மேலும் அறிய

Magalir Urimai Thogai: மாதந்தோறும் 15-ஆம் தேதி.. மகளிர் உரிமைத் தொகை குறித்து வெளியான முக்கிய தகவல்..!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மாதந்தோறும் 15 ஆம் தேதி வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என  தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மாதந்தோறும் 15 ஆம் தேதி வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என  தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை

தமிழ்நாட்டில் உள்ள குடும்பத்தலைவிகள் பெரிதும் எதிர்பார்த்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இனி தகுதியுள்ள மகளிருக்கு மாதம் ரூ.1,000 அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிதிச்சுமை உள்ளிட்ட பல காரணங்களால் இந்த திட்டம் தொடங்கப்படாமல் இருந்தது. இதற்கிடையில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என முதலமைச்சர் மு,க.ஸ்டாலின் அறிவித்தார். 

அதன்படி இத்திட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் விறுவிறுப்பாக கடந்த இரு மாதங்களாக நடைபெற்றது. 3 கட்டங்களாக விண்ணப்பங்கள் பொதுமக்களிடமிருந்து பெறும் வகையில் முகாம்கள் நடைபெற்றது. தொடர்ந்து வீடு, வீடாக சென்று விண்ணப்பத்தில் அளிக்கப்பட்ட தகவல்கள் சரிபார்க்கப்பட்டது. தொடர்ந்து நேற்றைய தினம் காலையில் ரூ.1, 10 பைசா ஆகியவை அனுப்பி வங்கி கணக்கு விவரங்கள் சரிபார்க்கப்பட்டது. 

திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்

இந்நிலையில் அண்ணா பிறந்தநாளான இன்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், எம்.பி.,க்களால் இந்த திட்டமானது தொடங்கி வைக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில் இத்திட்டத்திற்கு ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில்,  1.63 கோடி பேர் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில்  1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் தகுதியுள்ள குடும்ப பெண்கள் இத்திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர். 

அவர்கள் அனைவரது வங்கி கணக்கிலும் முதல் தவணை தொகையாக ரூ.1,000 செலுத்தப்பட்டது. மேலும் நேற்றே பலரது வங்கி கணக்கிலும் பணம் அனுப்பி இன்ப அதிர்ச்சி கொடுத்தது அரசு. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். அதேசமயம் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பத்தாரர்கள், மீண்டும் உரிமைத் தொகை பெற தகுதியுடையவராக இருந்தால் அடுத்த 30 நாட்களுக்குள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட காரணம் செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் சம்பந்தப்பட்டவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இனிமேல் மாதந்தோறும் 15ஆம் தேதி தான்

இந்நிலையில் மாதந்தோறும் 15ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகையானது சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1ஆம் தேதி ஊழியர்களின் சம்பளம் தொடர்பான பல பரிவர்த்தனைகள் நடப்பதால் சிக்கல் ஏற்படாத வண்ணம் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
New Kia Seltos vs Tata Sierra: புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
Udhayanidhi:
Udhayanidhi: "அடிமைகள், சங்கிகள், பாசிசம்.." எதிர்க்கட்சிகளை விளாசிய உதயநிதியின் அனல்பறந்த பேச்சு
Australia Gun Shoot: அடப்பாவமே.! ஆஸ்திரேலிய கடற்கரையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 12 பேர் பலி, பலர் காயம்
அடப்பாவமே.! ஆஸ்திரேலிய கடற்கரையில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 12 பேர் பலி, பலர் காயம்
Embed widget