைய தமிழக அரசு.
அந்த விதத்தில் இப்பொழுது ஒவ்வொரு மாவட்ட தலைநகரத்திலும் ஒரு விளையாட்டு மைதான அரங்கம் இருக்கின்றது இந்த விளையாட்டு மைதானத்தில் உள்ள வளாகத்தில் பல்வேறு விளையாட்டு பயிற்சிகள் பெறுவதற்கான விளையாட்டு அம்சங்கள் இருக்கின்றன. அதேபோல் நமது விளையாட்டு மைதான அரங்கில் இன்னும் பல திட்டங்கள் தீட்டி நமது தமிழக அரசிடம் கோரிக்கையை வைத்திருக்கின்றோம் அதற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் அரசாணைகள் பெற்றதற்கு பிறகு நமது கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கம் மென்மேலும் சிறப்பு பெறும் இதைத் தவிர தமிழக அரசு ஒவ்வொரு கிராமப்புறத்தில் சிறிய அளவில் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு திட்டம் திட்டி இருக்கின்றது இதில் குறிப்பிட்ட அளவில் விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கும் இளைஞர்களை விளையாட்டு போட்டியில் ஊக்கி வைக்கும் வகையிலும் செயல்பட உள்ளது. அந்தத் திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வரும்பொழுது விளையாட்டு மைதான அரங்கம் இல்லாத இடமே இல்லை என்ற அளவில் தமிழ்நாடு வந்துவிடும். இன்டர்நேஷனல் செஸ் போட்டியினை நமது தமிழ்நாடு அரசு நடத்தி முடிக்கப்பட்டது உலக தரத்திலான பல்வேறு விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு பரிசு பெற்று சென்றார்கள் அதற்கு மேல் தற்போது கேலோ இந்தியா என்று பல்வேறு விளையாட்டுப் போட்டிகளையும் திருச்சிராப்பள்ளி கோயம்புத்தூர் சென்னை மதுரை போன்ற பெரிய மாநகர நகரங்களில் நடத்தி உங்களைப் போன்ற பல்வேறு இளைஞர்களின் திறன்களை வெளிக்கொண்டு செய்தது. விளையாட்டுப் போட்டிகள் என்பது நமது பாரம்பரிய கலாச்சாரத்துடைய விளையாட்டுகள் என்பது எல்லா வயதிலும் விளையாட கூடிய விளையாட்டுகள் நமது கிராமங்களில் இருக்கின்றன. எனவே மாணவ செல்வங்களாகிய நீங்கள் விளையாட்டுப் போட்டிகளில் அனைவரும் கலந்து கொண்டு உங்கள் உடலின் வலிமையையும் மனதின் வலிமையையும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன், திருச்சிராப்பள்ளி மண்டல இணை இயக்குனர் கல்லூரி கல்வி முனைவர்.குணசேகரன்,முதன்மை கல்வி அலுவலர் சுமதி, அரசு கலைக் கல்லூரி முதல்வர் அலெக்சாண்டர், சமுக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் சைபுதீன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் முனைவர். உமாசங்கர், விளையாட்டு மைதான பயிற்சியாளர் மெய்யநாதமூர்த்தி, அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.