Hottest day : ஷ்ஷப்ப்பா...! என்னா வெயிலு..! 2022ஆம் ஆண்டின் மிகவும் வெப்பமான நாள் இன்றுதான்... எங்கு தெரியுமா?
2022ம் ஆண்டிலே சென்னையில் மிகவும் வெப்பமான நாளாக இன்றைய நாள் பதிவாகியுள்ளது. சென்னையின் பல பகுதிகளிலும் 38 டிகிரிக்கும் அதிகளவில் வெயில் பதிவாகியது.

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக, தலைநகர் சென்னையில் வெயிலின் கொடுமை மிகவும் அதிகளவில் உள்ளது. இந்த நிலையில், சென்னையில் இன்று 38 டிகிரி செல்சியஸ் வெயில் அளவு பதிவாகியுள்ளது. அதாவது, இந்தாண்டிலே சென்னையின் மிகவும் வெப்பமான நாளாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது. சென்னையின் பல படங்களிலும் 38 டிகிரிக்கும் அதிமான அளவு வெயில் பதிவாகியுள்ளது. மதுரையில் 39 டிகிரி செல்சியஸ் வெயிலும், திருச்சியில் 33 டிகிரி செல்சியஸ் வெயிலும் பதிவாகியுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
“ வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும், நாளையும் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 24-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று மற்றும் நாளை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்க்கூடும்.
வாத்தலை அணைக்கட்டு,. மோகனூர் பகுதியில் 6 செ.மீ. மழை பதிவாகியது. குறைந்தபட்சமாக அரூர், வேலூர், டேனிஷ்பேட்டை, கெட்டி, செங்கம், பஞ்சப்பட்டி, தருமபுரி, தேன்கனிக்கோட்டை, மேட்டூர், சமயபுரம், காட்பாடி, வாணியம்பாடி, பாப்பிரெட்டிபட்டி, திருமானூர் ஆகிய பகுதிகளில் குறைந்தபட்சமாக தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

நேற்று காலை வடக்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு திசையில் நகர்ந்து இன்று காலை 8.30 மணிக்கு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வடக்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல், அந்தமான் நிக்கோபார் தீவு- போர்ட் பிளேரில் இருந்து 420 கி.மி. தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது மேலும் வடக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று மதியம் மியான்மர் கடற்கரையை கடக்கக்கூடும்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















