மேலும் அறிய
Advertisement
Kamarajar Birthday: களத்தில் விஜய் மக்கள் இயக்கம்.. பேரணியாக சென்று காமராஜர் சிலைக்கு மரியாதை
காமராஜரின் 121வது பிறந்தநாளை ஒட்டி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பேரணியாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காமராஜரின் 121வது பிறந்தநாளை ஒட்டி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பேரணியாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காமராஜரின் 121 வது பிறந்தநாள்
காஞ்சிபுரம் (Kanchipuram News): முன்னாள் முதலமைச்சர் கல்வி கண் திறந்த காமராஜர் அவர்களின் 121வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். நடிகர் விஜய் அவரின் மக்கள் இயக்க மன்ற சார்பில் காமராஜரின் 121 வது பிறந்தநாளை ஒட்டி தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்தன் தெரிவித்திருந்தார்.
காமராஜர் திருஉருவ சிலை
இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் சார்பாக விஜய் மக்கள் இயக்க காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் தென்னரசு தலைமையில், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் விஜய் ரசிகர்கள் 100க்கும் மேற்பட்டோர் தேரடியில் இருந்து பேரணியாக நடந்து வந்து காந்தி சாலையில் உள்ள காமராஜர் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின் காமராஜர் வாழ்க என கோஷமிட்டனர்.
செங்கல்பட்டில் மாலை அணிவித்து மரியாதை
இதேபோன்று செங்கல்பட்டிலும், செங்கல்பட்டு மாவட்ட தலைவர் சங்கை C. சூரிய நாராயணன் தலைமையில், 50-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் செங்கல்பட்டு மாவட்ட தொண்டரணி தலைவர் எம்.எஸ். பாலாஜி உள்ளிட்ட ஏராளமான விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், உள்ள காமராஜர் சிலைக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் மரியாதை செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
களத்தில் விஜய் மக்கள் இயக்கம்
தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கத்தினர் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது விஜய் அரசியலை நோக்கி நகர்வதையை குறிப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர். ஒருபுறம் விஜய் மக்கள் இயக்கத்தினர் இது போன்ற கவன ஈர்ப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தாலும், மறுபுறத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினர் தங்கள் இயக்க கட்டமைப்பையும் தீவிரப் படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion