குட்கா, கஞ்சா அதிகமாகி வருவதால் அதுகுறித்த, விழிப்புணர்வு வாசகம் இடம்பெற வேண்டும் என்கின்ற கோரிக்கை வைக்கிறேன் - முதலமைச்சர் ஸ்டாலின்
அப்பா கலைஞர் முதல் எனது மகன் உதயநிதி வரை திரைத்துறையில் பங்கேற்றுள்ளோம். எனது குடும்பத்தையும் திரை துறையையும் பிரிக்க முடியாது.
கஞ்சா அதிகமாகி வருவதால் படம்போடும் முன் விழிப்புணர்வு வாசகம் இடம்பெற செய்ய வேண்டும் என்று, சென்னையில் தொடங்கிய மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திரைத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னையில் தென்னிந்திய ஊடக பொழுதுபோக்கு மாநாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விழாவில் இயக்குநர் ராஜமெளலி, நடிகர்கள் ஜெயம் ரவி, ஜெயராம், ரமேஷ், அரவிந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிஐஐ கூட்டமைப்பு சார்பில் 2 நாட்கள் மாநாடு நடைபெற இருக்கிறது.
இந்த மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கொரோனா காலத்திற்கு பிறகு சினிமா துறை மீண்டு வருகிறது. சென்னையில் இந்த மாநாடு நடைபெறுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நாட்டில் உள்ள முக்கிய தொழிலாக சினிமா விளங்குகிறது. பல குடும்பங்கள் பிழைக்கிறது. பொழுதுபோக்கு என சுருக்கி கூற முடியாது. நான் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்று 11 மாதங்கள் ஆகிறது. சில நாட்களுக்கு முன்னாள் தொழில் துறை முன்னேற்றத்திற்காக துபாய் அபுதாபி சென்றேன். நான் முதல்வராக கலந்து கொள்ளும் முதல் கலைத்துறை நிகழ்வு. முதல்வாராக இருந்தாலும் ஒரு காலத்தில் திரைப்படம் தயாரித்துள்ளேன். சிறிய வேடங்களில் நடித்துள்ளேன். எனவே இங்கு ஆர்வத்தோடு வந்துள்ளேன். முதல்வராக பார்க்காமல் உங்களில் ஒருவனாக பாருங்கள். திமுகவும் திரை துறையும் பிரிக்க முடியாது. அப்பா கலைஞர் முதல் எனது மகன் உதயநிதி வரை திரைத்துறையில் பங்கேற்றுள்ளோம். எனது குடும்பத்தையும் திரை துறையையும் பிரிக்க முடியாது. இணைய திரையரங்கம், செல்போன் திரையரங்கு வந்து விட்டது. திறமையானவர்கள் பாராட்டபட வேண்டும். சிறந்த படங்களுக்கு விருது வழங்க வேண்டும். நமக்கு நீண்ட வரலாறு உள்ளது. மன வளர்ச்சி, சிந்தனை வளர்ச்சியும் அவசியம். தென்னக திரைப்பட உலகம், இந்தியாவிற்கு வழிகாட்டியாக உள்ளது. திரைப்படத்துறையில் உள்கட்டமைப்பை மேம்படுத்த தமிழக அரசு தயாராக உள்ளது. அனைத்து உதவிகளும் தமிழக அரசின் சார்பில் செய்யப்படும்” என்று கூறினார்.
தென்னிந்திய ஊடக, பொழுதுபோக்கு மாநாட்டில் முதல்வர் உரை.. https://t.co/A5UHXNkdy1
— ABP Nadu (@abpnadu) April 9, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும், “புகை பிடிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது என திரைப்படத்திற்கு முன்பு ஒளிபரப்புவது பாராட்ட வேண்டியது. அதுபோல குட்கா, கஞ்சா அதிகமாகி வருவதால் அது குறித்த விழிப்புணர்வு வாசகம் இடம்பெற வேண்டும் என்கின்ற கோரிக்கை வைக்கிறேன். சமூகத்திற்கு பயனளிக்கும் வகையில் முற்போக்கான திரைப்படங்கள் எடுக்க வேண்டும்” என்றார்.