மேலும் அறிய

Kallakurichi incident: பள்ளி கலவரத்தில் போலீசார் மீது கற்கள் வீசிய 6 பேர் கைது

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: பள்ளி கலவரத்தில் போலீசார் மீது கற்கள் வீசிய வாலிபர்கள் மற்றும் வாட்ஸ் அப் அட்மின் உட்பட 6 பேர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூர் தனியார் பள்ளியில் மர்மமான முறையில் மாணவி உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி வேண்டும் என்று கூறி நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது கலவரமாக மாறியது.  இந்த கலவரத்தில் தொடர்புடையவர்கள் என 300 பேரை சின்னசேலம் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதில் 20 பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து, பள்ளியில் கலவரத்தில் ஈடுபட்டவர்களை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்து வருகிறார்கள். அந்த வகையில் கலவரத்தில் ஈடுபட்டதாக பண்ருட்டி அருகே உள்ள சிறுகிராமம் தட்சிணாமூர்த்தி மகன் சஞ்சீவ் (வயது 22), சின்னசேலம் அருகே தகரை மெயின் ரோட்டை சேர்ந்த ஆறுமுகம் மகன் பாலாஜி (23), தியாகதுருகம் அடுத்த புதுபல்லகச்சேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் பரமேஸ்வரன்(22), வேப்பூர் சேப்பாக்கம் நடுத்தெருவை சேர்ந்த கொளஞ்சி மணி மகன் விஜய் (28), கச்சராபாளையம் அடுத்த மட்டப்பாறை ஏழுமலை மகன் துரைப்பாண்டி(20), வேப்பூர் அருகே காசாக்குடி கிராமம் மேற்கு தெருவை சேர்ந்த குமரவேல் மகன் அய்யனார் ஆகியோரை சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்தனர்.

Kallakurichi incident: பள்ளி கலவரத்தில் போலீசார் மீது கற்கள் வீசிய 6 பேர் கைது

சின்னசேலம் கனியாமூர் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் கலவரத்தில் முடிந்தது. இது தொடர்பாக சின்னசேலம் காவல் துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினர். சமூக வலைதளங்கள், தொலைக்காட்சிகள் பதிவுகளின் அடிப்படையில் வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்ட போலீஸார் 128 பேர் மீது 147 (சட்ட விரோதமாக கூடுதல்),148(ஆயுதங்களுடன் கூடுதல்) , 294(b) (ஆபாசமாக பேசுதல்), மற்றும் 323,324, 352, 332, 336, 435, 436,379,IPC.r/w.3,4,5.of  பொதுச் சொத்தை சேதப்படுத்துதல்,  உள்ளிட்ட 14 பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்து கைது செய்தனர்.

Kallakurichi: school issue Do not participate protests if they say they are protesting without permission Police warning

பின்னர் அவர்களை கள்ளக்குறிச்சி 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி முகமது அலி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில் 20 சிறுவர்கள் கடலூர் கூர்நோக்கு சிறார் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.  இதில் கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட 108 பேரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க பொறுப்பு நீதிபதி முகமது அலி உத்தரவிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட‌ அனைவரும் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK 1st Anniversary: தவெக 2ம் ஆண்டு தொடக்கமே அசத்தல்..#GetOut கையெழுத்து இயக்கத்தை தொடங்கிய விஜய்..
தவெக 2ம் ஆண்டு தொடக்கமே அசத்தல்..#GetOut கையெழுத்து இயக்கத்தை தொடங்கிய விஜய்..
Watch Video: விஜய் தொடங்கிய கையெழுத்து இயக்கம்.. கையெழுத்து போட மறுத்த பிரசாந்த் கிஷோர்
Watch Video: விஜய் தொடங்கிய கையெழுத்து இயக்கம்.. கையெழுத்து போட மறுத்த பிரசாந்த் கிஷோர்
TVK 1st Anniversary LIVE:  தொடங்கியது தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழா! முழு நேரலை...
TVK 1st Anniversary LIVE: தொடங்கியது தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழா! முழு நேரலை...
ஆரம்பமே அதிரடி.. விஜயுடன் மேடையேறிய பிரசாந்த் கிஷோர்! தொடங்கியது தவெகவின் இரண்டாம் தொடக்க விழா
ஆரம்பமே அதிரடி.. விஜயுடன் மேடையேறிய பிரசாந்த் கிஷோர்! தொடங்கியது தவெகவின் இரண்டாம் தொடக்க விழா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK 1st Anniversary: தவெக 2ம் ஆண்டு தொடக்கமே அசத்தல்..#GetOut கையெழுத்து இயக்கத்தை தொடங்கிய விஜய்..
தவெக 2ம் ஆண்டு தொடக்கமே அசத்தல்..#GetOut கையெழுத்து இயக்கத்தை தொடங்கிய விஜய்..
Watch Video: விஜய் தொடங்கிய கையெழுத்து இயக்கம்.. கையெழுத்து போட மறுத்த பிரசாந்த் கிஷோர்
Watch Video: விஜய் தொடங்கிய கையெழுத்து இயக்கம்.. கையெழுத்து போட மறுத்த பிரசாந்த் கிஷோர்
TVK 1st Anniversary LIVE:  தொடங்கியது தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழா! முழு நேரலை...
TVK 1st Anniversary LIVE: தொடங்கியது தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழா! முழு நேரலை...
ஆரம்பமே அதிரடி.. விஜயுடன் மேடையேறிய பிரசாந்த் கிஷோர்! தொடங்கியது தவெகவின் இரண்டாம் தொடக்க விழா
ஆரம்பமே அதிரடி.. விஜயுடன் மேடையேறிய பிரசாந்த் கிஷோர்! தொடங்கியது தவெகவின் இரண்டாம் தொடக்க விழா
MK Stalin : “அழிக்க நினைக்கின்றீர்களா? நாம் தமிழர்! – முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு அறிவிப்பு..!
MK Stalin : “அழிக்க நினைக்கின்றீர்களா? நாம் தமிழர்! – முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு அறிவிப்பு..!
களைகட்டும் தவெக 2ம் ஆண்டு விழா; பாஜக, திமுக-விற்கு எதிராக பேனர்கள்! என்ன பேசுவார் விஜய்?
களைகட்டும் தவெக 2ம் ஆண்டு விழா; பாஜக, திமுக-விற்கு எதிராக பேனர்கள்! என்ன பேசுவார் விஜய்?
Seeman About Kaliammal: காளியம்மாள் தவெகவில் சேர உள்ளது தனக்கு முன்கூட்டியே தெரியும், தங்கைக்கு வாழ்த்துக்கள் - சீமான்
காளியம்மாள் தவெகவில் சேர உள்ளது தனக்கு முன்கூட்டியே தெரியும், தங்கைக்கு வாழ்த்துக்கள் - சீமான்
Tamilnadu Roundup: விஜய்க்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு! இன்று மகாசிவராத்தரி - பரபரக்கும் தமிழ்நாடு
Tamilnadu Roundup: விஜய்க்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு! இன்று மகாசிவராத்தரி - பரபரக்கும் தமிழ்நாடு
Embed widget