CM MK Stalin Meeting: அமைச்சரவையில் மாற்றமா? பறிக்கப்படுகிறதா செந்தில்பாலாஜி பதவி? முதலமைச்சர் தீவிர ஆலோசனை..!
தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்ட நிலையில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
![CM MK Stalin Meeting: அமைச்சரவையில் மாற்றமா? பறிக்கப்படுகிறதா செந்தில்பாலாஜி பதவி? முதலமைச்சர் தீவிர ஆலோசனை..! It has been reported that there will be a change in the Cabinet while the Chief Minister of Tamil Nadu is consulting. CM MK Stalin Meeting: அமைச்சரவையில் மாற்றமா? பறிக்கப்படுகிறதா செந்தில்பாலாஜி பதவி? முதலமைச்சர் தீவிர ஆலோசனை..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/14/c4df3730dd3675557a844ffba54f27db1686731894893589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்ட நிலையில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
செந்தில்பாலாஜி கைது:
முந்தைய அதிமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி அந்த துறையில் வேலைவாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக பலரும் வழக்கு தொடர்ந்தனர். சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் நேற்று காலை முதல் அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு, தலைமைச்செயலகத்தில் உள்ள அவரது அறை உள்ளிட்ட தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடந்தனர். இதேபோல் செந்தில்பாலாஜியின் கரூர் வீடு உள்ளிட்ட 8 இடங்களிலும் சோதனையானது நடந்தது.
சுமார் 17 மணி நேரம் இந்த சோதனை நீடித்தது. தலைமைச்செயலகத்தில் நடந்த சோதனையின் போது 3 பைகளில் ஆவணங்கள் எடுத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து அதிகாலை 2 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். செந்தில் பாலாஜி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டாரா அல்லது கைது செய்யப்பட்டாரா என்ற குழப்பம் நிலவிய நிலையில், அவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் சட்ட ஆலோசனை:
இதற்கிடையில் அதிகாரிகள் அழைத்து செல்லும்போது செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் ஓமந்துரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அங்கு துணை ராணுவத்தினரும், போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். செந்தில்பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அறிந்த அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், ரகுபதி, எ.வ.வேலு, கே.என். நேரு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அன்பில் மகேஸ், பொன்முடி, டிஆர்பி ராஜா திமுக எம்.பி. என்.ஆர்.இளங்கோ உள்ளிட்டோர் நேரடியாக மருத்துவமனைக்கு வருகை தந்து நலம் விசாரித்தனர்.
இதற்கு முன் இன்று காலை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்ட வல்லுநர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். இந்த ஆலோசனையில் சட்ட ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்கப்படலாம் என்பது தொடர்பாக கேட்டறிந்தார். இப்படிபட்ட சூழலில் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டிருக்கும் மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையை வேறு ஒருவருக்கு வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பலரும் அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என கூறி வரும் நிலையில் தற்போது அவருக்கான துறையை வேறு ஒருவருக்கு மாற்றப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறுதியான அதிகாரப்பூர்வ தகவல் அல்ல... ஆனால், வாய்ப்புகள் அதிகம். பதவி பறிக்கப்பட்டால் யாருக்கு இந்த இலாக்காக்கங்கள் வழங்கப்படும் என செய்தியில் இவற்றை சேர்த்து எதிர்பார்க்கப்படுகிறது என வெளியிடலாம். மின்சார துறையை தங்கம் தென்னரசுவிற்கும்,மதுவிலக்கு ஆயதீர்வுதுறை ஐ பெரியசாமிக்கும் கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)