கரூர் அருகே ஜல்லிக்கட்டுக்கு தயாராகி வந்த காளை உயிரிழப்பு - ஒப்பாரி வைத்து பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
’’ஊர் பொதுமக்கள் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மக்கள் புத்தாடைகள், மாலைகள் கொண்டு வந்து கண்ணீர் மல்ல ஒப்பாரி பாடல்கள் பாடி அஞ்சலி’’
கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியம் பகுதி அருகே உள்ளது ஆர்டி மலை ஊராட்சி கரையூரான் நீலமேகம், கருப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 28 நாள் அன்று கிராம பொதுமக்கள் சார்பாக 500-க்கும் மேற்பட்ட கிடாக்கள் வெட்டி சிறப்பு பூஜை வழிபாடு செய்யப்பட்டு பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அன்னதானம் வழங்கி வருவது வழக்கமாக இருந்து வந்தது. இது கரூர் மாவட்டம் அளவில் பிரபலமாக இருந்து வருகிறது.
இதே போல கரையூரான் கோவிலிக்கு வரும் பக்தர்கள் சார்பாக நேற்றி கடனுக்காக ஜல்லிக்கட்டு மாடுகள் வளர்க்கப்பட்டு வந்தது. இதே போல அழகாபுரியை சேர்ந்த இன்ஜினியர் மார்க்கண்டன் என்ற பக்தர் கரையூரான் கோவிலுக்கு நேர்த்திக் கடனுக்காக கரையோர நீலமேக கருப்பு காளை என்ற பெயரில் கருப்பு நிற காளை மாடு வளர்த்து வந்தார். இந்த காளை திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, பெரம்பலூர், அரியலூர், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் கலந்து வெற்றி பெற்றுள்ளது.
கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
ஆர்.டி மலை ஜல்லிக்கட்டு வாடி வாசலில் கருநீலம் கோவில் காளை நின்று விளையாடி மாடு பிடி வீரர்களிடம் பிடிபடாமல் வெற்றி பெற்று பல்வேறு பரிசுகளை பெற்று உள்ளது. இதனால் கரையூரான் நீளமாக கருப்பசாமி என்றும் கிராம மக்கள் செல்லமாக அழைத்து வந்தனர். தை மாதம் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு கரையோரம் நீளமும் கருப்பசாமி காளையை தயார் படுத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல் சோர்வுற்று இருந்து வந்தது தெரியவருகிறது.
நேற்று காலை திடீரென்று கருப்பு காளை இறந்துள்ளது. இதனால் கரையூரான் கருப்பு காளையை பராமரித்து வந்த மார்க்கண்டன் அதிர்ச்சி அடைந்தார். மேலும், கோவில் காளை இறந்த தகவல் கிராம மக்களுக்கு பரவியது. இதனால் கிராம மக்கள் புத்தாடைகள், மாலைகள் கொண்டு வந்து கண்ணீர் மல்ல ஒப்பாரி பாடல்கள் பாடி அஞ்சலி செலுத்தினார்கள். இதன் இறுதி ஊர்வலம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பல்வேறு தெருக்கள் வழியாக தாரை தப்பட்டை முழங்க வாண வேடிக்கையுடன் கரையூரான் கோவில் அருகில் உள்ள இடத்தில் கரையோரமாக கருப்பு காளையை அடக்கம் செய்தனர். தோகைமலை அருகே கரையூரான் கருப்பு காளை இழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- பொங்கல் பரிசுத்தொகுப்பில் 2.5 டன் கெட்டுப்போன வெல்லம் - திரும்பி எடுத்துச்செல்ல உத்தரவிட்ட ஆட்சியர்