மேலும் அறிய

கரூர் மாவட்டம் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

கரூர் மாவட்டத்தில் 26 கிராமங்களில், ஒவ்வொரு கிராமத்திலும் வருவாய்த்துறையினர்கள் மற்றும் பிறத்துறைகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிக அளவில் வர உள்ளதால் காவேரி கரையோரங்களில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க இன்று  தவிட்டுப்பாளையம் பகுதிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். த. பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, கரூர் மாவட்டம், புகளூர் வட்டம் தவிட்டுப்பாளையம் பகுதியில் இன்று காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிக அளவில் வர உள்ளதால் காவேரி கரையோரகளில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் முன்னிலையில் தவிட்டுப்பாளையம் பகுதிகளில் ஒவ்வொரு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டார்கள். தொடர்ந்து மாயனூர் கதவணை, செல்லாண்டியம்மன் கோவில் மற்றும் அம்மா பூங்கா ஆகியப் பகுதிகளை ஆய்வு மேற்கொண்டு செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,


கரூர் மாவட்டம் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

மேலும், மேட்டூர் அணையிலிருந்து 2 லட்சம் கன அடிக்கு நீர் திறந்து விடுவதால், கரூர் மாவட்டத்தில் காவிரிக்கரையோரகளில் ஒட்டியுள்ள அனைத்து கிராம பகுதி மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி மூலமாக மாவட்ட ஆட்சியர் அவர்களுடன் முன்னேற்பாடு பணிகள் குறித்து எங்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார்கள். எனவே இந்த கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எந்தவித பாதிப்புகள் இல்லாமல் பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்வதற்கு எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில் இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறோம். கரூர் மாவட்டத்தில் கரையோரப் பகுதிகளில் 26 கிராமங்கள் நதிகளை ஒட்டி அமைந்திருக்கின்றன. அந்த 26 கிராமங்களிலும், ஒவ்வொரு கிராமத்திலும் வருவாய்த்துறையினர்கள் மற்றும் பிறத்துறைகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.


கரூர் மாவட்டம் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

எந்தவிதமான அசம்பாவிதம் நடக்காத வண்ணம் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மேடானப் பகுதிகளில் பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தவிட்டுப்பாளையத்தில் 150 குடும்பத்திற்கு மேல் தங்க வைப்பதற்கு உடனடியாக அருகில் உள்ள திருமண மண்டபம், சமுதாயக்கூடம், பள்ளிக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. தொடர்ந்து இந்தப் பாதுகாப்பு நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் மாயனூர் கதவணை தற்சமயம் 1.60 இலட்சம் கனஅடிஅளவிற்கு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 லட்சம் கனஅடிஅளவிற்கு தண்ணீரும் வெளியிடப்படும். தொடர்ந்து இந்த நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் முழு அளவில் இந்த முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் ஆற்றுப்பகுதிகளுக்கு எந்தவித காரணத்திற்காகவும் செல்ல வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


கரூர் மாவட்டம் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

தொடர்ந்து இந்த வெள்ள அபாய எச்சரிக்கை தொடரும் வரை ஆற்றிற்கு குளிக்கவோ, துணி துவைப்பதற்கோ, நீந்துவதற்கோ அல்லது வேறு எந்த ஒரு காரணத்திற்காகவோ ஆற்றுக்கு செல்ல வேண்டாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர்  தெரிவித்தார்கள். இவ்ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராச்சலம், வருவாய் கோட்டாட்சியர்கள் புஷ்பாதேவி (குளித்தலை), ரூபினா (கரூர்), தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் சைபுதீன், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
தேர்தல் ஆணையர் பதவி விலகுக! தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்திற்கு பேரிழப்பு - விசிக எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தல்
தேர்தல் ஆணையர் பதவி விலகுக! தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்திற்கு பேரிழப்பு - விசிக எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தல்
Pondy Melange 2027: புதுச்சேரியின் புதிய அடையாளம்: ‘பாண்டி மெலாஞ்ச் 2027’ மூலம் சுற்றுலா வளர்ச்சி!
Pondy Melange 2027: புதுச்சேரியின் புதிய அடையாளம்: ‘பாண்டி மெலாஞ்ச் 2027’ மூலம் சுற்றுலா வளர்ச்சி!
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Anirudh Kavya: அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
L.Murugan: எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
இன்னும் எத்தனை லியோ தாஸ்.. சொந்தக் கட்சியிலேயே போதை மாபியா.. விஜயை விளாசியெடுத்த ஸ்டாலின்!
இன்னும் எத்தனை லியோ தாஸ்.. சொந்தக் கட்சியிலேயே போதை மாபியா.. விஜயை விளாசியெடுத்த ஸ்டாலின்!
Gem Veeramani: ”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
Vilupuram Child: 6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
தப்பா பேசுவீங்களோ.. நாங்க பேச ஆரம்பிச்சா அவ்வளவு தான்.. மோகன் ஜியை எச்சரித்த திருநங்கைகள்!
தப்பா பேசுவீங்களோ.. நாங்க பேச ஆரம்பிச்சா அவ்வளவு தான்.. மோகன் ஜியை எச்சரித்த திருநங்கைகள்!
Embed widget