மேலும் அறிய

Kanavu Illam Scheme: எஸ்.ரா., சு.வெ., வண்ணதாசன் உள்ளிட்ட 10 தமிழ் எழுத்தாளர்களுக்கு வீடு- தமிழக அரசு அதிரடி உத்தரவு

எஸ்.ராமகிருஷ்ணன், சு.வெங்கடேசன், வண்ணதாசன் உள்ளிட்ட பத்து தமிழ்‌ எழுத்தாளர்கள்‌ கனவு இல்லத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு வீடு வழங்கப்பட உள்ளது.

எஸ்.ராமகிருஷ்ணன், சு.வெங்கடேசன், வண்ணதாசன் உள்ளிட்ட பத்து தமிழ்‌ எழுத்தாளர்கள்‌ கனவு இல்லத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு வீடு வழங்கப்பட உள்ளது. இதுகுறித்துத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ கருணாநிதியின்‌ 97-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌ கடந்த 3.6.2021 அன்று, “தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த எழுத்தாளர்களில்‌ ஞானபீடம்‌, சாகித்ய அகாதமி போன்ற தேசிய விருதுகள்‌, மாநில இலக்கிய விருதுகள்‌, புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின்‌ விருதுகளைப்‌ பெற்றவர்களை ஊக்குளிக்கும்‌ வகையில்‌ அவர்கள்‌ வசிக்கும்‌ மாவட்டத்தில்‌ அல்லது விரும்பும்‌ மாவட்டத்தில்‌ தமிழ்நாடு அரசு மூலமாக வீடு வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பிற்கிணங்க, 2021-22ஆம்‌ ஆண்டிற்கான கனவு இல்லத்‌ திட்டத்திற்கு, சாகித்ய அகாடமி விருது மற்றும்‌ கலைஞர்‌ மு.கருணாநிதி செம்மொழித்‌ தமிழ்‌ விருது பெற்ற ந.செகதீசன்‌ என்கிற ஈரோடு தமிழன்பன்‌, சாகித்ய அகாதமி விருது பெற்ற கவிஞர்‌ புவியரசு என்கிற சு.ஜகன்னாதன்‌, கலைஞர்‌ மு. கருணாநிதி செம்மொழித்‌ தமிழ்‌ விருது பெற்ற முனைவர்‌ இ. சுந்தரமூர்த்தி, சாகித்ய அகாதமி விருது பெற்ற பூமணி என்கிற பூ.மாணிக்கவாசகம்‌. கலைஞர்‌ மு. கருணாநிதி செம்மொழித்‌ தமிழ்‌ விருது பெற்ற முனைவர்‌ சூ. மோகனராசு, சாகித்ய அகாதமி விருது பெற்ற இமையம்‌ என்கிற வெ. அண்ணாமலை ஆகிய ஆறு எழுத்தாளர்கள்‌ தேர்வு செய்யப்பட்டு. அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின்‌ அடுக்குமாடி குடியிருப்பிற்கான ஒதுக்கீட்டு ஆணைகளை 3.6.2022 அன்று வழங்கினார்‌.

அதன்‌ தொடர்ச்சியாக, 2022-2023ஆம்‌ ஆண்டிற்கான கனவு இல்லம்‌ திட்டத்தின்‌ கீழ்‌, 2005 ஆம்‌ ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற ஜி. திலகவதி, 2011 ஆம்‌ ஆண்டு கலைஞர்‌ மு.கருணாநிதி செம்மொழித்‌ தமிழ்‌ விருது பெற்ற பொன்‌. கோதண்டராமன்‌. 2011 ஆம்‌ ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்‌ சு. வெங்கடேசன்‌, 2013 ஆம்‌ ஆண்டு கலைஞர்‌ மு.கருணாநிதி செம்மொழித்‌ தமிழ்‌ விருது பெற்ற ப. மருதநாயகம்‌, 2015 ஆம்‌ ஆண்டு கலைஞர்‌ மு.கருணாநிதி செம்மொழித்‌ தமிழ்‌ விருது பெற்ற மறைமலை இலக்குவனார்‌, 2015-16 ஆம்‌ ஆண்டு செம்மொழித்‌ தமிழாய்வு மத்திய நிறுவனத்தின்‌ தொல்காப்பியர்‌ விருது பெற்ற மருத்துவர்‌ முனைவர்‌ இரா. கலைக்கோவன்‌, 2018 ஆம்‌ ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற எஸ்‌. இராமகிருஷ்ணன்‌, 2016 ஆம்‌ ஆண்டு கலைஞர்‌ மு. கருணாநிதி செம்மொழித்‌ தமிழ்‌ விருது பெற்றகா. ராஜன்‌, 2013 ஆம்‌ ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற ஆர்‌.என்‌.ஜோ.டீ. குருஸ்‌, 2016 ஆம்‌ ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்ற  சி. கல்யாணசுந்தரம்‌ (வண்ணதாசன்‌) ஆகிய பத்து தமிழ்‌ எழுத்தாளர்கள்‌ தேர்வு செய்யப்பட்டு அதற்கான அரசாணை 16.11.2022 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்பட்ட இந்த பத்து தமிழ் எழுத்தாளர்களுக்கும்‌ அவர்கள்‌ வசிக்கும்‌ மாவட்டத்தில்‌ அல்லது விரும்பும்‌ மாவட்டத்தில்‌ வீடுகள்‌ வழங்கப்படும்‌ என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
Ajithkumar Accident: கார் ரேஸில் அஜித் உயிர் தப்பியது எப்படி? மருத்துவர் தந்த பரபரப்பு விளக்கம்
Ajithkumar Accident: கார் ரேஸில் அஜித் உயிர் தப்பியது எப்படி? மருத்துவர் தந்த பரபரப்பு விளக்கம்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! - பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்! 
எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! - பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்! 
Embed widget