ஆன்லைனில் ஸ்மார்ட் ரேஷன்கார்டை டவுன்லோடு பண்ணனுமா? இதை செய்யுங்க.. 5 நிமிஷம்தான்..!
ரேஷன் கார்டு அட்டை பெறுவதற்கும், திருத்தங்கள் மேற்கொள்வதற்கும் நாள்கணக்கில் நின்ற காலங்கள் இல்லாமல், வீட்டில் இருந்தே ஆன்லைனில் வெறும் 5 நிமிடங்களில் நமக்கு என்ன தேவையோ? அவ்வசதியை அரசு அளித்துள்ளது.
ரேஷன் கார்டுகளை புதிதாகப் பெறவேண்டும் என்றாலும், முகவரி, பெயர் போன்ற திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும் என்றாலும், அதற்குரிய அலுவலகங்களுக்குச் சென்று நாள்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் இப்பொழுது ஆன்லைனில் பதிவு செய்தவுடனே எளிதில் பெறக்கூடிய வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது.
ரேஷன் கார்டு என்பது மக்களின் உணவுத்தேவைகளை நிவர்த்தி செய்யும் விதமாக, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் மூலம் வழங்கப்படும் ஒரு வகையான முக்கிய ஆவணமாகும். தற்போது ஸ்மார்ட் கார்டு போன்று பெறப்படும் இந்த ரேசன் அட்டைகளைப்பயன்படுத்தி, நியாய விலைக்கடைகளில் மானிய விலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற பொருட்களை மக்கள் பெற்றுவருகின்றனர். இதோடு கொரோனாக் காலக்கட்டத்தில் வழங்கப்பட்ட நிவாரணத்தொகையும் பெறுவதற்கு ரேஷன் கார்டு முக்கிய பங்கு வகித்தது. இந்நிலையில் தான் தற்பொழுது தமிழக அரசு புதிதாக ரேஷன் கார்டுகளை விண்ணப்பிக்கும் நபர்களுக்கு, ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் 15 நாட்களில் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
ஆனால் முன்பெல்லாம் ரேஷன் கார்டு அட்டைப்பெறுவதற்கு மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு நாள் கணக்கில் நின்ற காலங்கள் இல்லாமல், வீட்டில் இருந்தே ஆன்லைனில் வெறும் 5 நிமிடங்களில் நமக்கு என்ன தேவையோ? அதனைப்பெறக்கூடிய வசதியினையும் அரசு மேற்கொண்டுள்ளது. இந்நேரத்தில் எப்படி நாம் ஆன்லைனில் நம்முடைய ஸ்மார்ட் கார்டினை டவுன்லோடு செய்வது மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வது என அறிந்து கொள்வோம்.
ரேஷன் கார்டினை ஆன்லைனின் பதிவிறக்கம் செய்யும் முறை:
தமிழக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் https://www.tnpds.gov.in/home.xhtml என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளப்பக்கத்திற்கு முதலில் செல்ல வேண்டும்.
பின்னர் பயனாளர் நுழைவு என்னும் டேப்பினை கிளிக் செய்ய வேண்டும்.
உள்ளே சென்றதும், ரேஷன் கார்டு வாங்குவதற்கு கொடுக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணினை அதில் உள்ளீடு செய்ய வேண்டும்.
இதனையடுத்து பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் ஒரு முறை கடவுச்சொல்லினை ( OTP) உள்ளீடு செய்ய வேண்டும்.
அடுத்ததாக, குடும்ப அட்டையப் பதிவிறக்கும் செய்யும் டேப்பினை காணமுடியும். அதனுள் சென்றதும், ‘ smart card print’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்தப்பின் அதில் கேட்கப்பட்டிருக்கும் மொழியினை தேர்வு செய்ய வேண்டும்.
இறுதியாக save எனக்கொடுத்தால் PDF வடிவத்தில் ஸ்மார்ட் கார்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
குடும்ப அட்டையில் திருத்தங்கள் செய்வது எப்படி?
குடும்ப அட்டைகளில் பெரும்பாலும் முகவரியினைத் தவறுதலாக போடுவது, பெயரில் உள்ள எழுத்துப்பிழைகள் உள்ளிட்ட பிரச்சனைகள்தான் ஏற்படும். இதனையெல்லாம் வெறும் 5 நிமிடங்களில் ஆன்லைனில் சரிசெய்யும் வசதிகளை அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி,
குடும்ப அட்டையில் திருத்தம் செய்ய வேண்டும் எனில் முதலில், https://www.tnpds.gov.in/home.xhtml என்ற இணையதளப்பக்கத்திற்கு செல்ல வேண்டும். உள்ளே சென்றதும் பயனாளர் நுழைவு என்னும் டேப்பினை கிளிக் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதன் உள்ளே பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணினை உள்ளீடு செய்ய வேண்டும். பின்னர் மொபைல் எண்ணிற்கு வரும் ஒரு முறை கடவுச்சொல்லினை உள்ளீடு செய்ய வேண்டும்.
இதனையடுத்து இணையப்பக்கத்தில் காணப்படும், ‘ Smart card details’என்ற ஆப்சனை கிளிக் செய்து உள்ளே நுழைந்த பின்பாக, edit என்ற பட்டனை கிளிக் செய்து தேவையான திருத்தகங்களை செய்து கொள்ளலாம்.
பின்னர், நாம் என்ன திருத்தம் செய்ய வேண்டும் என்று இருக்கிறோமோ? அதற்கான ஆவணங்களின் நகல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இறுதியாக submit எனும் பட்டனைக் கிளிக் செய்யும்பொழுது நாம் மேற்கொண்ட திருத்தங்கள் அனைத்தும் அப்பேட் ஆகியிருக்கும்.
மேலும் புதிய ரேசன் கார்டு விண்ணப்பிக்கும் நபர்கள், முதலில் ஏற்கனவே உள்ள கார்டில் பெயரினை நீக்கம் செய்து பின்னர் அரசு தெரிவித்துள்ள அனைத்து ஆவணங்களின் உதவியோடு புதிய ரேசன் கார்டினை 15 நாட்களில் பெற்றுவிட முடியும்.