சர்வதேச அளவில் செஸ் போட்டிகள்- பல பரிசுகளை வென்று கரூர் சிறுமி அசத்தல்
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலை, காமராஜர் நகரில் சேர்ந்தவர் ஜெகதீஸ். தச்சுத் தொழிலாளியான இவருக்கு அனிதா தேவி என்ற மனைவியும், யாழினி என்கின்ற 10 வயது மகளும், 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
கரூரில் கடந்த 2 ஆண்டுகளில் மாவட்டம், மாநிலம், இந்தியா, சர்வதேச அளவிலான 60க்கும் மேற்பட்ட செஸ் போட்டிகளில் விளையாடி பல பரிசுகளை வென்று வந்த 10 வயது சிறுமி. கூலித் தொழிலாளியின் மகளுக்கு சிறப்பாக பயிற்சி அளிக்க பயிற்சியாளர்கள் மற்றும் பொருளாதார உதவி கேட்டு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலை, காமராஜர் நகரில் சேர்ந்தவர் ஜெகதீஸ். தச்சுத் தொழிலாளியான இவருக்கு அனிதா தேவி என்ற மனைவியும், யாழினி என்கின்ற 10 வயது மகளும், 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர். யாழினி அங்குள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா காலத்திற்கு பிறகு சிறுமி யாழினியை அவரது பெற்றோர் செஸ் விளையாட்டை கற்றுக் கொள்ள பயிற்சிக்கு அனுப்பியுள்ளனர். யாழினியின் சிறப்பான ஆட்டத்தையும், அவரது ஆர்வத்தையும் பார்த்த பயிற்சியாளர்கள் அவருக்கு சிறப்பான பயிற்சி அளித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கரூர், கோவை, சென்னை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளிலும், வெளி மாநிலங்களில் நடந்த அகில இந்திய அளவிலான போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றி பெற்று பல பதக்கங்களையும், கோப்பைகளையும், சான்றிதழ்களையும் பெற்று வீட்டில் குவித்து வைத்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளில் 2 சர்வதேச போட்டிகள் உட்பட 60க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளார்.
செஸ் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட யாழினி 2 மணி நேரம் இந்த விளையாட்டுக்கு நேரம் ஒதுக்கி பயிற்சி மேற்கொண்டு வருகிறார். தந்தைக்கு போதிய வருமானம் இல்லாததன் காரணமாக போட்டிக்கு சென்று வரக் கூடிய செலவு கூட கடன் வாங்கிச் செல்லும் நிலை உள்ளது என்றும், மாணவிக்கு சிறப்பாக பயிற்சி அளிக்க பயிற்சியாளர்கள் மற்றும் போட்டிகளுக்கு சென்று வருவதற்கு தமிழம அரசும் அல்லது தனியார் நிறுவனங்களும் பொருளாதார உதவி செய்தால் சிறுமி சர்வதேச அளவில் போட்டிகளில் பங்கேற்று இந்தியாவிற்கு பல விருதுகளை பெற்றுத் தருவார் என பெற்றோரும், சிறுமியின் பயிற்சியாளரும் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், செஸ் விளையாட்டில் தீவிர ஆர்வம் கொண்ட சிறுமி கிராண்ட் மாஸ்டர் ஆவது தனது லட்சியம் என தெரிவித்துள்ளார்.