மேலும் அறிய
Advertisement
தூத்துக்குடி பஸ் ஸ்டாப்பிற்கு ரூ.1.54 கோடியா...? கனிமொழி எம்.பி., திறந்த கல்வெட்டில் சர்ச்சை!
தூத்துக்குடி மில்லர்புரத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிழற்குடையை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி கடந்த 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி மாநகரமாக தரம் உயர்ந்தது. தூத்துக்குடி நகராட்சியுடன், சுற்றி உள்ள சில பஞ்சாயத்துகள் சேர்க்கப்பட்டு மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. தூத்துக்குடி தொழிற்சாலைகள் மிகுந்த நகரம் ஆகும். தூத்துக்குடி நகராட்சியாக இருந்த போது, 857 தெருக்கள், சுமார் 174.770 கிலோ மீட்டர் நீளததில் அமைந்து இருந்தன. இதில் 11.798 கிலோ மீட்டர் சிமெண்ட் சாலைகள், 111.87 கிலோ மீட்டர் நீள தார் சாலைகள், 18.668 கிலோ மீட்டர் நீள கல்தளம், 32.434 கிலோ மீட்டர் நீள மண்சாலைகள் இருந்தன. இந்த சாலைகள் பெரும்பாலும் தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. தற்போது பல சாலைகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டு வருகின்றன. அதே போன்று குடிநீர் திட்டமும் மேம்படுத்தப்பட்டு 4-வது குடிநீர் குழாய் திட்டம் செயல்பாட்டுக்கு வந்து உள்ளது. இதனால் மாநகர மக்களுக்கு போதுமான அளவு குடிநீர் கிடைத்து வருகிறது.
(corporation entrance board)
தூத்துக்குடி மாநகரில் சுமார் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி பூங்காக்கள், விரிவுபடுத்தப்பட்ட சாலைகள், நடைமேடைகள், மழைநீர் வடிகால் குழாய், 49 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் கூடிய பஸ் நிலையம், வாகன நிறுத்தம், நடைபாதைகள், பொது கழிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
(millerpuram bus shelter)
தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பேருந்து நிலையம் மற்றும் மாநகர் பகுதியில் 8 பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அரசு பேருந்துகளும் , சில தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகிறது. குறிப்பாக துறைமுகம், அனல்மின் நகர் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு மட்டுமே பேருந்து இயக்கப்படுகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி மில்லர்புரத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிழற்குடையை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி திறந்து வைத்தார், அதனை தொடர்ந்து பேருந்து நிழற்குடை கல்வெட்டையும் திறந்து வைத்தார். அந்த கல்வெட்டில் நிழற்குடை ரூ 1 கோடியே 54 இலட்சத்தின் அமைக்கப்பட்டு உள்ளதாக பதிவு செய்யப்பட்டு இருந்தது. ஒரு நிழற்குடைக்கு ரூ 1 கோடியே 54 இலட்சமா என சமூக வலைத்தளங்களில் விவாதமானது.
(kanimozhi mp inagurate bus shelter 05-09-2021)
இது தொடர்பாக ஏபிபி நாடு சார்பில், தூத்துக்குடி மாநகராட்சி இணை ஆணையர் சரவணனை தொடர்பு கொண்டு கேட்டபோது, தூத்துக்குடி மாநகராட்சியில் கட்டப்பட்டு உள்ள 8 நிழல் குடைகளும் அன்று திறக்கப்பட்டதாகவும், அதன் மொத்த மதிப்பு ரூ 1 கோடியே 54 இலட்சம் எனவும் தெரிவித்தார்.
(stone laying )
ஒட்டுமொத்தமாக ரூ 1 கோடியே 54 இலட்சம் என்றால் ஏன் அந்த கல்வெட்டில் ரூ 1 கோடியே 54 இலட்சத்தில் அமைக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டு இருந்தது ஏன் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்..
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
பொழுதுபோக்கு
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion