மேலும் அறிய

தஞ்சையில் பிறந்து 4 நாட்களேயான குழந்தை கடத்தல் - கட்டைப்பையில் கடத்தி செல்லும் சிசிடிவி வெளியானது

’’அதே வார்டில் இருந்த ஒரு பெண் ஒருவர், ராஜலெட்மிக்கு, என்ன உதவி வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள்,  உன் அம்மா போல் நினைத்துக்கொள், நான் பார்த்துக்கொள்கிறேன் என கூறி உதவிசெய்து வந்துள்ளார்’’

தஞ்சாவூர், பர்மாகாலனியை சேர்ந்தவர் குணசேகரன் (24) டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது  மனைவி ராஜலட்சுமி (22).  இவர்களுக்கு கடந்த ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ராஜலட்சுமிக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை குடும்பத்தினர் தஞ்சாவூர் ராசா மிராசுதாரர் அரசு மருத்துவனையில் சேர்த்தனர். அன்றைய தினம் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் ராஜலட்சுமி குழந்தை பிறக்கும் மாடியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ராஜலெட்சுமி-குணசேகரன் இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள், உறவினர்கள் அதிகமாக வரமாட்டார்கள் என்று தெரிந்து கொண்டு, அதே வார்டில் இருந்த ஒரு பெண் ஒருவர், ராஜலெட்மிக்கு, என்ன உதவி வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள்,  உன் அம்மா போல் நினைத்துக்கொள், நான் பார்த்துக்கொள்கிறேன் என கூறி உதவிசெய்து வந்துள்ளார். இதனை நம்பி, கடந்த 4 நாட்களாகவே ராஜலட்சுமி, சில உதவிகளை கேட்டதால், முகம் சுளிக்காமல் அப்பெண் செய்து வந்துள்ளார்.  அதன் பிறகு அந்த பெண் மீது ராஜலட்சுமி நம்பிக்கை வைத்திருந்தார்.

தஞ்சையில் பிறந்து 4 நாட்களேயான குழந்தை கடத்தல் - கட்டைப்பையில் கடத்தி செல்லும் சிசிடிவி வெளியானது

காலை அந்த பெண் ராஜலட்சுமியிடம் நீங்கள் குளித்து விட்டு வாருங்கள், நான் கைக்குழந்தையை ஜாக்கிரதையாக பார்த்து கொள்கிறேன் என்றும், விரைவில் வந்து விடு என்ற கூறி அனுப்பியுள்ளார். தாய் போல் பார்த்துக்கொள்கின்றாரே என்று நம்பிக்கையுடன் ராஜலட்சுமி, குழந்தையை, அப்பெண்ணின் கையில் கொடுத்து விட்டு குளிக்க சென்றார். ராஜலெட்சுமி, சென்றவுடன், சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு, அப்பெண் பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளங் பெண் கைக்குழந்தையை கட்டைபையில் வைத்து, சந்தேகம் ஏற்படாத வகையில், குழந்தைய  கடத்தி கொண்டு வேகமாக நடந்து  சென்றார். இதற்கிடையே குளிக்க சென்று விட்டு வார்டுக்குள் வந்த ராஜலட்சுமி தனது குழந்தை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். அலறி அடித்த கொண்டு, பதறியபடி, தனது குழந்தையையும், அப்பெண்ணையும், பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து உடனடியாக தனது கணவர் குணசேகரனுக்கு தகவல் தெரிவித்தார்.

தஞ்சையில் பிறந்து 4 நாட்களேயான குழந்தை கடத்தல் - கட்டைப்பையில் கடத்தி செல்லும் சிசிடிவி வெளியானது

இதை கேட்டு அதிர்ச்சியடைந்து, குணசேகரன், மற்றும் குடும்பத்தினர் மருத்துவமனையில் திரண்டனர். பக்கத்து வார்டில் உள்ளவர்கள் உள்ளிட்ட அனைவரிடம்  விசாரித்தனர். ஆனால் குழந்தையின் நிலை தெரியவில்லை.  அதன் பிறக அப்பெண்ணை பற்றி விசாரித்த போத, அவர் யார், என்ன ஊர் என்று தெரியவில்லை. அப்போது தான் ராஜலட்சுமிக்கு அந்த பெண் மீது சந்தேகம் ஏற்பட்டது.  பின்னர் ராஜலெட்சுமி, நடந்தவற்றை கணவர் குணசேகரனிடம் கூறி, தஞ்சாவூர்  மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தஞ்சாவூர் நகர டிஎஸ்பி கபிலன் மற்றும் போலீசார் மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினர்.

தஞ்சையில் பிறந்து 4 நாட்களேயான குழந்தை கடத்தல் - கட்டைப்பையில் கடத்தி செல்லும் சிசிடிவி வெளியானது

அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்தபோது பெண் கட்டைபையில்  குழந்தையை தூக்கி கொண்டு, சிகப்பு கலர் சேலையில், பச்சை கட்டப்பையில் குழந்தையை கடத்தி சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தது. அதன்  அடிப்படையில் போலீசார் அந்த பெண்ணை தேடி வருகின்றனர். மேலும் நகர் முழுவதும் தகவல் கொடுத்து அந்த பெண் பற்றிய அடையாளங்களை கூறி தேடி வருகின்றனர். குடும்ப கஷ்டத்தோடு, 10 மாதம் சுமந்து பெற்றெடுத்த நான்கு நாட்களே ஆன பெண் கைக்குழந்தையை கடத்தி சென்றதால், பிரசவித்த தாய் கதறி அழுதது அப்பகுதியிலுள்ளவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "கூட்டணி தேவைக்கு சொல்றவங்க கூத்து.." விஜய்யை விளாசித் தள்ளிய சீமான்
AFG vs ENG:
AFG vs ENG: "ஆப்பு ஸ்பெஷலிஸ்ட் ஆப்கானிஸ்தான்.." ஐசிசி வரலாற்றை பாருங்க ஜி..!
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
Rasipalan Today: இன்றைய நாள் எப்படி இருக்கும்? உங்களுக்கான ராசிபலன் இங்கே!
Rasipalan Today: இன்றைய நாள் எப்படி இருக்கும்? உங்களுக்கான ராசிபலன் இங்கே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "கூட்டணி தேவைக்கு சொல்றவங்க கூத்து.." விஜய்யை விளாசித் தள்ளிய சீமான்
AFG vs ENG:
AFG vs ENG: "ஆப்பு ஸ்பெஷலிஸ்ட் ஆப்கானிஸ்தான்.." ஐசிசி வரலாற்றை பாருங்க ஜி..!
"ஒரு சீட்டு கூட குறையாது.. கவலைப்படாதீங்க" தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்த அமித் ஷா!
Rasipalan Today: இன்றைய நாள் எப்படி இருக்கும்? உங்களுக்கான ராசிபலன் இங்கே!
Rasipalan Today: இன்றைய நாள் எப்படி இருக்கும்? உங்களுக்கான ராசிபலன் இங்கே!
Today Power Shutdown Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 27.02.25 ) மின்தடை ஏற்படும் இடங்கள்
Today Power Shutdown Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 27.02.25 ) மின்தடை ஏற்படும் இடங்கள்
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
இதுதான் கடைசி IPL! ஓய்வு பெறுகிறாரா தோனி? தனது பாணியில் சொன்ன மெசேஜ்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay: அண்ணா, எம்ஜிஆர் வழியில் ஆட்சியைப் பிடிப்பேன்; வரலாறு படைப்பேன்- சூளுரைத்த தவெக தலைவர் விஜய்!
TVK Vijay:
TVK Vijay: "LKG - UKG பசங்க மாதிரி சண்டை போட்டுக்குறாங்க.." திமுக, பாஜக-வை விளாசிய விஜய் - ஏன்?
Embed widget