மேலும் அறிய

ABP நாடு Exclusive: தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை- சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தகவல்!

நிபா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக தமிழ்நாடு - கேரளா எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த, அம்மாநிலத்தை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் 12 வயது சிறுவன் நிபா வைரஸ் உயிரிழந்தார். நிபா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக தமிழ்நாடு - கேரளா  எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த, அம்மாநிலத்தை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கோவை மாவட்டத்தில் கேரளா மாநில எல்லையில் உள்ள வாளையாறு, வேலந்தாவலம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட 13 சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சோதனைச் சாவடிகளில் கூடுதல் பணியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கேரள மாநிலத்தின் முக்கிய நுழைவாயிலாக உள்ள வாளையாறு சோதனைச் சாவடியில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

நிபா வைரஸ், ஜிகா வைரஸ் மற்றும் கொரோனா பாதிப்பு கேரளாவில் கண்டறியப்படுவதால் மாவட்ட எல்லையில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து கோவை வருவோரிடம் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது தடுப்பூசி இரண்டு தவணைகள் செலுத்திய சான்றிதழ் இருந்தால் மட்டுமே தமிழ்நாட்டிற்குள் நுழைய அனுமதி வழங்கப்படுகிறது. அச்சான்றிதழ்கள் இல்லாதவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். கோவை மாவட்டத்திற்கு வருவோரின் வாகன எண்கள் பதிவு செய்யப்படுகிறது. வாளையாறில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் சமீரன், வாகன சோதனைகளை கடுமையாக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

ABP நாடு Exclusive: தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை- சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தகவல்!

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறும் போது, ”கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் 12 வயது சிறுவன் நிபா வைரஸ் உயிரிழந்தான். இதன் காரணமாக எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து கோவைக்கு 13 வழிகள் உள்ளது. அந்த வழிகள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆய்வில் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது இரண்டு தவணை தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும். உடல் வெப்பநிலை சோதனையும் நடத்தி வருகிறோம். நிபா வைரசை பொருத்தவரை கேரளாவில் ஒருவருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அரசு மருத்துவமனைகளில் அனைத்து வகை காய்ச்சல் நோயாளிகளையும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்” என அவர் தெரிவித்தார்.

சுல்தான்பேட்டை பகுதியில் 3 அரசுப் பள்ளி மாணவர்கள் கொரோனா நோய்த் தொற்று பரவிய சம்பவம் குறித்த கேள்விக்கு, ”பள்ளிக்கூடங்கள் அனைத்தும் கிருமிநாசினி தெளிக்கன்பட்டு, தனிமனித  இடைவெளியுடன் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டால் தனிமைப்படுத்தி,  சிறந்த முறையில் சிகிச்சை கொடுத்து வருகிறோம். யாரும் அச்சப்பட வேண்டாம். கோவையைப் பொருத்தவரை 83 கிலோ லிட்டர் ஆக்சிஜன் தயார் நிலையில் உள்ளது. கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகளும் போடப்பட்டுள்ளது. மூன்றாவது அலைக்கு செல்லாமல் இருக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்” என்றார். 

இதனிடையே தமிழ்நாட்டில் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக சில செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டன. இது தொடர்பாக ஏபிபி நாடுசெய்தி நிறுவனத்திடம் பேசிய சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், “தமிழ்நாட்டில் இதுவரை நிபா வைரஸ் தொற்று யாருக்கும் ஏற்படவில்லை. வதந்திகளை நம்ப வேண்டாம்” என அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PMK ADMK alliance: அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
திமுக அமைச்சர் ஒருவரையும் விட்டுவிடக்கூடாது.! இபிஎஸ் திடீர் டெல்லி பயணம்.. அலறும் ஆளுங்கட்சி
திமுக அமைச்சர் ஒருவரையும் விட்டுவிடக்கூடாது.! இபிஎஸ் திடீர் டெல்லி பயணம்.. அலறும் ஆளுங்கட்சி
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
’’அரசு ஊழியர்களே முழிச்சுக்கோங்க; 3ஆம் நாளிலேயே பல்லிளித்த தமிழ்நாடு ஓய்வூதியத் திட்டம்’’- அன்புமணி எச்சரிக்கை
’’அரசு ஊழியர்களே முழிச்சுக்கோங்க; 3ஆம் நாளிலேயே பல்லிளித்த தமிழ்நாடு ஓய்வூதியத் திட்டம்’’- அன்புமணி எச்சரிக்கை
ABP Premium

வீடியோ

America Vs Venezuela
2026-ல் CM ஆவாரா விஜய்? பிரபல ஜோதிடரே சொல்லிட்டாரு இவர் கணிச்சா தப்பாது! | Astrologer Prashanth Kini On Vijay
தங்கத்தை ஓரம் கட்டிய வெள்ளி இனிமே லட்சத்தில் லாபம் பின்னணியில் CHINA, ENGLAND | Silver Price Hike Reason
Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK ADMK alliance: அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
அன்புமணி பாமகவிற்கு எத்தனை தொகுதி.? இபிஎஸ் போட்ட லிஸ்ட்.! ராமதாஸ் எடுத்த திடீர் முடிவு
திமுக அமைச்சர் ஒருவரையும் விட்டுவிடக்கூடாது.! இபிஎஸ் திடீர் டெல்லி பயணம்.. அலறும் ஆளுங்கட்சி
திமுக அமைச்சர் ஒருவரையும் விட்டுவிடக்கூடாது.! இபிஎஸ் திடீர் டெல்லி பயணம்.. அலறும் ஆளுங்கட்சி
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
’’அரசு ஊழியர்களே முழிச்சுக்கோங்க; 3ஆம் நாளிலேயே பல்லிளித்த தமிழ்நாடு ஓய்வூதியத் திட்டம்’’- அன்புமணி எச்சரிக்கை
’’அரசு ஊழியர்களே முழிச்சுக்கோங்க; 3ஆம் நாளிலேயே பல்லிளித்த தமிழ்நாடு ஓய்வூதியத் திட்டம்’’- அன்புமணி எச்சரிக்கை
Top 10 News Headlines: திண்டுக்கல்லில் ஸ்டாலின், நில்லாமல் ஏறும் தங்கம் விலை, மீண்டும் ISL- 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: திண்டுக்கல்லில் ஸ்டாலின், நில்லாமல் ஏறும் தங்கம் விலை, மீண்டும் ISL- 11 மணி வரை இன்று
ICC BCB: ”இந்தியாவில் விளையாடுங்க, இல்லைன்னா கிளம்புங்க” - வங்கதேசத்திற்கு ஷாக் தந்த ஐசிசி - ரிப்போர்ட்
ICC BCB: ”இந்தியாவில் விளையாடுங்க, இல்லைன்னா கிளம்புங்க” - வங்கதேசத்திற்கு ஷாக் தந்த ஐசிசி - ரிப்போர்ட்
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
Trump: வேலையை காட்டிய ட்ரம்ப்..! 5 கோடி பேரல் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு அனுப்புங்க - வெனிசுலாவிற்கு உத்தரவு
மீண்டும் அதிமுகவுடன் கை கோர்த்த அன்புமணி.! திமுகவிற்கு டஃப் கொடுக்க இபிஎஸ் போட்ட செம திட்டம்
மீண்டும் அதிமுகவுடன் கை கோர்த்த அன்புமணி.! திமுகவிற்கு டஃப் கொடுக்க இபிஎஸ் போட்ட செம திட்டம்
Embed widget