குடைக்குள் குருக்கள்...வெயிலில் இருந்து தப்பிக்க நல்ல ஐடியா - கரூரில் சுற்றும் ஸ்கூட்டி
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் மதிய வேலைகளில் வெளியில் செல்ல முடியாத அளவுக்கு வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்தது. பேருந்து மற்றும் வாகனங்களில் செல்லும்போது சாலையில் அனல் காற்று வீசுகிறது.
சின்னதாராபுரம் பகுதியில் வாகனத்தில் வெயில் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள நிழல் குடை உடன் குருக்கள் ஒருவர் சுற்றி வருவது பொது மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல், மே ஆகிய மாதங்கள் கோடைகாலமாக ஆண்டுதோறும் கருதப்படுகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கோடை வெயில் கடுமையானது கோடை வெயிலின் உச்சம் அக்னி நட்சத்திரம் என அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த நான்காம் தேதி துவங்கி 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திலேயே அதிக வெப்பம் காணப்பட்டது குறிப்பாக 100 டிகிரி முதல் 108 டிகிரி பரன்ஹீட் வரை வெயில் வாட்டி வதைத்தது. இதனால் மக்கள் கோடை மற்றும் அக்கினி வெயில் தங்க முடியாமல் அவதிப்பட்டனர்.
இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் மதிய வேலைகளில் வெளியில் செல்ல முடியாத அளவுக்கு வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்தது. இதனால் பேருந்து மற்றும் வாகனங்களில் செல்லும்போது சாலையில் அனல் காற்று வீசுகிறது.
அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் மதிய வேலைகளில் ரோட்டில் ஆள் நடமாட்டம் சற்று குறைந்தே காணப்பட்டு வந்த நிலையில் கரூர் மாவட்டம் சின்னத்தாராபுரம் பகுதியில் விநாயகர் கோவில் அர்ச்சராக உள்ள பாபு குருக்கள் புதுமையான வழியில் தனது இரு சக்கர வாகனத்திற்கு நிழலுக்கு குடை அமைத்து செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று திரும்புவது அப்பகுதி வழியாக வலம் வருவது. பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்