மேலும் அறிய

Ponn Manickavel : "கைதாகிறாரா பொன் மாணிக்கவேல்” உயர்நீதிமன்றத்தில் சிபிஐ சொன்ன அதிர்ச்சி தகவல்..!

”சிலை கடத்தல் வழக்கில் புதிய திருப்பம்: சிலை கடத்தல் வழக்கில் பொன்மாணிக்கவேலை கைது செய்து விசாரித்தால் தான் உண்மை தெரிய வரும்” - சிபிஐ

டிஎஸ்பி மீதான கடத்தல் புகார்

தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் சிலைகள் காணாமல் போனதாக கடந்த 2010 ஆண்டு  முதல் புகார்கள் எழுந்து வந்தது. இந்த புகாரின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு  நியமனம் செய்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து சிலைகளை மீட்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. அதன்படி  சிலைகடத்தல் தடுப்பு பிரிவு உருவாக்கப்பட்டு அப்போது டிஎஸ்பியாக இருந்த காதர் பாஷா இந்த வழக்கை விசாரணை செய்து  கடத்தல் மன்னன் என்று சொல்லக்கூடிய சுபாஷ் கபூர் என்பவரை இந்த வழக்கில் சேர்த்து விசாரணையானது நடந்து வந்தது. அதன்பின்னர்  சிறப்பு சிலை தடுப்பு ஐஜி பொன்மாணிக்கவேல்  தலைமையில் விசாரணை செய்ய  உத்தரவிட்டது.  அப்போது பல கோடி மதிப்புள்ள சாமி சிலைகளை சர்வதேச கடத்தல்காரர்களுடன் இணைந்து கடத்தியதாக முன்னாள் திருவள்ளூர் மாவட்ட டிஎஸ்பி காதர் பாஷா மீது புகார் எழுந்தது. இந்த சம்பவத்தில் காதர் பாஷா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டு:

அதன்பின்னர் முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் மீது காதர் பாஷா பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். குறிப்பாக குற்றவாளியை தப்பிக்க வைக்க தான் தன் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக காதர் பாஷா முன்னாள் காவல்துறை முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் மீது வழக்கு தொடர்ந்தார். அதனடிப்படையில் சிபிஐ கடந்த மாதம் பொன்மாணிக்கவேலுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது. அதனடிப்படையில் அவர் மீது முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்தது சிபிஐ.  இந்த நிலையில் தான் சிலை கடத்தல் வழக்கில் தன் மீது சிபிஐ  பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்  ஜாமின் கோரி முன்னாள் IG பொன்மாணிக்கவேல் மனு தாக்கல் செய்திருந்தார். 

முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல்:

அதில், "நீதிமன்றம் சிலை கடத்தல் வழக்கை டிஐஜி தரத்திற்கு குறையாத அலுவலரைக் கொண்டு, விசாரணை மேற்கொண்டு, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தது. ஆனால் சிபிஐயின் காவல் கண்காணிப்பாளர் வழக்கு பதிவு செய்துள்ளார். அதற்கு  அவருக்கு அதிகாரம் இல்லை. அவ்வாறு இருக்கையில் அவர் வழக்கு பதிவு செய்தது ஏற்கத்தக்கது அல்ல. சட்டவிரோதமானது. தவறு செய்ததாக அறிக்கை அளிக்கப்பட்டால் விசாரணை நீதிமன்றம் முடிவு செய்யும். சிபிஐ எனது வீட்டில் நுழைந்து பொருட்களை கைப்பற்றியது சட்டவிரோதமானது. இது என் மீதான நன்மதிப்பை குலைக்கும் விதமாக உள்ளது. ஆகவே இந்த வழக்கில் எனக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி பாரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மனுதாரர் முன்னாள் காவல்துறை மண்டல தலைவராகவும் சிலை கடத்தல் வழக்கை நீதிமன்ற உத்தரவின்படி நீதிமன்ற கண்காணிப்பில் நடத்தியுள்ளார் தற்போது இவர் மீது சிபிஐ பொய்யான ஒரு குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் மனுதாரருக்கு எந்தவித மகாந்திரமும் இல்லை எனவே தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார்.

முன் ஜாமீனுக்கு கடும் எதிர்ப்பு:

டிஎஸ்பி காதர் பாட்சா தரப்பில் பொன்மாணிக்கவேலுக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. முன்னாள் டிஎஸ்பி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரமேஷ் வாதிடுகையில் பொன்மாணிக்கவேல் இந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் விசாரணை ஒருதலைபட்சமாக நடந்ததாகவும், காதல் பாட்ஷா மீது வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சிறையில் அடைத்ததாகவும் அதே நிலையில் உள்ள மற்ற காவலர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளார். மேலும் சுபாஷ் கபூர் ஆகியோரை பாதுகாக்கும் விதத்திலும் செயல்பட்டு உள்ளார். எனவே இவருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிட்டார்.

முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் மீதான புகாரில் சிபிஐ அதிரடி:

இந்த வழக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு தமிழகத்தில் இருந்து சிலைகள் கடத்தப்பட்டு பல்வேறு நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை நீதிமன்றம் கண்காணிப்பில் டிஎஸ்பி காதர் பாட்சா விசாரித்து வந்த நிலையில் இந்த வழக்கை அப்போதைய காவல் அதிகாரி பொன் மாணிக்கவேல் விசாரணைக்கு எடுத்து விசாரணை நடத்தி வந்தார். இந்த வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லை. இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை காப்பாற்றும் வகையிலும், விசாரணை அதிகாரியாக இருந்த காதர் பாட்ஷா மீது பொய்யான குற்றச்சாட்டை வைத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளார். குறிப்பாக சிலை கடத்தல் மன்னனாக இருந்த சுபாஷ் கபூர் தற்போது தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை பாதுகாக்கும் வகையில் பொன் மாணிக்கவேல் செயல்பட்டு உள்ளார். இதன் அடிப்படையில் வந்த புகாரின் அடிப்படையில் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும் முதல் கட்ட விசாரணை முடித்து பொன்மாணிக்கவேல் மீது போதிய முகாந்திரம் இருந்ததன் அடிப்படையிலேயே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இவரை கைது செய்து விசாரணை நடத்தினால்தான் உண்மையை கண்டறிய முடியும்? ஏன் பொய்யாக டிஎஸ்பி காதர் பாட்சாவே இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்றும் சுபாஷ் கபூருக்கு எந்த வகையில் இவர் உதவி செய்தார் என்பதையும் முழுமையாக கண்டறிய முடியும். எனவே இவருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நீதிபதி கேள்வி:

இதனை பதிவு செய்த நீதிபதி இந்த வழக்கில் சுபாஷ் கபூருக்கு ஐஜி பொன்மாணிக்கவேல் நேரடியாக உதவி செய்ததற்கான ஏதேனும் ஆதாரங்கள் உள்ளதா என கேள்வி எழுப்பினர். அப்போது சிபிஐ தரப்பில் அதற்கான ஆவணங்களை சீல் இடப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். சீலிடப்பட்ட கவரில் உள்ள ஆவணங்களை படித்து பார்த்து வழக்கு விசாரணை தொடரலாம் என கூறிய நீதிபதி இந்த வழக்கு விசாரணை நாளை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார். 

தலைப்பு செய்திகள்

Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
மக்களே உஷார்! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றைய வானிலை இதுதான்!
மக்களே உஷார்! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றைய வானிலை இதுதான்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Embed widget