மேலும் அறிய

IIT Madras: ஐபிஎல் பிரியர்களே.. ஐஐடி மெட்ராஸின் சூப்பர் போட்டி அறிவிப்பு- பரிசுகளும் உண்டு

ஐஐடி‌ மெட்ராஸ்‌ ஐபிஎல்‌ கிரிக்கெட்‌ போட்டிகள்‌ பற்றிய தரவு அறிவியல்‌ போட்டியைத்‌ தொடங்கியுள்ளது. இதில் வெல்வோருக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐஐடி‌ மெட்ராஸ்‌ ஐபிஎல்‌ கிரிக்கெட்‌ போட்டிகள்‌ பற்றிய தரவு அறிவியல்‌ போட்டியைத்‌ தொடங்கியுள்ளது. இதில் வெல்வோருக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விளையாட்டு வீரர்களின்‌ செயல்திறன்‌, அணியின்‌ செயல்திறன்‌, போட்டியின்‌ முடிவுகள்‌ போன்ற கடந்த ஐபிஎல்‌ போட்டிகளின்‌ தரவுத்‌ தொகுப்பைப்‌ பயன்படுத்தி, பல்வேறு போட்டிகளுக்கான பவர்‌ பிளே ஸ்கோர்கள்‌ பற்றிய கணிப்புகளை உருவாக்குவது இதன்‌ நோக்கமாகும்‌.

ஐஐடி மெட்ராஸ்‌ பிஎஸ்‌ பட்டப்படிப்பு (டேட்டா சயின்ஸ்‌ அண்ட்‌ அப்ளிகேஷன்ஸ்)‌, என்பிடெல்‌ ஆகியவை இன்று தொடங்கவிருக்கும்‌ இந்தியன்‌ பிரீமியர்‌ லீக்‌ (ஐபிஎல்‌)-ஐ அடிப்படையாகக்‌ கொண்டு செயற்கை நுண்ணறிவு மற்றும்‌ இயந்திரக்‌ கற்றல்‌ மாதிரிகளை உருவாக்குவதற்கான போட்டியைத்‌ தொடங்கியுள்ளன. 'கிரிக்கெட்‌ அண்ட்‌ கோடிங்‌' என்ற தலைப்பிலான இந்த தரவு அறிவியல் போட்டிக்காக, செயற்கை நுண்ணறிவு, இயந்திரக்‌ கற்றல்‌ நுட்பங்களின்‌ மூலம்‌ திறமையான மாதிரிகளை உருவாக்கி ஐபிஎல்‌ கிரிக்கெட்‌ போட்டிகளின்‌ தரவை பகுப்பாய்வு செய்வதற்கு தரவு விஞ்ஞானிகள்‌ மற்றும்‌ ஆர்வலர்கள்‌ அழைக்கப்படுகிறார்கள்‌.

இப்போட்டிக்கு பதிவு செய்வதற்கான கடைசி நாள்‌ 13 ஏப்ரல்‌ 2023. ஆர்வமுள்ளவர்கள்‌ https://study.iitm.ac.in/ipl-contest என்ற இணைப்பைப்‌ பயன்படுத்தி பதிவு செய்து பங்கேற்கலாம்‌.

கோடிங்‌ தெரியாதவர்களும்‌ பங்கேற்கலாம்

கோடிங்‌கில்‌ அடிப்படை அறிவும்‌, தரவு அறிவியலில்‌ ஆர்வமும்‌ கொண்ட எவரும்‌ தங்களைப்‌ பதிவு செய்துகொண்டு போட்டியில்‌ இடம்பெறலாம்‌.கோடிங்‌ சவால்‌ மட்டுமின்றி, கோடிங்‌ தெரியாதவர்களும்‌ இதில்‌ இடம்பெற வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. புரோகிராமர்கள்‌ அல்லாதோர்‌ எந்தவொரு
கோடிங்கும்‌ எழுதாமல்‌ 'ஸ்கோரை ஊகித்தல்'‌ என்ற நிகழ்வில்‌ பங்கேற்கலாம்‌.

போட்டியின்‌ முக்கிய நோக்கங்களை விளக்கிய ஐஐடி மெட்ராஸ்‌ பேராசிரியர்‌ ஆன்ட்ரூ தங்கராஜ்‌ கூறுகையில்‌, ''விளையாட்டு , தரவு அறிவியல்‌ ஆகிய இரு உலகங்களை ஒருங்கிணைக்கும் வகையில்‌ இப்போட்டியைத் தொடங்குவதில் எங்களுக்கு மகிழ்ச்சி. ஐ.பி.எல்‌, தரவு அறிவியல்‌ ஆகிய இரண்டுமே பிரபலமடைந்து வரும்‌ நிலையில், தரவு அறிவியல் கற்போருக்கு அவர்களின்‌ பகுப்பாய்வுத் திறன்களை தற்போது உள்ள நுறைகளில்‌ வெளிப்படுத்த இப்போட்டி ஒரு வாய்ப்பாக அமையும்‌ என நம்புகிறோம்‌" எனத்‌ தெரிவித்தார்‌.

கடந்த ஐபிஎல்‌ ஆட்டங்களின்போது வீரர்களின்‌ செயல்திறன்‌, அணியின்‌ செயல்திறன்‌, போட்டி முடிவுகள்‌ எவ்வாறு இருந்தன என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக்‌ கொண்ட தரவுத்‌ தொகுப்புகள்‌ இப்போட்டியில்‌ பங்கேற்போருக்கு வழங்கப்பட உள்ளன. வரவிருக்கும்‌ ஐபிஎல்‌ ஆட்டங்களில்‌ அணிகளின்‌ பவர்‌ பிளே ஸ்கோர்கள்‌ பற்றிய கணிப்புகளை உருவாக்க இந்தத் தரவைப்‌ பயன்படுத்துவதுதான்‌ இப்போட்டியின்‌ நோக்கமாகும்‌.

ஐபிஎல்‌ 2023 சீசன்‌ முழுவதும்‌ இந்தப்‌ போட்டி நடத்தப்படும்‌. கணிக்கப்பட்ட மற்றும்‌ உண்மையான மதிப்பெண்களுக்கு இடையேயான வேறுபாடுகளின்‌ அடிப்படையில்‌ பங்கேற்பாளர்கள்‌ புள்ளிகளைப்‌ பெறுவார்கள்‌. போட்டியின் நிறைவில்‌ சிறப்பாகச்‌ செயல்படும்‌ பங்கேற்பாளர்களுக்கு 'பாரடாக்ஸ்‌ 2023'
எனப்படும்‌ வருடாந்திர பி.எஸ்‌. புரோகிராம்‌ தொழில்நுட்ப மற்றும்‌ கலாச்சார நிகழ்வில்‌ கவர்ச்சியான பரிசுகளுடன்‌ கவுரவமும்‌, அங்கீகாரமும்‌ வழங்கப்படும்‌.

புரோகிராமிங்‌ மற்றும்‌ டேட்டா சயின்ஸ்‌ துறையில்‌ ஆர்வமுடைய எவரும்‌ ஐஜடி மெட்ராஸ்‌-ல்‌ படிக்க விரும்பினால்‌ அவர்கள்‌ எங்கிருந்தாலும்‌ தங்கள்‌ கனவை நனவாக்கும்‌ வகையில்‌ பிஎஸ்‌ பட்டப்படிப்பு, என்பிடெல்‌ ஆகிய இரண்டும்‌ தனித்துவான வாய்ப்பை வழங்குகின்றன. மேலும்‌ விவரங்களைக் கீழ்க்காணும்‌ இணையதள முகவரிகளில்‌ காணலாம்‌. 

https://study.iitm.ac.in/ds

https://nptel.ac.in.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

" அரசு மருத்துவமனையில் பணம் கேட்டால் உடனே வேலை காலி " - பணம் கேட்டால் 104-ல் புகார் அளிக்கலாம்
3 கல்யாணம் , போலி சாமியார் அவதாரம் !! ஆட்டோ டிரைவர் கைது !! அதிர்ச்சி பின்னணி
3 கல்யாணம் , போலி சாமியார் அவதாரம் !! ஆட்டோ டிரைவர் கைது !! அதிர்ச்சி பின்னணி
மதுரை: தடை செய்யப்பட்ட குட்கா மீது அதிரடி வேட்டை... 39 கடைகள் சீல் !
மதுரை: தடை செய்யப்பட்ட குட்கா மீது அதிரடி வேட்டை... 39 கடைகள் சீல் !
ஒரே நாளில் ரேஷன் கார்டு பிரச்சினைக்கு தீர்வு! காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!
ஒரே நாளில் ரேஷன் கார்டு பிரச்சினைக்கு தீர்வு! காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"60 நாள் டைம் முடிஞ்சிருச்சு... நடவடிக்கை எங்கே?" - எம்ஜிஆர் பல்கலை விவகாரத்தில் அண்ணாமலை அதிரடி கேள்வி
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Trichy power cut: திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
Embed widget