மேலும் அறிய

மேட்டூர் அணையின் நீர் வரத்து 197 கன அடியில் இருந்து 199 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 255 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 197 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 199 கன அடியாக அதிகரித்துள்ளது. 

மேட்டூர் அணையின் நீர் வரத்து 197 கன அடியில் இருந்து 199 கன அடியாக அதிகரிப்பு

நீர்மட்டம்:

அணையின் நீர் மட்டம் 70.49 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 33.12 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை, சம்பா அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் நீர் வரத்து 197 கன அடியில் இருந்து 199 கன அடியாக அதிகரிப்பு

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 92.08 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 17.21 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 647 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 1,002 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 54.07 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 13.23 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 180 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Alert: சென்னை டூ செங்கல்பட்டு - ”டமால் டுமீல்” இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு - தமிழ்நாடு வெதர்மேன்
TN Rain Alert: சென்னை டூ செங்கல்பட்டு - ”டமால் டுமீல்” இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு - தமிழ்நாடு வெதர்மேன்
TN Rain Alert: சென்னையில் மழை, 6 மாவட்ட மக்களே தயாரா..! கொட்டி தீர்க்கப்போகும் கனமழை - வானிலை அறிக்கை சொல்வது என்ன?
TN Rain Alert: சென்னையில் மழை, 6 மாவட்ட மக்களே தயாரா..! கொட்டி தீர்க்கப்போகும் கனமழை - வானிலை அறிக்கை சொல்வது என்ன?
Hamas Israel: ”ஹமாஸ் தலைவரை கொன்றுவிட்டோம், ஆனால் போரை நிறுத்தமாட்டோம்” - இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு
Hamas Israel: ”ஹமாஸ் தலைவரை கொன்றுவிட்டோம், ஆனால் போரை நிறுத்தமாட்டோம்” - இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு
காவல் நிலையம் அருகே வெடித்து சிதறிய மர்ம பொருள்.. மாமல்லபுரத்தை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்..
காவல் நிலையம் அருகே வெடித்து சிதறிய மர்ம பொருள்.. மாமல்லபுரத்தை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ponmudi vs Senji Masthan : Serious Mode-ல் பொன்முடி!ஹாயாக பிஸ்கட் சாப்பிட்ட மஸ்தான்!பதறிய அதிகாரிகள்Pradeep John vs Sumanth Raman : பிரதீப் ஜான் vs சுமந்த் ராமன்!காரசார வாக்குவாதம்”சும்மா நொய் நொய்-னு”Arun IAS | ”ஐயா நீங்க நல்லா TOP-ல வருவீங்க”காரை நிறுத்திய முதியவர்! நெகிழ்ந்து போன IAS அதிகாரி!Ponmudi Inspection | ”4 நாளா என்ன பண்ணீங்க?”எகிறிய அமைச்சர் பொன்முடி! பதறிய அதிகாரிகள்.

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Alert: சென்னை டூ செங்கல்பட்டு - ”டமால் டுமீல்” இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு - தமிழ்நாடு வெதர்மேன்
TN Rain Alert: சென்னை டூ செங்கல்பட்டு - ”டமால் டுமீல்” இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு - தமிழ்நாடு வெதர்மேன்
TN Rain Alert: சென்னையில் மழை, 6 மாவட்ட மக்களே தயாரா..! கொட்டி தீர்க்கப்போகும் கனமழை - வானிலை அறிக்கை சொல்வது என்ன?
TN Rain Alert: சென்னையில் மழை, 6 மாவட்ட மக்களே தயாரா..! கொட்டி தீர்க்கப்போகும் கனமழை - வானிலை அறிக்கை சொல்வது என்ன?
Hamas Israel: ”ஹமாஸ் தலைவரை கொன்றுவிட்டோம், ஆனால் போரை நிறுத்தமாட்டோம்” - இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு
Hamas Israel: ”ஹமாஸ் தலைவரை கொன்றுவிட்டோம், ஆனால் போரை நிறுத்தமாட்டோம்” - இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு
காவல் நிலையம் அருகே வெடித்து சிதறிய மர்ம பொருள்.. மாமல்லபுரத்தை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்..
காவல் நிலையம் அருகே வெடித்து சிதறிய மர்ம பொருள்.. மாமல்லபுரத்தை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்..
Womens T20 Wordcup: தொடர் வெற்றிகளுக்கு வந்த தடை - ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உலகக் கோப்பை ஃபைனலுக்கு முன்னேறிய தென்னாப்ரிக்கா..!
Womens T20 Wordcup: தொடர் வெற்றிகளுக்கு வந்த தடை - ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உலகக் கோப்பை ஃபைனலுக்கு முன்னேறிய தென்னாப்ரிக்கா..!
Rasi Palan Today Oct 18: மேஷத்துக்கு பயணத்தில் கவனம் தேவை; ரிஷபம் இன்பம்: உங்கள் ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today Oct 18: மேஷத்துக்கு பயணத்தில் கவனம் தேவை; ரிஷபம் இன்பம்: உங்கள் ராசிக்கு என்ன பலன்?
Breaking News LIVE 18th OCT 2024: சென்னை உள்பட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு
Breaking News LIVE 18th OCT 2024: சென்னை உள்பட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு
TN Rain Alert: தமிழ்நாட்டில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு; எந்தெந்த பகுதிகள் தெரியுமா?
தமிழ்நாட்டில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு; எந்தெந்த பகுதிகள் தெரியுமா?
Embed widget