மேலும் அறிய

கரூரில் மாபெரும் வரலாற்று சிறப்புமிக்க புத்தக திருவிழா - அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

புத்தகத் திருவிழா நடைபெறுவதை ஒட்டி முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் தலைமை வகித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாபெரும் புத்தகத் திருவிழா நடைபெறுவதை ஒட்டி முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம் (குளித்தலை), இளங்கோ (அரவக்குறிச்சி), சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்) ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.


கரூரில் மாபெரும் வரலாற்று சிறப்புமிக்க புத்தக திருவிழா - அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தெரிவிக்கையில், கரூர் மாவட்ட வரலாற்றில் முதன்முறையாக முதலமைச்சரின் நல்லாசியோடு, அரசு நிதிகளைக் கொண்டு மிகப்பெரிய ஒரு வரலாற்று சிறப்புமிக்க புத்தகத் திருவிழா வருகின்ற 19ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக 100 அரங்குகள் அமைக்கப்பட்டு அந்த 100 அரங்கில் ஏறத்தாழ பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் இடம் பெறக்கூடிய அளவிற்கு அரங்குகள் அமைக்கப்பட்டு, கூட்ட அரங்குகளும் அமைக்கப்பட்டு காலை 10 மணி முதல் தொடங்கி இரவு 9 மணி வரை புத்தகத்தின் விழா நடக்கக்கூடிய அளவிற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. குறிப்பாக மாலை 4 மணி முதல் 6 மணி வரை கலை நிகழ்ச்சிகளும், 6 மணி முதல் 8 மணி வரை சிந்தனைகள் உள்ளடங்கிய சான்றோர்கள், பெரியோர்கள் பங்கு பெறக்கூடிய சாலமன்பாப்பையா ,மதிப்பிற்குரிய திண்டுக்கல் லியோனி, சுகிசிவம் உள்ளிட்ட வரலாற்று சிறப்புமிக்க சான்றோர்கள் 6 மணி முதல் 8 மணி  வரை இருக்கக்கூடிய நிகழ்வில் பங்கு பெற்று சிறப்பிக்க இருக்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகள் வருகின்ற 19.8.2022 அன்று முதலமைச்சரின் நல்லாசியோடு கரூர் மாவட்டத்தில் மிகப்பெரிய வரலாற்று சிறப்புமிக்க புத்தகத் திருவிழா தொடங்க இருக்கின்றன. குறிப்பாக திருமாநிலையூர் பகுதியில் கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான புதிய பேருந்து நிலையம் அமைக்க உள்ள இடத்தில் இந்த புத்தகத் திருவிழா எழுச்சியோடு நடைபெற இருக்கின்றன. இந்த கூட்ட அரங்கில் ஆயிரம் பேர் பங்கு பெறக்கூடிய அளவிற்கு அதற்கான அரங்கைகளும் அமைப்பதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர்  தலைமையில் திட்டமிடப்பட்டுள்ளன. இன்னும் இந்த புத்தகத் திருவிழாவில் 2 லட்சம் பேர் இந்த 11 நாட்களில் பங்கு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைவிட கூடுதலாக கலந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்திட வேண்டும். 


கரூரில் மாபெரும் வரலாற்று சிறப்புமிக்க புத்தக திருவிழா - அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

மேலும், ஒவ்வொரு நாளும் பள்ளி, கல்லூரிகளில் சார்ந்து இருக்கின்ற மாணவ, மாணவிகள் இந்த புத்தகத் திருவிழாவில் பங்கு கொள்வதற்கான ஏற்பாடுகளும், பஸ் வசதியும் செய்யப்பட்டுள்ளன. இந்த மாபெரும் புத்தகத் திருவிழா சிறப்பாக அமைய கரூர் மாவட்ட பொதுமக்கள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், வாசகர் வட்டத்தை சேர்ந்தவர்கள் மற்றும் புத்தக பிரியர்கள் சிறந்த ஒத்துழைப்பை நல்க வேண்டும் என தெரிவித்தார்


கரூரில் மாபெரும் வரலாற்று சிறப்புமிக்க புத்தக திருவிழா - அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

இவ்வாய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர்கள் எம் லியாகத், கவிதா (நிலமெடுப்பு) வருவாய் கோட்டாட்சியர்கள், க.புஷ்பா தேவி, செல்வி, ரூபினா, கரூர் தனித்துறை ஆட்சியர் சபாதி, சைபுதீன், வாசகர் வட்டம் தீபம் சங்கர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
விவசாயிகளே உஷார்! இந்த 3 பணிகளை முடிக்காவிட்டால் பி.எம்.கிசான் பணம் நிறுத்தப்படலாம்!
விவசாயிகளே உஷார்! இந்த 3 பணிகளை முடிக்காவிட்டால் பி.எம்.கிசான் பணம் நிறுத்தப்படலாம்!
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget