நடிகர் சிவகார்த்திகேயனின் அப்பா கொல்லப்பட்டாரா? ஹெச்.ராஜா சர்ச்சை பேச்சு

அல் உம்மாவின் ஆள்தான் இன்று பாபநாசம் எம்.எல்.ஏ என ஜவஹிருல்லா எம்.எல்.ஏவைக் குறித்து பேசியிருக்கிறார் ஹெச்.ராஜா.

FOLLOW US: 

தமிழ் திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்டவர் சிவகார்த்தியேகன். தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து நடிகராக உயர்ந்தவர். இந்நிலையில் எந்தவித காரணமும் இன்றி சிவகார்த்திகேயன் குறித்தும் அவரது தந்தை குறித்தும் பாஜக தேசியச் செயலாளராக இருந்த ஹெச்.ராஜா பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்து அறநிலையத்துறையின் கீழ் முறைகேடுகள் இருக்கிறது என்று குற்றம்சாட்டி செய்தியாளர்களிடம் பேசியுள்ள பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜா, ”இந்து அறநிலையத்துறையின் கீழ் இருக்கும் கோவில்களின் மனைக்கட்டுகளில் விஸ்தீரணம் 28 கோடி சதுர அடி இருக்கும். மலர் மருத்துவமனைக்கு எதிரில் இருக்கும் அருணாசலபுரத்தில் கோவில் நில ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற முறைகேடுகளைத் தட்டிக்கேட்டால், பழனிவேல் தியாகராஜன் சத்குருவை மிரட்டுகிறார். பக்கத்தில் இருக்கும் காருண்யாவைப் பற்றி பேச எந்த மந்திரிக்காவது முதுகெலும்பு இருக்கிறதா? ஜெயிலர் ஜெயப்பிரகாஷை கொன்ற அல் உம்மாவின் ஆள்தான் இன்று பாபநாசம் எம்.எல்.ஏ என ஜவஹிருல்லா எம்.எல்.ஏவைக் குறித்து பேசியிருக்கிறார் ஹெச்.ராஜா. நடிகர் சிவகார்த்திகேயனின் அப்பா கொல்லப்பட்டாரா? ஹெச்.ராஜா சர்ச்சை பேச்சு

மேலும், பொட்டு வைத்தவன் எல்லாம் இந்துவா என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சாடியுள்ள ஹெச்.ராஜா, வெளிநாட்டினரைத் திருமணம் செய்ததால் அவர் தமிழர் இல்லை என்று பேசியிருக்கிறார். பி.டி.ஆர் போன்ற ஞானமில்லாதவர்கள் எங்கள் மதப்பிரச்சனைகளில் தலையிடாதீர்கள். தமிழக அரசு கோவில் சொத்துக்களை பொதுவில் அறிவிப்பதாக சொல்லியிருக்கும் தீர்மானத்தை வரவேற்கிறேன். ஆனால் அது சரியாக செய்யவேண்டும் என்பதுதான் முக்கியம் என்று பேசியிருக்கிறார்.

ஹெச்.ராஜா பேசியுள்ளது குறித்து விசாரிக்கையில் சிவகார்த்தியேகனின் அப்பா பெயர் தாஸ் என்பதும் அவர் ஜெயிலராக இருந்தார் என்பதும் தெரியவருகிறது. ஹெ.ராஜா சொல்வது போல் சிவாவின் அப்பா பெயர் ஜெயபிரகாஷ் இல்லை,  மேலும் கொல்லப்பட்ட ஜெயப்பிரகாஷ் துணை ஜெயிலராக இருந்தவர். 

பாபநாசம் எம்.எல்.ஏ. தான் ஜெயபிரகாஷை கொன்றார் என ஹெச்.ராஜா பேசியுள்ளது குறித்து எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லாவிடம் கேட்டபோது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர உள்ளதாக கூறினார். 

 முன்னதாக, ஈஷா குறித்து அறிக்கை வெளியிட்ட பழனிவேல் தியாகராஜன் “

ஜக்கி வாசுதேவ் மீது விசாரணை அல்லது வழக்கு தொடர்வது என் கடமையும் அல்ல, எனது நோக்கம் அல்ல. நான் நிச்சயமாக சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுடனும் பகிர்ந்து கொள்ளவுள்ள சான்றுகளின் அடிப்படையில், ஜக்கி வாசுதேவ் பல சட்டங்களையும் விதிகளையும் ஒவ்வொரு முறையும், தொடர்ச்சியாகவும் மீறியுள்ளார் என்பது அனைத்து சந்தேகங்களுக்கும் அப்பாற்பட்டது என்பதை உணர்த்தும். எனினும், இந்திய & அமெரிக்காவில் உள்ள சம்மந்தப்பட்ட துறைகளும் அது சார்ந்த அதிகாரிகளும் எவ்வித இடையூறும் (அது என்னுடையதாக இருந்தாலும்) இன்றி இதுகுறித்து தீர விசாரிக்க வேண்டும். மேலும் இவரைக் குறித்து புது தகவல்களோ நிகழ்வுகளோ எழும் வரையில் இதைப் பற்றி நான் வேறு எந்த கருத்தையும் இனி தெரிவிக்கப்போவதில்லை’ எனக் குறிப்பிட்டுள்ளார். 

Tags: mk stalin H Raja sadhguru jaggi vasudev ptr Hindu Palanivel Thiyagarajan

தொடர்புடைய செய்திகள்

Tamil Nadu Coronavirus LIVE News : 11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படுமா? இன்று முதல்வர் ஆலோசனை

Tamil Nadu Coronavirus LIVE News : 11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படுமா? இன்று முதல்வர் ஆலோசனை

Tamil Nadu Lockdown: தமிழ்நாட்டில் பஸ்கள் இயக்க வாய்ப்பு? ஊரடங்கு தொடர்பாக முதல்வர் இன்று ஆலோசனை!

Tamil Nadu Lockdown: தமிழ்நாட்டில் பஸ்கள் இயக்க வாய்ப்பு? ஊரடங்கு தொடர்பாக முதல்வர் இன்று ஆலோசனை!

ஸ்மார்ட் வகுப்புகள் முதல் விவசாயம் வரை : தனியார் பள்ளிகளுக்கு டஃப் கொடுக்கும் ராமசாணிகுப்பம் அரசுப்பள்ளி..!

ஸ்மார்ட் வகுப்புகள் முதல் விவசாயம் வரை : தனியார் பள்ளிகளுக்கு டஃப் கொடுக்கும் ராமசாணிகுப்பம் அரசுப்பள்ளி..!

Sivashankar Baba | மேல்சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் குற்றம்சாட்டப்பட்ட சிவசங்கர்..!

Sivashankar Baba | மேல்சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் குற்றம்சாட்டப்பட்ட சிவசங்கர்..!

கரூர் : குறைகிறதா கொரோனா தொற்று? தடுப்பூசி பணிகளின் நிலவரம் என்ன?

கரூர் : குறைகிறதா கொரோனா தொற்று? தடுப்பூசி பணிகளின் நிலவரம் என்ன?

டாப் நியூஸ்

Rahul Gandhi Birthday: கனிவு... பணிவு... துணிவு! நம்பிக்‛கை’ நாயகன் ராகுல் காந்தி!

Rahul Gandhi Birthday: கனிவு... பணிவு... துணிவு! நம்பிக்‛கை’ நாயகன் ராகுல் காந்தி!

Milka Singh Passes away: 'பறக்கும் சீக்கியர்' மில்கா சிங் எனும் சகாப்தம் !

Milka Singh Passes away: 'பறக்கும் சீக்கியர்' மில்கா சிங் எனும் சகாப்தம் !

‛வேலைக்கு போகச் சொன்னது குத்தமா...’ குடும்பத்தையே ‛குளோஸ்’ செய்த கொடூர இளைஞர்!

‛வேலைக்கு போகச் சொன்னது குத்தமா...’ குடும்பத்தையே ‛குளோஸ்’ செய்த கொடூர இளைஞர்!

என்னது ஏரோபிளேன் ‛ஸ்கிட்’ ஆச்சா... நம்ம ஊரு ரோடு பரவாயில்லையே!

என்னது ஏரோபிளேன் ‛ஸ்கிட்’ ஆச்சா... நம்ம ஊரு ரோடு பரவாயில்லையே!