மேலும் அறிய

Kanniyakumari : கிறிஸ்துமஸ் கொண்டாட ஒருநாள் முன்னதாக இந்த மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை!

Kanniyakumari Local Holiday: கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கிறிஸ்துமஸ் ஈவ் நாளில் உள்ளூர் விடுமுறை

கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது சிறப்பு கொண்டாட்டங்கள், பிரார்த்தனைகள் நடைபெறும். இதில் பங்கேற்பதற்கு ஏற்ற வகையில் கன்னியாகுமரியில் வரும் சனிக்கிழமை (டிசம்பர்,24,2022) உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் ஜனவரி மாதம் இரண்டாவது சனிக்கிழமை (பிப்ரவர் 11,2023) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 2022 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாள் "கிறிஸ்துமஸ் ஈவ் முன்னிட்டு 24.12.2022 (சனிக்கிழமை) கன்னியாகுமரி மாவட்டத்தில் அன்றைய தினம் இயங்கும் அனைத்து மாநில அரசு சார்ந்த அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.

24.12.2022 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2023 பிப்ரவரி மாதம் இரண்டாவது சனிக்கிழமை (11.02.2023) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறையினை ஈடு செய்ய மாநில அரசு சார்ந்த அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும்.

 கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாள் "கிறிஸ்துமஸ் ஈவ்" முன்னிட்டு உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச் சட்டம் 1881 (Under Negotiable Instruments Act 1881) -இன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் 24.12.2022 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும். 

என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்:
 
1. கிறிஸ்துமஸ் காலம் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியை மட்டுமே கொண்டு வரட்டும். 
 
2. கிறிஸ்துமஸ், உங்கள் இதயத்தையும், வீட்டின் ஒவ்வொரு மூலையையும் மகிழ்ச்சியால் நிரப்பட்டும்.
 
3. கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்! ஆண்டு முழுவதும் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் 2022
 
4. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் சமாதானம், மகிழ்ச்சி மற்றும் நல்லெண்ணத்துடன் ஆசீர்வதிப்பாராக.
 
5. ஒவ்வொரு நாளும் உங்களது உடல் மற்றும் மன மகிழ்ச்சியானதாக அமையட்டும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்.
 
6. கிறிஸ்துமஸ் அற்புதங்கள் நிறைந்தது.  நீங்கள்  இந்த அழகான நேரத்தை மகிழ்ச்சியுடன் கழியுங்கள். கிறிஸ்துமஸ்  வாழ்த்துகள்.
 
7. கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு உங்களுக்கும், உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
8. இந்த கிறிஸ்துமஸ் உங்களுக்கு மங்களகரமானதாக இருக்கட்டும். நீங்கள் வெற்றி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியை பெற்று வளமுடன் வாழ வாழ்த்துக்கள்.
 
9. நம் நிறுவனத்தில் பணிபுரியும் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். உங்கள் அன்புக்குரியவர்களுடன் ஒரு அற்புதமான பண்டிகை காலத்தை அனுபவிக்கவும், கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் 
 
10. கிறிஸ்துமஸ் உங்கள் வீட்டை மகிழ்ச்சி மற்றும் அமைதியால் நிரப்பட்டும்.
 

மேலும் வாசிக்க..

 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
EB அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருட்டு; ஊழல் ஆதாரத்தை அழிக்க சதி? அன்புமணி சந்தேகம்
EB அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருட்டு; ஊழல் ஆதாரத்தை அழிக்க சதி? அன்புமணி சந்தேகம்
வெளி மாநிலங்களை கலக்கும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்... கர்நாடக முதல்வரின் செயலராக நியமிக்கப்பட்ட ராஜேந்திர சோழன் !
வெளி மாநிலங்களை கலக்கும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்... கர்நாடக முதல்வரின் செயலராக நியமிக்கப்பட்ட ராஜேந்திர சோழன் !
மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 18 ஹார்டு டிஸ்க்குகள் திருட்டு: ஊழல் ஆதாரங்களை அழிக்க சதியா? அரசு விசாரணை நடத்த அன்புமணி வலியுறுத்தல்!
மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 18 ஹார்டு டிஸ்க்குகள் திருட்டு: ஊழல் ஆதாரங்களை அழிக்க சதியா? அரசு விசாரணை நடத்த அன்புமணி வலியுறுத்தல்!

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Peddi Twitter Review: ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
Alisa Abdullah: பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
TVK Vijay: காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?
காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?
Tamilnadu Round Up: நாளை அமைச்சரவை கூட்டம், அரசுக்கு எதிராக வழக்கு,சிறுமிக்கு பாலியல் தொல்லை - தமிழ்நாட்டில் இதுவரை
நாளை அமைச்சரவை கூட்டம், அரசுக்கு எதிராக வழக்கு,சிறுமிக்கு பாலியல் தொல்லை - தமிழ்நாட்டில் இதுவரை
TNEB-யில் திருடப்பட்ட 18 ஹார்ட் டிஸ்குகள் - டெண்டர், கொள்முதல், விசாரணை ஆவணங்கள் எங்கே? சிக்குவது யார்?
TNEB-யில் திருடப்பட்ட 18 ஹார்ட் டிஸ்குகள் - டெண்டர், கொள்முதல், விசாரணை ஆவணங்கள் எங்கே? சிக்குவது யார்?
TN Weather Update: இன்று பள்ளிகள் திறப்பு.. எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? வெயில் சுட்டெரிக்கும் - வானிலை அறிக்கை
இன்று பள்ளிகள் திறப்பு.. எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? வெயில் சுட்டெரிக்கும் - வானிலை அறிக்கை
15 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதது கவலையளிக்கிறது – அன்புமணி இராமதாஸ்!
15 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதது கவலையளிக்கிறது – அன்புமணி இராமதாஸ்!
Embed widget