Hindi Imposition: ரஹ்மானுக்கு ஆதரவு! இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு.. பாஜக தலைவர் அண்ணாமலை பேசிய வார்த்தைகள்!
இந்தியாவின் இணைப்பு மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்ற ஏ.ஆர்.ரஹ்மான் கருத்தை பாஜக வரவேற்கிறது.
இந்தி திணிப்பை தமிழ்நாடு பாஜக ஒருபோதும் அனுமதிக்காது என்றும், பாஜக இந்தி திணிப்பை விரும்பவில்லை எனவும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இந்தியாவின் இணைப்பு மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்ற ஏ.ஆர்.ரஹ்மான் கருத்தை பாஜக வரவேற்பதாகவும், தமிழ் மொழி இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என்பது பாஜகவை பொறுத்தவரை பெருமைக்குரிய ஒன்று எனவும் தெரிவித்துள்ளார்.
சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை, “2011ல் ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்த போது இந்தி இருக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. official language act அன்று கூறியது. எப்படி திமுக அமைதியாக இருந்தது. இந்தி பிரச்னை அங்கங்கே பார்த்து வருகிறோம். இந்தி திணிப்பை எந்த காரணம் கொண்டும் தமிழ்நாடு பாஜக அனுமதிக்காது என்பதை தீர்க்கமாக கூறுகிறோம். இந்தியாவின் இணைப்பு மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்ற ஏ.ஆர்.ரஹ்மான் கருத்தை பாஜக வரவேற்கிறது. ஆனால் அதை வளர்க்க என்ன செய்கிறோம் என்பதை நாம் பார்க்க வேண்டும். நான் இந்தி பேச மாட்டேன் இந்தியை கட்டாயம் திணிக்க மாட்டோம். பாஜக அதை செய்யாது. அமைச்சர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடியும் அதை விரும்பவில்லை. தமிழ் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என்றால், ஒவ்வொரு மாநில முதலமைச்சருக்கு கடிதம் எழுதி 10 பள்ளிகள் தமிழக அரசு நடத்த வேண்டும். அதை செய்தால் பாஜக அதை வரவேற்கும். முழு செலவையும் தமிழக அரசு ஏற்று கொள்ள வேண்டும். 1 முதல் 5ஆம் வகுப்பு வரை கட்டாயம் தமிழில் தான் படிக்க வேண்டும் என்று புதிய கல்வி கொள்கை கொண்டு வந்துள்ளோம்” என்றார்.
தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், “4, 5 நாட்களாக பல அரசியல் நிகழ்வுகள் குறித்து பேச உள்ளோம். காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆளும் போது CUCET 2010இல் கொண்டு வரப்பட்டது. நேற்று சட்டப்பேரவையில் ஒரு மனதாக மத்திய அரசை மட்டும் குறை சொல்வது எப்படி. இந்த தேர்வின் மூலம் வேறு மாநிலங்கள் சென்று படிக்கும் வாய்ப்பும் அமைந்துள்ளது. சிபிஎம் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், கேரளாவில் இந்திய பன்முக தன்மையை குலைப்பதாக பேசியுள்ளார். திட்டகுழுவுக்கு பதில் நித்தி ஆயோக் கொண்டு வந்துள்ளது. இதில் எந்த பன்முக தன்மை குறைந்துள்ளது என்று முதல்வர் சொல்கிறார் என்று தெரியவில்லை. கடந்த 8 ஆண்டுகளில் மத்திய அரசு எத்தனை மாநிலத்தில் ஆட்சியை கலைத்தது என்று முதல்வர் ? சொல்ல வேண்டும் ?. பெட்ரோல் விலை உயர்வு குறித்து முதல்வர் செல்லும் இடம் எல்லாம் பேசுகிறார். ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.100.94 என தமிழகத்தில் உள்ளது. அதில் 18.31 மாநில அரசுக்கு வருவாய் வருகிறது. ஏன் தமிழக அரசு வாட் வரியை குறைக்கவில்லை ?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்