மேலும் அறிய

Mettur Dam : மேட்டூர் அணையின் நீர் வரத்து 54 கன அடியில் இருந்து 67 கன அடியாக அதிகரிப்பு.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 4,600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடியாக குறைந்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 42 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 54 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 67 கன அடியாக அதிகரித்துள்ளது. 

Mettur Dam : மேட்டூர் அணையின் நீர் வரத்து 54 கன அடியில் இருந்து 67 கன அடியாக அதிகரிப்பு.

நீர்மட்டம்:

அணையின் நீர் மட்டம் 62.77 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 26.77 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக கடந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை, சம்பா அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 4,600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடியாக குறைந்துள்ளது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Mettur Dam : மேட்டூர் அணையின் நீர் வரத்து 54 கன அடியில் இருந்து 67 கன அடியாக அதிகரிப்பு.

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 90.23 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 16.07 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 278 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 754 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 51.12 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 11.74 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 53 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை ?
கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை ?
Breaking News LIVE: கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்.. 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!
Breaking News LIVE: கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்.. 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!
GOAT : கோட் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கிவிட்டது!
GOAT : கோட் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கிவிட்டது!
Yellow Fever: தடுப்பூசி இல்லை என்றால் இந்தியாவுக்கு நோ எண்ட்ரி.. மஞ்சள் காய்ச்சல் அலர்ட்..
தடுப்பூசி இல்லை என்றால் இந்தியாவுக்கு நோ எண்ட்ரி.. மஞ்சள் காய்ச்சல் அலர்ட்..
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Muttukadu Boat House : முட்டுக்காடு SUMMER SPECIAL 1 DAY PLAN-க்கு ரெடியா? இவ்வளவு OFFER இருக்கா?Suchitra interview  : ”ஐஸ்வர்யா நல்ல அம்மாவா? என் சப்போர்ட் தனுஷூக்கு தான்” பகீர் கிளப்பிய சுச்சிGV Prakash Saindhavi Divorce : ”ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்”  எமோஷனலான GV, சைந்தவிVenkatesh Bhat : SUN TV vs VIJAY TV வெங்கடேஷ் பட் பதிலடி போட்டியில் முந்துவது யார்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை ?
கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை ?
Breaking News LIVE: கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்.. 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!
Breaking News LIVE: கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்.. 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!
GOAT : கோட் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கிவிட்டது!
GOAT : கோட் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கிவிட்டது!
Yellow Fever: தடுப்பூசி இல்லை என்றால் இந்தியாவுக்கு நோ எண்ட்ரி.. மஞ்சள் காய்ச்சல் அலர்ட்..
தடுப்பூசி இல்லை என்றால் இந்தியாவுக்கு நோ எண்ட்ரி.. மஞ்சள் காய்ச்சல் அலர்ட்..
PM Modi's Nomination: நாடாளுமன்ற தேர்தல் - வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி!
PM Modi's Nomination: நாடாளுமன்ற தேர்தல் - வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி!
11th Supplementary Exam: பிளஸ் 1 தேர்வு; ஜூலை 2 முதல் துணைத்தேர்வு- மே 15 முதல் மறுகூட்டல் / விடைத்தாள் நகல்
11th Supplementary Exam: பிளஸ் 1 தேர்வு; ஜூலை 2 முதல் துணைத்தேர்வு- மே 15 முதல் மறுகூட்டல் / விடைத்தாள் நகல்
Cow Theft:
"பீப் கடைக்கு " மாடுகளை திருடிய பார்ட் டைம் திருடர்கள் ..! ஜெயிலுக்கு அனுப்பிய போலீஸ் ..!
Fact Check: மோடிக்கு எதிரான பேச்சு - பரப்புரையில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கப்பட்டாரா? உண்மை என்ன?
Fact Check: மோடிக்கு எதிரான பேச்சு - பரப்புரையில் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கப்பட்டாரா? உண்மை என்ன?
Embed widget