முன்னதாகவே உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி! தமிழகத்தில் நீடிக்கும் மழை! எங்கு எப்போது?
36 மணிநேரத்தில் உருவாகும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் எதிர்பார்க்கப்பட்ட காற்றழுத்த தாழ்வுப்பகுதி முன்னதாகவே உருவாகியுள்ளது. தென் வங்கக்கடல் பகுதியில் காற்றழ்த்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
36 மணிநேரத்தில் உருவாகும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மிதமான மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) April 7, 2025
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து தென் மேற்கு வங்கக்கடலில் நாளை அடையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் வரும் 12-ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
மேலும் இன்று 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
ஏப்ரல் 10, 11ஆம் தேதிகளில் தெற்கு அந்தமான் பகுதிகளில் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் பலத்த காற்று வீசும் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.





















