Magalir Urimai Thogai: மாதந்தோறும் 15-ஆம் தேதி.. மகளிர் உரிமைத் தொகை குறித்து வெளியான முக்கிய தகவல்..!
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மாதந்தோறும் 15 ஆம் தேதி வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
![Magalir Urimai Thogai: மாதந்தோறும் 15-ஆம் தேதி.. மகளிர் உரிமைத் தொகை குறித்து வெளியான முக்கிய தகவல்..! Kalaignar Magalir Urimai Scheme implemented amount will be credited on 15th of every month Magalir Urimai Thogai: மாதந்தோறும் 15-ஆம் தேதி.. மகளிர் உரிமைத் தொகை குறித்து வெளியான முக்கிய தகவல்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/15/32b7d5b37d412ec1ebd46f3618a44c401694765034412572_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மாதந்தோறும் 15 ஆம் தேதி வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை
தமிழ்நாட்டில் உள்ள குடும்பத்தலைவிகள் பெரிதும் எதிர்பார்த்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இனி தகுதியுள்ள மகளிருக்கு மாதம் ரூ.1,000 அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிதிச்சுமை உள்ளிட்ட பல காரணங்களால் இந்த திட்டம் தொடங்கப்படாமல் இருந்தது. இதற்கிடையில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என முதலமைச்சர் மு,க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி இத்திட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் விறுவிறுப்பாக கடந்த இரு மாதங்களாக நடைபெற்றது. 3 கட்டங்களாக விண்ணப்பங்கள் பொதுமக்களிடமிருந்து பெறும் வகையில் முகாம்கள் நடைபெற்றது. தொடர்ந்து வீடு, வீடாக சென்று விண்ணப்பத்தில் அளிக்கப்பட்ட தகவல்கள் சரிபார்க்கப்பட்டது. தொடர்ந்து நேற்றைய தினம் காலையில் ரூ.1, 10 பைசா ஆகியவை அனுப்பி வங்கி கணக்கு விவரங்கள் சரிபார்க்கப்பட்டது.
திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்
இந்நிலையில் அண்ணா பிறந்தநாளான இன்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், எம்.பி.,க்களால் இந்த திட்டமானது தொடங்கி வைக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில் இத்திட்டத்திற்கு ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், 1.63 கோடி பேர் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் தகுதியுள்ள குடும்ப பெண்கள் இத்திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்கள் அனைவரது வங்கி கணக்கிலும் முதல் தவணை தொகையாக ரூ.1,000 செலுத்தப்பட்டது. மேலும் நேற்றே பலரது வங்கி கணக்கிலும் பணம் அனுப்பி இன்ப அதிர்ச்சி கொடுத்தது அரசு. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். அதேசமயம் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பத்தாரர்கள், மீண்டும் உரிமைத் தொகை பெற தகுதியுடையவராக இருந்தால் அடுத்த 30 நாட்களுக்குள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட காரணம் செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் சம்பந்தப்பட்டவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனிமேல் மாதந்தோறும் 15ஆம் தேதி தான்
இந்நிலையில் மாதந்தோறும் 15ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகையானது சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1ஆம் தேதி ஊழியர்களின் சம்பளம் தொடர்பான பல பரிவர்த்தனைகள் நடப்பதால் சிக்கல் ஏற்படாத வண்ணம் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)