Senthil Balaji Case: அனல் பறக்கும் வாதம்... இன்றே இறுதி கட்டம்... எப்படி இருக்கும் மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பு.. செந்தில் பாலாஜிக்கு திக் திக்!
அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீது இன்று இறுதி கட்ட விசாரணை நீதிபதி சி.வி. கார்த்திகேயன் அமர்வில் நடைபெறுகிறது.
![Senthil Balaji Case: அனல் பறக்கும் வாதம்... இன்றே இறுதி கட்டம்... எப்படி இருக்கும் மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பு.. செந்தில் பாலாஜிக்கு திக் திக்! Justice C.V. Karthikeyan will hear the final stage of the recruitment petition filed by the wife of Minister Senthil Balaji today at madras high court Senthil Balaji Case: அனல் பறக்கும் வாதம்... இன்றே இறுதி கட்டம்... எப்படி இருக்கும் மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பு.. செந்தில் பாலாஜிக்கு திக் திக்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/14/ae16854a390fbb0a0be0525d3ee6f14e1689310214034589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ஜூன் மாதம் 13ஆம் தேதி காலை 8 மணிக்கு அமலாக்கத்துறை சோதனை செய்தது. 17 மணி நேர சோதனைக்குப் பின்னர் அமலாக்கத்துறை அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றது. அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்படவே, உடனே ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவரை ஜூன் 28 ஆம் தேதி வரை காவலில் வைக்க சென்னை முதன்மை செஷனல் நீதிபது அல்லி உத்தரவிட்டார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், செந்தில் பாலாஜி ஓமந்துரார் அரசு மருத்துவமனையில் இருந்து, காவேரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
ஜூன் 21 ஆம் தேதி காலை 5 மணிக்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. ஜூன் 28 ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு காவல் நிறைவு பெற அவர் காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரிடம் நலம் விசாரித்த நீதிபதி அல்லி அவரது காவலை ஜூலை 12 ஆம் தேதி வரை நீடித்து உத்தரவிட்டார். தற்போது வரை அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது ஒருபுறம் இருக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு ஆட்கொணர்வு மனு மீது இர்ண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது இரு நீதிபதிகளின் திர்ப்பு மாறுபடவே மூன்றாவது நீதிபதி சி.வி கார்த்திகேயன் அமர்வுக்கு விசாரணை மாற்றம் செய்யப்பட்டது. செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபிலும் , அமலாக்கத்துறை தரப்பில் துஷார் மேத்தாவும் ஆஜராகி தங்களது வாதத்தை முன்வைத்தனர். மேலும் ஜூலை 12 ஆம் தேதி செந்தில் பாலாஜியின் காவல் நிறைவு பெற முதன்மை அமர்வு நீதிமன்றம் காவலை நீடிக்கலாம் என கூறவே, ஜூலை 26 ஆம் தேதி வரை காவல் நீடிக்கப்பட்டது.
கபில் சிபில் வாதம்:
”செந்தில் பாலாஜியை குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் கைது செய்யவில்லை. சட்டவிரோத பண பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சட்டவிரோத பண பரிவர்த்தனை தடைச் சட்டப் பிரிவுகளின்படி அமலாக்கத் துறை விசாரணை நடத்த முடியுமே தவிர, புலன் விசாரணை மேற்கொள்ள முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடியாது" என தெரிவித்தார்.
என்.ஆர் இளங்கோ வாதம்:
"கைது, அடிப்படை உரிமைகளை மீறுவதாக இருந்து அதை கருத்தில் கொள்ளாமல் நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவிட்டால், அது சட்டவிரோதம். ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது என இரு நீதிபதிகளும் கூறியுள்ளனர். செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவு பிறப்பித்த பின், நீதிமன்ற காவலில் வைக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்த நீதிபதியின் இந்த நடைமுறை சரியானதல்ல” என குறிப்பிட்டார்.
துஷார் மேத்தா வாதம்:
” புலன் விசாரணை செய்ய முழு அதிகாரம் உள்ளது என்றும் தவறான விசாரணை என்றால் விசாரணை அதிகாரிக்கு தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது என்றும் கூறினார். மேலும் ” சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்குகளில் கைதுக்கு முன் சேகரிக்கப்படும் ஆதாரங்கள், ஆரம்பகட்ட முகாந்திரம் தானே தவிர, அந்த ஆதாரங்கள் மூலம் வழக்கில் முடிவு காண முடியாது. அதனால் புலன் விசாரணையும், கைது செய்யப்பட்டவரை காவலில் வைத்து விசாரிப்பதும் அவசியமானது. கைதுக்கு பிறகு புலன் விசாரணை செய்யவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின் மேல் விசாரணை செய்யவும் அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது” என வாதிட்டார்.
இன்று இறுதி வாதம்:
இப்படி செந்தில் பாலாஜி தரப்பும் அமலாக்கத்துறை தரப்பும் வாதங்களை முன்வைக்கப்பட்ட நிலையில், இறுதி வாதம் இன்று நடைபெறும் என கூறி நீதிபதி சி.வி. கார்த்திகேயன் ஒத்திவைத்தார். இன்று நடைபெறும் விசாரணையை பொறுத்து நீதிபதி சி.வி. கார்த்திகேயன் தீர்ப்பு வழங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)